காஸாவின் கண்ணீர் கதைகள்

0 640

பலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேல் ஒரு வாரத்திற்கும் மேலாக நடாத்தி வரும் தாக்குதல்களில் 200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த கொடூர தாக்குதல்களால் காஸா மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். அவர்களது உயிர்களும் உடைமைகளும் கணப்பொழுதில் அழிக்கப்பட்டுள்ளன. இப்படியொரு அநீதியும் அவலமும் உலகில் வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல்களின் போது இழப்புகளைச் சந்தித்த காஸா மக்கள் சிலரின் துயர்மிகு அனுபவங்களையும் கண்ணீர் கதைகளையும் இங்கு தருகிறோம்.

– நதீன் அப்துல் தாயிப்
10 வயது காஸா சிறுமி

என்னால் எதுவும் செய்ய முடி­ய­வில்லை. இடிந்து கிடக்கும் இந்த கட்­டி­டங்­களை என்னால் மீளக் கட்ட முடி­யுமா? எனக்கு இப்­போ­துதான் 10 வய­தா­கி­றது. நான் ஒரு வைத்­தி­ய­ராக வந்து மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்டும் என்­றுதான் விரும்­பு­கிறேன். எனக்கு

நதீன் அப்துல் தாயிப்

பய­மா­க­வுள்­ளது. எனது மக்­க­ளுக்கு ஏதா­வது உதவி செய்ய வேண்டும் போலுள்­ளது. ஆனால் என்னால் முடி­ய­வில்லை. இதை­யெல்லாம் பார்த்து ஒவ்­வொரு நாளும் அழுது கொண்­டி­ருக்­கிறேன். ஏன் எங்­க­ளுக்கு மாத்­திரம் இவ்­வாறு நடக்­கி­றது. நாம் என்ன செய்தோம். நாம் முஸ்­லிம்கள் என்­ப­தற்­காக அவர்கள் (இஸ்­ரே­லி­யர்கள்) எம்மை வெறுப்­ப­தாக எனது குடும்­பத்­தினர் கூறு­கி­றார்கள். நாங்கள் முஸ்­லிம்­க­ளாக இருப்­பது குற்­றமா? என்னைச் சுற்றி நிற்கும் சிறு­வர்­களைப் பாருங்கள். ஏன் எங்கள் மீது ஏவு­க­ணை­களை அனுப்பி கொலை செய்­கி­றீர்கள்? நீங்கள் செய்வது நீதியல்ல.

****************************************************

– முஹம்மத் அல் ஹதீதி, காஸா

குண்டுத் தாக்­கு­தலில் எனது மனை­வி­யையும் எனது நான்கு ஆண் குழந்­தை­க­ளையும் என்­னி­ட­மி­ருந்து பறித்­து­விட்­டார்கள். இப்­போது நானும் எனது 5 மாத ஆண் குழந்­தை­யுமே எஞ்­சி­யி­ருக்­கிறோம்.
ஷுஐப் (வயது 13), யஹ்யா (வயது 11), அப்துர் ரஹ்மான் (வயது 8), ஒஸாமா (வயது 6) ஆகிய எனது ஆண் மக்­களும் 36 வய­தான எனது மனைவி மஹா அபூ ஹத்­தா­புமே என்­னை­விட்டும் இறை­வனை சந்­திக்கப் போன­வர்கள். நாங்­களும் நீண்ட காலம் இங்கு நிலைத்­தி­ருக்க விரும்­ப­வில்லை. யா அல்லாஹ் எங்­க­ளையும் விரை­வாக உன் பக்கம் அழைத்­து­விடு.

