அஹ்னாப் இரகசியமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

0 412

அஹ்னாப் ஜசீமின் சட்­டத்­த­ர­ணிகள் அவ­ருக்குச் சார்­பாக வாதங்­களை முன்­வைப்­பதைத் தடுக்கும் நோக்கில், அவ­ரது குடும்­பத்தார் மற்றும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அறி­விக்­காமல் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் அவர் கடந்த வாரம் நீதி­மன்­றத்தில் முன்­நி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை விசனம் வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபையின் உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தில் இது தொடர்பில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

ஆசி­ரி­யரும் கவி­ஞ­ரு­மான அஹ்னாப் ஜசீம் எவ்­வித குற்­றச்­சாட்­டுக்­களும் ஏற்­றுக்­கொள்­ளத்­த­குந்த ஆதா­ரங்­க­ளு­மின்றி பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்டு சுமார் 400 நாட்­க­ளாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். அவ­ரது உடல் நலத்தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் மிக­மோ­ச­மா­கவும் மனி­தா­பி­மா­ன­மற்ற விதத்­திலும் அஹ்னாப் ஜசீம் நடத்­தப்­பட்­டி­ருக்­கிறார். இக்­கா­லப்­ப­கு­தியில் அவரை வற்­பு­றுத்தி பொய்­யான வாக்­கு­மூ­லத்தைப் பெறு­வ­தற்கும் அதி­கா­ரிகள் முயற்­சித்­துள்­ளனர்.

அஹ்னாப் ஜசீம் கைது­செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து சுமார் 10 மாதங்கள் வரையில் சட்ட உத­வியை நாடு­வ­தற்கு அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதன் பின்னர் சட்ட உத­வியைப் பெறு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்ட போதிலும் அவ­ருக்கும் அவ­ரது சட்­டத்­த­ர­ணிக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யாடல் அதி­கா­ரி­களால் பதி­வு­செய்­யப்­பட்­டது. அது­மாத்­தி­ர­மன்றி அஹ்னாப் ஜசீமின் குடும்­பத்­தி­னரும் சட்­டத்­த­ர­ணி­களும் அவரை உரிய தினங்­களில் அணு­கு­வ­தற்கும் தடை­யேற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் அஹ்னாப் ஜசீமின் சட்­டத்­த­ர­ணிகள் அவ­ருக்குச் சார்­பாக வாதங்­களை முன்­வைப்­பதைத் தடுக்கும் நோக்கில், அவ­ரது குடும்­பத்தார் மற்றும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அறி­விக்­காமல், அவர் கடந்த வாரம் நீதி­மன்­றத்தில் முன்­நி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார் என்று அப்­ப­திவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.