இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு வித்திட்ட பால்போர் பிர­க­ட­னம்

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு

0 844

எம்.எஸ்.அமீன் ஹுசைன்

பலஸ்­தீன மக்­களின் சுதந்­தி­ரத்தை பூண்­டோடு அழித்த பிர­க­ட­னமே “பால்போர்” பிர­க­ட­ன­மாகும் (Balfour declaration). இந்த பிர­க­டனம் செய்­யப்­பட்டு 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திக­தி­யுடன் 103 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றது. இந்த 103 வரு­டங்­களும் பலஸ்­தீன மக்கள் இறை­மைக்­கா­கவும், தன்­னா­திக்கம், சுயா­தி­பத்­தியம், நீதி, சமா­தானம் மற்றும் சுதந்­திரம் என்­ப­வற்­றுக்­காகவும் போராடி வரு­கின்­றனர். இந்­நி­லையில் பால்போர் பிர­க­ட­னத்தின் பின்­ன­ரான பலஸ்­தீனில் நீதிக்­கான தேடல் என்ற தலைப்­பி­லான இந்த கட்­டுரை பால்போர் பிர­க­ட­னத்தின் பின்­ன­ணியில் அமைந்­துள்ள பல விட­யங்கள் தொடர்­பாக கவனம் செலுத்­து­வ­தாக அமை­கின்­றது. காரணம் இப்­போது மீண்டும் பலஸ்­தீன இஸ்ரேல் மோதல்கள் வலு­வ­டைந்து வரு­கின்­ற­ன. கடந்த ஒரு வார­மாக நடை­பெற்று வரும் தாக்­கு­தல் கார­ண­மாக 250 இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரேலின் ஏவு­கணைத் தாக்­கு­தலால் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

பால்போர் பிர­க­டனம்
அரபு தேசத்­திற்கு சொந்­த­மான பலஸ்­தீன மண்ணில் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் சபையில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­திற்­க­மைய யூதர்­க­ளுக்­கான தனி நாடாக இஸ்ரேல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதி பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார செய­லா­ள­ராக இருந்த ஆர்தர் பால்­போ­ருக்கும் இங்­கி­லாந்தில் வாழ்ந்த யூத சியோ­னிச தலை­வ­னாக இருந்த வோல்டர் ரொட்செல் ஆகி­யோ­ருக்கும் இடையில் செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையில் உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பிர­க­ட­னத்தின் அடிப்­ப­டையில் அரபு தேசத்­திற்கு சொந்­த­மான பலஸ்­தீன நிலப்­ப­ரப்பில் பல­வந்­த­மாக இஸ்ரேல் எனும் நாடு உரு­வாக்­கப்­பட்­டது. இந்த நிகழ்வு உலக வர­லாற்றில் ஒரு இரத்­தக்­கறை படிந்த நாளாக பதி­வா­கின்­றது. மத்­திய கிழக்கில் அமை­திக்கும் சமா­தானம், சக வாழ்வு என்ற கோட்­பா­டு­க­ளுக்கு சாவு மணி அடிக்­கப்­பட்ட நாளாக இது அமைந்­தது.

1948 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் நிறை­வேற்­றப்­பட்ட இஸ்­ரேலை உருவாக்கும் திட்­டத்தை அன்­றைய அரபு நாடு­க­ளான எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், ஆகிய நாடுகள் கடு­மை­யாக எதிர்த்­த­தோடு இஸ்ரேல் மீது தாக்­கு­த­லையும் நடத்­தின. அன்று முதல் பலஸ்­தீன மண்ணில் இரத்த ஆறு ஓட ஆரம்­பித்­தது. 1948 ஆம் ஆண்டு ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக 13,000 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டனர். 530 பலஸ்­தீன கிரா­மங்கள் மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தி­யது. அது­வ­ரையில் சுதந்­தி­ர­மா­கவும் சுயா­தீ­ன­மா­கவும் தமது நிலங்­களில் வாழ்ந்து வந்த சுமார் 750,000 பலஸ்­தீ­னர்கள் அளவில் அவர்­க­ளது வாழ்­வி­டங்­களில் இருந்து இஸ்ரேல் பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யதால் அவர்கள் அக­தி­க­ளா­கினர். அன்று ஆரம்­ப­மா­கிய அரபு இஸ்ரேல் மோதல் இன்று வரையில் சுமார் 73 வரு­டங்­க­ளாக நிரந்­தர தீர்­வின்றி தொடர்­கின்­றது. சுதந்­திர பலஸ்­தீ­னுக்­கா­கவும் விடு­த­லைக்­கா­கவும் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வரும் மோதல் கார­ண­மாக அக­தி­க­ளாகி அயலில் உள்ள அரபு நாடு­களில் இன்று வரையில் தஞ்­ச­ம­டைந்­தி­ருப்போர் எண்­ணிக்கை 70 இலட்­சத்­திற்கு மேலாகும் என்று புள்­ளி­வி­ப­ரங்கள் கூறு­கின்­றன.