முஹம்மத் அல் ஹதீதி

பெருநாள் தினம் என்­பதால் எனது மனைவி, பிள்­ளை­களை எமது உற­வி­னரின் வீட்­டுக்கு அழைத்துச் சென்றார். பிள்­ளைகள் அனை­வரும் புதிய ஆடை­களை அணிந்­தி­ருந்­த­துடன் விளை­யாட்டுப் பொருட்­க­ளையும் தம்­முடன் கொண்டு சென்­றார்கள். அன்­றி­ரவு அங்­கேயே தங்க தாம் விரும்­பு­வ­தாக பிள்­ளைகள் என்­னிடம் கெஞ்சிக் கேட்­டார்கள். அதற்கு நான் அனு­மதி வழங்­கினேன். பின்னர் நான் மாத்­திரம் வீட்டில் தனி­யாக உறங்­கினேன். அன்­றி­ரவு திடீ­ரென குண்டுச் சத்­தங்கள் கேட்டு கண்­வி­ழித்தேன். அப்­போ­துதான் எனது மனை­வியும் பிள்­ளை­களும் சென்­றி­ருந்த வீடும் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­தாக அய­ல­வர்கள் வந்து சொன்­னார்கள். அங்கு விரைந்து சென்­ற­போது இடிந்த கட்­டி­டத்தை மட்­டுமே காண முடிந்­தது. மீட்புப் பணி­யா­ளர்கள் சட­லங்­களை வெளியில் எடுத்துக் கொண்­டி­ருந்­தார்கள். அந்த வீட்­டி­லி­ருந்து எனது உறவினரான பெண்ணும் அவரது நான்கு பிள்ளைகளும் கூட மரணித்துவிட்டார்கள்.

*****************************

– முகம்மத் கதாதா, காஸா

“எமது அலு­வ­லகம் அமைந்­துள்ள 13 மாடிக் கட்­டி­டத்தை 2 மணி நேரத்­திற்குள் தகர்க்கப் போவ­தாக இஸ்ரேல் அறி­வித்­துள்­ள­தாக அதன் பாது­காப்பு அதி­காரி என்­னிடம் கூறினார். அந்தக் குறு­கிய கால அவ­கா­சத்­திற்குள் எமது அலு­வ­லக தள­பா­டங்கள், ஆவ­ணங்­க

ளை வெளி­யி­லெ­டுக்க நாம் முயற்­சிக்­க­வில்லை. உயிர்­களை பாது­காத்துக் கொள்­ளவே முற்­பட்டோம். நான் 2017 இல் இந்தக் கட்­டி­டத்­தில்தான் டிஜிட்டல் சேவை நிறு­வனம் ஒன்றைத் தொடங்­கினேன். இன்று அதில் 30 பேர் பணி­யாற்­று­கி­றார்கள். எனக்கு 31 வய­துதான் ஆகி­றது. இளம் வயதில் ஒரு தொழில் நிறு­வ­னத்தைக் கட்­டி­யெ­ழுப்­பிய எனக்கு இந்த அழிவு பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நானும் எனது நிறு­வன பணி­யா­ளர்­களும் அதிர்ச்சியில் உள்ளோம்”

*****************************

– அப்துர் ரப்பு அல் அத்தார், பெய்த் லஹியா

குண்­டு­வீச்­சினால் எனது அயல் வீடு முற்­றாக சிதைந்­து­விட்­டது. அவர்­க­ளது அலறல் சத்தம் கேட்டே நாம் வெளியில் வந்தோம். அங்­கி­ருந்த நான்கு சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். லம்யா, ஆமிர், இஸ்லாம் அல் அத்தார், மொகமட் அல் அத்தார் ஆகிய சிறார்­களே உயி­ரி­ழந்­த­வர்கள். நாங்கள் செத்­து­ம­டியப் போகிறோம் என்றே நினைத்தோம். இஸ்ரேல் எல்­லா­வற்றின் மீதும் குண்டு போட்டு தகர்த்துவிட்­டது. சுமார் 50 தட­வைகள் எமது பகு­தியில் குண்டுகள் வீசப்­பட்­டன.

8 கிலோ மீற்றர் தூரம் கால் நடை­யாக வந்தே தற்­கா­லிக அகதி முகாம் ஒன்றை அடைந்தோம். நாம் எதை­யுமே எம்­முடன் எடுத்­து­வ­ர­வில்லை. இப்­போது எமது வீடு­களும் தரை­மட்­ட­மா­கி­யி­ருக்­கலாம்.

அகதி முகாமில் எமது பிள்­ளைகள் வெற்றுத் தரையில் தூங்­கு­கி­றார்கள். இப்­ப­டி­யொரு இரக்­க­மற்ற மோச­மான தாக்­கு­தலை நான் என் வாழ்­நாளில் கண்டதில்லை

