ஜனாஸா ஏற்றிச் சென்ற வாக­னத்­திற்கு பாது­காப்­ப­ளித்துச் சென்ற பொலிஸ் அதி­காரி விபத்தில் பலி

0 441

ஏ.ஆர்.ஏ.பரீல்

“முஸ்­லிம்கள் ஏனைய மதத்­த­வர்­களை தங்­க­ளது சகோ­த­ரர்­க­ளா­கவே கரு­து­கி­றார்கள். அவர்­களின் துன்­பத்தில் பங்கு கொள்­கி­றார்கள். எமது சமூ­கத்தின் ஜனா­ஸா­வுக்கு மெய்க்­கா­வ­ல­ராக சென்ற உதவி பொலிஸ் பரி­சோ­தகர் விபத்தில் பலி­யான சோகத்தில் ஹட்டன் முஸ்­லிம்கள் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். ஹட்டன் ‘சமா­தான நகரம்’ என்று பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது. இங்கு நாம் ஏனைய சமூ­கத்­தி­ன­ருடன் கைகோர்த்து நல்­லு­ற­வுடன் வாழ்­கிறோம். விபத்தில் பலி­யான உதவி பொலிஸ் பரி­சோ­த­கரின் குடும்­பத்­துக்கு நிதி­யு­தவி வழங்­கிய அனை­வ­ருக்கும் நன்­றிகள்“ என ஹட்டன் ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலை­வரும் அப்­பி­ர­தேச மரண விசா­ரணை அதி­கா­ரி­யு­மான ஏ.ஜே.எம்.பஸீர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

ஹட்­டனில் கொவிட் 19 வைரஸ் தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்த வயோ­திபப் பெண்­ம­ணியின் ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்­காக எடுத்துச் செல்­லப்­பட்­ட­போது ஜனா­ஸா­வுக்கு பாது­காப்­ப­ளித்துச் சென்ற வேன் விபத்­துக்­குள்­ளாகி 200 அடி பள்­ளத்தில் வீழ்ந்­ததால் மெய்க்­கா­வ­லுக்­காக சென்ற ஹட்டன் பொலிஸ் நிலை­யத்தின் சிறு முறைப்­பாட்டுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உதவி பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.பெனடிக்ட் (SI) ஸ்தலத்­தி­லேயே பலி­யானார்.

இந்த விபத்து கடந்த சனிக்­கி­ழமை 5ஆம் திகதி ஹட்டன், வட்­ட­வல கெரோ­லினா என்ற பகு­தியில் காலை வேளையில் இடம்­பெற்­றுள்­ளது. ஜனா­ஸாவை எடுத்துச் சென்ற வாக­னத்­துக்கு பாது­காப்பு வழங்கி முன்னால் சென்ற வேனே விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. விபத்­துக்­குள்­ளான வேனின் முன் ஆச­னத்தில் குறிப்­பிட்ட உப பொலிஸ் பரி­சோ­தகர் எஸ். பெனடிக்ட் பய­ணித்­துள்ளார். வேனில் மேலும் மூன்று பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் ஜனா­ஸாவின் பேரன்கள் இரு­வ­ரு­மாக மொத்தம் 6 பேர் சார­தியைத் தவிர பய­ணித்­துள்­ளனர்.

கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­தவர் ஹட்­ட­னி­லி­ருந்து 3 கிலோ மீற்றர் தூரத்­துக்கு அப்பால் நுவ­ரெ­லிய வீதியில் குடா­ஓயா எனும் இடத்தைச் சேர்ந்த நாகூர் உம்மா (79) வயது பெண்­ணாவார்.

திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரியும் ஹட்டன் ஜும்ஆ பள்­ளி­வாசல் தலை­வ­ரு­மான ஏ.ஜே.எம். பஸீர் தொடர்ந்தும் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில், ‘கடந்த 2ஆம் திகதி அதி­காலை 1.20 மணி­ய­ளவில் இந்த மர­ணச்­செய்தி எனக்கு அறி­விக்­கப்­பட்­டது. பொது சுகா­தார அதி­காரி மற்றும் பொலி­ஸா­ருடன் சென்று குறிப்­பிட்ட பெண்ணின் நோய் தொடர்பில் விசா­ரித்த போது சந்­தேகம் ஏற்­ப­டவே ஜனா­ஸாவை சுகா­தார வழி­காட்­ட­லின்­படி பொதி செய்து டிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கு பி.சி.ஆர். பரி­சோ­த­னைக்­காக அனுப்­பினோம். மறு­தினம் 3ஆம் திகதி பிற்­பகல் 3.30 மணி­ய­ளவில் கொவிட் 19 தொற்று உறுதி (பொசிடிவ்) செய்­யப்­பட்­டது.

கடந்த 5ஆம் திகதி ஜனாஸா டிக்­கோயா வைத்­தி­ய­சா­லையில் சீல்­பண்­ணப்­பட்டு, அங்கு ஜனாஸா தொழு­கையும் நடத்­தப்­பட்­டது. பின்பு நல்­ல­டக்­கத்­துக்­காக ஓட்­ட­மா­வ­டிக்கு கொண்டு செல்­வ­தற்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­னரே ஜனா­ஸா­வுக்கு பாது­காப்பு வழங்­கு­வது வழக்கம். இரா­ணு­வத்­தினர் இன்­மையால் ஹட்டன் பொலிஸார் ஜனா­ஸா­வுக்கு பாது­காப்பு வழங்கி ஜனாஸா வண்­டிக்கு முன்னால் பிறிதோர் வேனில் பய­ணித்­தனர்.