பால்போர் பிர­க­டனம் ஏன் வெளி­யி­டப்­பட்­டது என்­பது இந்த பிர­க­ட­னத்தின் பின்­ன­ணியில் எழு­கின்ற வினா­வாகும். யூதர்கள் மேற்கு ஐரோப்­பாவின் பல பகு­தி­களில் சித­றுண்டு வாழ்ந்து கொண்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்­கென்று தனி­யான நாடு இருக்­க­வில்லை. இங்­கி­லாந்தில் வாழ்ந்த யூதர்கள் மிகவும் செல்வச் செழிப்­புடன் வாழ்ந்­த­தோடு அந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்­தக்­கூ­டிய சமூ­க­மாக இருந்­தனர். 1915 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரில் இங்­கி­லாந்­திற்கு பாரிய பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்­டதால் யூத சமூகம் பெரு­ம­ள­வி­லான பொரு­ளா­தார உத­வி­களைச் செய்­தி­ருந்­தது. அதற்கு பிரதி உப­கா­ர­மாக நாடற்ற சமூ­க­மாக இருந்த யூத இனத்­திற்கு பலஸ்­தீனில் தனி­யான நாட்டை உரு­வாக்கித் தரு­வ­தாக வழங்­கிய வாக்­கு­று­தி­யா­கவே பல்போர் பிர­க­டனம் அமை­கின்­றது என்று வர­லாற்று ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர். அத்­துடன் பால்போர் பிர­க­ட­னத்­திற்கு வழி­வ­குத்த பிர­தான உந்து சக்­தி­யாக அமைந்­தது அவுஸ்­தி­ரி­யாவைச் சேர்ந்த யூத சிந்­த­னை­யா­ள­ரான தியேடோர் ஹேசல் என்­ப­வ­வரால் முன்­வைக்­கப்­பட்ட யூத இனத்­திற்­கான தனி­யான தேசம் அமை­ய­வேண்டும் என்ற சிந்­த­னை­யாகும். சர்­வ­தேச சியோ­னிச காங்­கி­ரசின் முத­லா­வது கூட்­டத்தில் இந்த சிந்­தனை முன்­மொ­ழி­யப்­பட்­டது. இது அரபு உலகில் யூதர்கள் “சியோ­னிச பிச்­சைக்­கா­ரர்கள்” என்று தாழ்த்­தப்­பட்ட மிக மோச­மான சமூ­க­மாக அழைக்­கப்­பட்ட காலம்.

பால்போர் பிர­க­டத்­தை­ய­டுத்து யூத அரபு மோதல்கள் ஆரம்­ப­மா­கின. சட்டம், ஒழுங்கு, அமைதி என்­பன சீர்­கு­லைய ஆரம்­பித்­தது. 1929 ஆம் ஆண்டு பலஸ்­தீனில் இடம்­பெற்ற மோதல்­களில் 133 யூதர்­களும் 116 பலஸ்­தீ­னர்­களும் பலி­யா­கி­ய­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. ஆக்­கிர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் யூதர்­களை குடி­யேற்றும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின. 1918 ஆம் ஆண்டு 10 வீத­மாக இருந்த யூத சனத்­தொகை 1939 ஆம் ஆண்டு 30 வீத­மாக அதி­க­ரித்­ததை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஜேர்­ம­னியில் ஹிட்லர் இலட்­சக்­க­ணக்­கான யூதர்­களை கொண்டு குவித்­ததால் பால்போர் பிர­க­ட­னத்தின் அடிப்­ப­டையில் பிரிட்டன் யூதர்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்­டிய தேவை அவ­ச­ர­மாக உண­ரப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்தில் பலஸ்தீன் உது­மா­னிய பேர­ரசின் கீழ் இருந்­து­வந்த நிலப்­ப­ரப்­பாகும். இதில் பலஸ்­தீனின் வடக்கு ஆக்ரே, நேப்ள்ஸ் ஆகிய மாவட்­டங்கள் பெய்­ரூட்டின் ஒரு பகு­தி­யா­கவும் ஜெரூ­சலம் மற்றும் பெத்­லஹேம் பிர­தே­சங்கள் நேர­டி­யாக உது­மா­னியப் பேர­ரசின் தலை­ந­க­ரான இஸ்­தான்­பூலின் கட்­டுப்­பாட்­டிலும் இருந்து வந்­தன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஐக்­கிய நாடுகள் சபையால் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட துரோகச் செய­லா­கவும் பல­வந்­த­மாக இஸ்­ரேலை உரு­வாக்கி மத்­திய கிழக்கில் அரபு தேசத்தில் பாரிய முரண்­பாட்­டிற்கும் மோதல்­க­ளுக்கும் வழி­வ­குத்த சந்­தர்ப்­ப­மாகவும் இந்த நிகழ்வு அமை­கின்­றது.

