பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பாவிக்காதீர்

0 470

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தைத் தவ­றாகப் பாவித்து மக்­களை” வேட்­டை­யாடும்” ஆபத்தை நிறுத்­து­மாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அர­சாங்­கத்தை வேண்டிக் கொண்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, தமிழ் அர­சியல் கைதிகள் விடயம் குறித்தும், பயங்­க­ர­வாத தடை சட்டம் குறித்தும் அமைச்சர் நாமல் ராஜபக் ஷ அமைச்­ச­ரவை அறி­விப்­பொன்றை முன்­வைத்­தி­ருந்த நிலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது,

அமைச்சர் நாமல் ராஜ­பக்‌ஷ இங்கு குறிப்­பிட்ட ஒரு விட­யத்­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். உண்­மையில், சிறைச்­சா­லை­க­ளுக்குள் இடம்­பெ­று­கின்ற பாதிப்­புக்கள் ஒரு புற­மி­ருக்க, பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தைப் பாவித்து, அநே­க­மான முறை­கே­டுகள் நடை­பெ­று­கின்­றன. ஒரு பக்­கத்தில் அர­சி­யல்­வா­திகள் வேட்­டை­யா­டப்­ப­டு­கின்­றனர்,

மறு­பக்­கத்தில் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் போன்­ற­வர்­க­ளுக்கு நீண்­ட­கா­ல­மாக, பிணை வழங்­கப்­ப­டாமல், இப்­பொ­ழுது வழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு சாட்­சிகள் சோடிக்­கப்­பட்­டுள்­ளன. அது பற்றிக் கார­ணங்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன இவ்­வா­றி­ருக்க, ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் தொடர்­பான ஆணை­யாளர் இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை தவ­றாகப் பாவிப்­ப­தைப்­பற்றி பல குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்­தி­யுள்ளார். அதனால் எங்­க­ளுக்கு ஜீஎஸ்பீ நிவா­ரண உத­வியும் கிடைக்­காமல் போகும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அது பற்­றியும் கவனஞ் செலுத்­து­வ­தோடு, சிறைச்­சா­லை­க­ளுக்குள் இடம்­பெ­று­பவை நீதி­மன்­றங்­க­ளுக்குச் சென்ற வழக்­குகள் பற்­றி­ய­வை­யாகும்.

நீதி மன்­றத்­திற்குச் செல்­லாமல், நிர்­வாக ரீதி­யாக பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழும் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் கீழும், பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் கீழும் இவ்­வா­றாக கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அநேக அநீ­திகள் நடக்­கின்­றன.

இங்கே (நீதி)அமைச்­சரும் அமர்ந்­தி­ருக்­கின்றார்.

ஷானி அபே­சே­க­ரவின் பிணை மனு வழக்குத் தீர்ப்பைப் பார்க்­கும்­போது, அவ­ருக்குச் செய்த அநி­யா­யத்­திற்கு மேன் முறை­யீட்டு நீதி மன்றம் அர­சாங்­கத்தின் காது­களில் ஓங்கி அறைந்­தி­ருக்­கின்­றது.

சாட்­சி­களை புனைந்து, அவ­ருக்குச் செய்த நாச­கா­ரி­யத்­திற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அவ்­வா­றாக அர­சாங்­கத்தின் காது­களில் பல­மாக அறைந்­தி­ருக்­கி­றது.

இவற்றை கவ­னத்தில் எடுத்து, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முறை­கே­டாகப் பாவித்து இவ்­வாறு வேட்­டை­யா­டு­வதால் ஏற்­பட்­டுள்ள வில்­லங்­கத்­தை­யிட்டு மக்­களை இனி வரப்­போகும் ஆபத்­து­களில் இருந்து விடு­விக்­கு­மாறு அர­சாங்­கத்தை வேண்டிக் கொள்­கின்றேன் என்றார்.

இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ கூறு­கையில், ஈஸ்டர் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க மறுக்­கின்­றது என்­ப­தையே எதிர்க்­கட்சி உறுப்­பினர் ஹகீம் எப்­போதும் கூறுவார். ஆனால் நாம் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­விற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். தவறு செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­த­வுடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை பயன்­ப­டுத்தி தண்­டிக்­கிறோம் என குற்றம் சுமத்­து­கின்­றீர்கள். கர்­தி­னா­லிடம் சென்று வேறு ஒன்றை கூறு­கின்­றீர்கள். குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­த­வுடன் பயங்­க­ர­வா­தி­க­ளுக்­காக நியாயம் பேசு­கின்­றீர்கள். எதிர்­கட்­சியும், ஹக்­கீமும் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு துணை நிற்­கின்­றனர். ரவூப் ஹகீம் மூல­மாக அது தெளி­வாக வெளிப்­பட்­டு­விட்­டது. எதிர்க்­கட்சி தலைவர் இதனை ஏற்­றுக்­கொள்­கின்­றாரா. பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கற்­பித்­துள்ளார். அவ­ருக்­கான நீங்கள் துணை நிற்­பது நியா­யமா என்றார்.

இதன்­போது மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹகீம் எம்.பி :- அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆவேசமாக பேசுகின்றார். ஆனால் ஹிஸ்புல்லா அப்பாவி சட்டத்தரணி. சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியும் கூட. ஈஸ்டர் தாக்குதலை சாட்டாக வைத்துக்கொண்டு பாரிய சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் சட்டமா அதிபரும் கூறியுள்ளார். ஆகவே இவற்றை ஆராய்ந்து பாருங்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.