(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட்19 தொற்றுப் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது அமுலிலுள்ள பயணத்தடை நீக்கப்பட்டாலும் பள்ளிவாசல்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பாக வக்பு சபை உத்தியோகபூர்வமாக பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு அறிவிக்கும் வரை தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 தடுப்பு செயலணி பள்ளிவாசல்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கினாலே பள்ளிவாசல்களைத் திறக்க முடியும்.
எனவே சமூகம் இது விடயத்தில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுகாதார வழிகாட்டல்களையும் கொவிட் 19 தொடர்பான நிபந்தனைகளையும் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும், சமூகத்தையும் வக்பு சபையின் தலைவர் கோரியுள்ளார்.- Vidivelli