***************************

– முகம்மது தாபித்,
காஸா மின் விநியோக நிறுவனம்

குண்டுத் தாக்­கு­தல்­களால் மின் கட்­ட­மைப்பு முற்­றாகச் சேத­ம­டைந்­து­வி

ட்­டது. எரி பொருட்­களைக் கொண்டு வரு­வ­தற்­கான கராம் அபு சலாம் பாதை மூடப்­பட்­டுள்­ளதால் எரி­பொ­ரு­ளுக்கு பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் கையி­ருப்­பி­லுள்ள எரி­பொ­ருட்கள் இன்னும் ஓரிரு நாட்­க­ளுக்கே போது­மா­ன­வை­யா­க­வுள்­ளன. இதனால் பல நிறு­வ­னங்­களை மூட வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. கத்­தாரின் உத­வி­யுடன் உள்ளூர் சந்­தைக்கு தேவை­யான பெற்­றோலை வழங்க முயற்சி செய்து கொண்­டி­ருக்­கிறோம்.

******************************

– ஆபித் ஷெமாலி, காஸா

மர­ணித்­த­வர்கள் உறங்கும் மைய­வா­டி­களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்­க­வில்லை. இறந்­த­வர்கள் என்ன பாவம் செய்­தார்கள்? மைய­வாடி மீதான தாக்­கு­த­லை­ய­டுத்து வீதிகள் எங்கும் எலும்­பு­களும் உடல் பாகங்­களும் சிதறிக் கிடக்­கின்­றன. எங்கள் உற­வி­னர்­களின் அடக்­கஸ்­த­லங்­க­ளுக்கு என்ன நடந்­ததோ எனப் பார்க்க ஓடி வந்தோம். எச்­சங்­களைப் பொறுக்கி பைகளில் இட்டு மீண்டும் அடக்கம் செய்தோம்.இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்­பா­னது இறந்­த­வர்­களைக் கூட விட்டு வைக்­க­வில்லை என்­பதைத் தான் இது காட்­டு­கி­றது. எங்­களைப் பார்க்க கேட்ககூட யாரு­மில்லை. ஏன் இந்த அநி­யா­யத்தைச் செய்­கி­றீர்கள் என இஸ்­ரேலைத் தட்டிக் கேட்க யாருமில்லை.

*****************************************************

– அஹ்மத், காஸா

இந்தக் கட்­டி­டத்தில் சிவி­லி­யன்­களே வசித்து வந்தோம். நானும் தந்­தையும் நான்கு சகோ­த­ரர்­களும் இதில் வாழ்ந்தோம். எங்கள் மனை­வி­மாரும் பிள்­ளை­களும் என 15 பேர­ளவில் இங்­கி­ருந்தோம். எங்கள் கட்­டி­டத்தை தாக்கப் போவ­தாக எமக்கு அறி­விக்­கவும் இல்லை. அய­ல­வர்­க­ளுக்­குத்தான் கூறி­யி­ருக்­கி­றார்கள். இது ஒரு நான்கு மாடி குடி­யி­ருப்பு. மேலுள்ள இரண்டு மாடி­களை அண்­மையில் தான் கட்டி முடித்தோம். எங்கள் இரு இளைய சகோ­த­ரர்கள் அண்­மை­யில்தான் திரு­மணம் முடித்­தார்கள். அவர்­க­ளது குடும்பம் வாழவே இதனைக் கட்­டினோம். அனைத்­தையும் ஒரு நொடிப் பொழுதில் தகர்த்துவிட்டார்கள்.

********************************

– அத்லி அல்கொலாக், காஸா

இஸ்­ரே­லிய விமா­னங்கள் ஏறக்­கு­றைய காஸாவின் எல்லா வீதி­க­ளி­லுமே குண்­டு­களை வீசி­விட்­டன. கட்­டி­டங்­களும் உட்­கட்­ட­மைப்­பு­களும் முற்­றாக சிதைக்­கப்­பட்­டு­விட்­டன. எமது பொரு­ளா­தா­ரத்­தையும் மக்­களின் அடிப்­படைத் தேவை­க­ளையும் சீர்­கு­லைப்­பதே அவர்­க­ளது நோக்­க­மாகும்.

இப்­போது எமக்கு குடி­நீரைப் பெற முடி­ய­வில்லை. கழி­வு­களை அகற்ற முடி­ய­வில்லை. எந்­த­வித அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளையும் எம்மால் பெற முடி­ய­வில்லை. வீதிகள் உடைந்து கிடப்­பதால் காய­ம­டைந்­த­வர்­களைக் கொண்டு செல்ல வரும் அம்­பி­யூ­லன்ஸ்­களால் உரிய இடத்தைச் சென்றடைய முடியவில்லை. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.