அன்று காலை 7.20 மணி­ய­ளவில் ஜனாஸா வண்­டியில் சென்ற உத­வி­யாளர் எனக்கு போன் பண்­ணினார். பாது­காப்­புக்கு வந்த வாகனம் ஹட்டன் கொழும்பு வீதி 7 கிலோ மீற்றர் தூரத்தில் வட்­ட­வல, கெரோ­லியா என்ற இடத்தில் விபத்­துக்­குள்­ளா­கி­விட்­ட­தாகக் கூறினார். நான் உடனே ஸ்தலத்­துக்குச் சென்றேன். காய­ம­டைந்­த­வர்கள் டிக்­கோயா வைத்­தி­ய­சா­லைக்கும், நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லைக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டார்கள். பின்பு டிக்­கோயா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வரும் நாவ­லப்­பட்டி வைத்­தி­ய­சா­லைக்கு இட­மாற்­றப்­பட்டார். அவர்கள் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­ப­டாது சிறு காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­ததால் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6 ஆம் திகதி வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டார்கள்.

சனிக்­கி­ழமை 5 ஆம் திகதி மாலை ஹட்டன் ஜும் ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை ஒன்று கூடி விபத்தில் பலி­யா­னவர் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யது. நிர்­வாக சபையின் ஆலோ­ச­கரும், ஹட்டன் – டிக்­கோயா நக­ர­ச­பையின் உதவித் தலை­வ­ரு­மான ஏ.ஜே.எம் பாமிஸின் ஆலோ­ச­னைக்­க­மைய பலி­யான பொலிஸ் பரி­சோ­த­கரின் குடும்­பத்­துக்கு நிதி­யு­தவி வழங்­கு­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஹட்டன் ஜமா­அத்­தார்­களை தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு நிதி சேக­ரிக்­கப்­பட்­டது. 3 இலட்ச ரூபா சேக­ரிக்­கப்­பட்­டது.

அன்­றைய தினமே ஹட்டன் பிரி­வுக்குப் பொறுப்­பான எஸ்.எஸ்.பி. விஜித டி அல்­விஸை சந்­தித்து உதவி வழங்­கு­வது பற்றி தெரி­வித்தோம். அவர் விபத்தில் பலி­யான பொலிஸ் பரி­சோ­த­கரின் குடும்­பத்­தினை சந்­திப்­ப­தற்கு ஏற்­பாட செய்தார். ஹட்டன் ஏ.எஸ்.பி. – எஸ்.டி.எம். பாரூக் எம்­முடன் இணைந்து கொண்டார். நானும், செய­லாளர், பொரு­ளாளர் என்போர் கேகா­லை­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்குச் சென்று 3 இலட்சம் ரூபா நிதி­யு­த­வி­யினை வழங்­கினோம்.

குறிப்­பிட்ட ஜனாஸா 5ஆம் திகதி சனிக்­கி­ழமை கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்து வரப்­பட்டு அங்­கி­ருந்து குரு­நாகல் ஜனாஸா சேக­ரிக்கும் மத்­திய நிலை­யத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்­கி­ருந்து ஓட்­ட­மா­வ­டிக்கு அடக்­கத்­துக்­காக அனுப்­பப்­பட்­டது. அன்றை தினம் ஓட்­ட­மா­வடி மைய­வா­டியில் மாலை ஐந்து மணி­ய­ளவில் அடக்கம் செய்­யப்­பட்­டது என்றார்.

கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள்
சம்­மே­ளனம் புல­மைப்­ப­ரிசில் உதவி
கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர். ஏ. சித்­தீக்கும் விபத்தில் பலி­யான பொலிஸ் அதி­கா­ரியின் கேகாலை வீட்­டுக்கு ஹட்டன் ஜும்ஆ பள்­ளி­வாசல் தலை­வ­ருடன் சென்­றி­ருந்தார்.

விபத்தில் பலி­யான பொலிஸ் அதி­காரி பெனடிக்ட் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார். மூன்று பிள்­ளை­களும் ஒரே சூலில் பிர­ச­விக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். அவர்­களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். மூவ­ருக்கும் 19 வயது. மூவரும் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையில் இந்தத் தடவை சித்­தி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். இருவர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தகுதி பெற்­றி­ருக்­கி­றார்கள்.

கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே. ஆர்.ஏ. சித்­தீக்கை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

விபத்தில் பலி­யான பொலிஸ் அதி­கா­ரியின் பிள்­ளை­களின் உயர்­கல்­வியை கருத்­திற்­கொண்ட கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் புல­மைப்­ப­ரிசில் நிதி வழங்கத் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது.

‘எமது சமூ­கத்தின் ஜனா­ஸா­வொன்­றுக்கு பாது­காப்பு வழங்கும் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸ் அதிகாரி விபத்தில் பலியானமை எம் அனைவரையும் கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. சம்­பந்­தப்­பட்ட குடும்­பத்­துக்கு உத­விகள் செய்­வதன் மூலம் எமக்கு ஆறுதல் கிடைக்­கி­றது. இவ்­வா­றான உத­விகள் மூலம் நாம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த முயற்­சிக்­கிறோம்’ என கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் தெரி­வித்தார்.

இதே­வேளை விபத்தில் பலி­யான உதவி பொலிஸ் பரி­சோ­தகர் (SI) எஸ்.பெனடிக்ட் பொலிஸ் பரி­சோ­த­க­ராக பொலிஸ் பரி­சோ­த­க­ராக (IP) பதவி உயர்வு வழங்­கப்­பட்­டது. பதவி உயர்வு கடிதம் ஹட்டன் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் (ASP) எஸ்.டி.எம். பாரூக்­கினால் அவரது குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.