ரதன தேரர் பதவி விலக வேண்டும் – ஞானசார தேரர்; பதவி விலகேன் -ரதன தேரர்

0 772

நான் பாராளுமன்றம் செல்லும் காலம் வந்துவிட்டது
ரதன தேரர் பதவி விலக வேண்டும் –
ஞானசார தேரர்

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை அபே ஜன­பல கட்சி தனது தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் தலைவர் சமன் பெரேரா தெரி­வித்­துள்ளார்.

அத்­து­ர­லியே ரதன தேரர் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் ஆறு­மாத காலத்தை ஜூலை மாதம் 5ஆம் திகதி நிறைவு செய்­கிறார். அத­னை­ய­டுத்து அவர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ததும் ஞான­சார தேரர் தேசி­ய­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மனம் பெறுவார் என பொது­பல சேனா அமைப்பின் ஊடக இணைப்­பாளர் எரந்த கேந­வ­ரத்ன தெரி­வித்தார்.

அபே ஜன­பல கட்­சியின் பொதுச் செய­லாளர் வெடி­னி­கம விம­ல­ர­தன தேரர் அது­ர­லியே ரதன தேரரை கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அப்­போது மூன்று மாத காலத்­துக்கு பத­வியில் இருக்­கு­மாறு வேண்­டப்­பட்­டி­ருந்தார். 2021 ஜன­வரி 5ஆம் திகதி அவர் நிய­மிக்­கப்­பட்டார். மூன்று மாதங்­களின் பின்பு தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை அது­ர­லியே ரதன தேரர் ஞான­சார தேர­ருக்கு வழங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்தார். உறு­தி­யு­ம­ளித்­தி­ருந்தார். என்­றாலும் ரதன தேரர் 6 மாதங்கள் பத­வி­யி­லி­ருந்­தாலும் பிரச்­சி­னை­யில்லை என ஞான­சார தேரர் தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்தே அது­ர­லியே ரதன தேரர் தொடர்ந்தும் பத­வி­யி­ருக்­கிறார்.

கடந்த பொதுத் தேர்­தலில் ஞான­சார தேரர் மொத்தம் 67,758 வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். அத்­து­ர­லியே ரதன தேரர் பொதுத் தேர்­தலில் அக்­கட்­சியில் கம்­பஹா மாவட்­டத்தில் போட்­டி­யிட்டார்.

அவர் கடந்த பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அபே ஜன­பல கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ததும் அவ் வெற்­றி­டத்­துக்கு பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார் என்­பதை கட்­சியின் செய­லாளர் வெடி­னி­கம விம­ல­ர­தன தேரர் உறுதி செய்தார்.

********************

பதவி விலகேன்

எவருடனும் உடன்படிக்கை செய்யவில்லை –

ரதன தேரர்

தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் விலகிக் கொள்­வ­தற்குத் தயா­ராக இல்லை என அபே ஜன­பல கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், ‘நான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக வெளி­வந்­துள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. அது பொய்யான செய்தியாகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் 6 மாத காலத்தில் விலகுவதாக நான் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை. தொடர்ந்தும் எனது முழுமையான பதவிக் காலத்தை வகிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.