ஐ.நா. சபை ஏற்­ப­டுத்­தப்­பட்ட நோக்­கத்­திற்கு நேர் மாற்­ற­மான சட்­ட­வி­ரோத செய­லா­கவும் பலஸ்­தீன மக்­களின் சுதந்­திரம், வாழ்­வு­ரிமை, இறைமை, சுயா­தி­பத்­தியம் என்­ப­வற்றை பல­வந்­த­மாக பறித்­தெ­டுத்த சந்­தர்ப்­ப­மா­கவும் ஐ.நா. சபை 1947ஆம் ஆண்டு முன்­வைத்த பலஸ்­தீனில் அரபு – இஸ்ரேல் என்ற இரண்டு நாடுகள் தீர்­மா­னமும் 1948ஆம் ஆண்டு பல­வந்­த­மாக ஐரோப்­பிய சமூ­கத்தின் தேவைக்­காக இஸ்­ரேலை உரு­வாக்­கி­ய­மையும் அமை­கின்­றது. உலகில் நிரந்­தர சமா­தா­னத்­திற்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­திய முத­லா­வது நாடாக பிரிட்­டனை குறிப்­பி­டலாம். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட பால்போர் பிர­க­ட­னத்தை உலக சமா­தா­னத்­திற்கும் அமை­திக்கும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­திய பிர­க­ட­ன­மாக நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி அனைத்­து­லக மனித உரி­மைகள் சாச­னத்தை ஐ.நா. அமைப்பு வெளி­யிட்­டது. ஆனாலும் அந்த சாசனம் கூறும் எந்­த­வி­த­மான விதி­களும் இஸ்­ரே­லுக்கு செல்­லு­ப­டி­யா­வ­தாக இல்லை. எந்­த­வொரு சர்­வ­தேச சட்­டத்­திற்கும் இஸ்ரேல் கட்­டுப்­ப­டு­வ­தாக இல்லை. பலஸ்­தீனில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் அனைத்­து­வி­த­மான மனித உரிமை மீறல்­க­ளையும் அமெ­ரிக்கா உலக அரங்கில் நியா­யப்­ப­டுத்தி இஸ்­ரேலை பாது­காக்கும் பல­மான சக்­தி­யாக இருந்து வரு­கின்­றது. பலஸ்­தீன மண்ணில் இஸ்ரேல் என்ற நாடு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் ஐ.நா. சபை இது­வ­ரையில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக 77 தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி இருக்­கின்­றது.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் கைப்­பற்­றிய பிர­தே­சங்­களில் இருந்து வெளி­யேற வேண்டும், பலஸ்­தீ­னர்­களின் சுதந்­திரம், அடிப்­படை உரி­மைகள், அர­சியல் அதி­காரம் என்­ப­வற்றை அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்ற விட­யங்­களை உட்­ப­டுத்­தி­ய­தாக ஐ.நா. சபை 1962 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி நிறை­வேற்­றிய தீர்­மா­னமே 242 ஆம் இலக்க தீர்­மா­ன­மாகும். அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு இஸ்­ரேலை பலஸ்­தீனில் போர் நிறுத்தம் ஒன்­றிற்கு வலி­யு­றுத்­திய ஐ.நா. சபை 338 ஆம் இலக்க தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது. ஆனாலும் இஸ்ரேல் அதன் அடா­வ­டித்­த­னங்­களை நிறுத்­த­வில்லை.

இஸ்­ரேலை கட்­டுப்­ப­டுத்த உலகில் எந்த சக்­தி­யாலும் முடி­ய­வில்லை. பலஸ்­தீ­னத்தை அழித்து இஸ்­ரேலை பல­ம­டையச் செய்­வதே இஸ்­ரேலின் திட்­ட­மாகும். 1967 ஆம் ஆண்டு முதல் இன்­று­வ­ரையில் இலட்­சக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்­களின் குடி­யி­ருப்­புக்­களை இஸ்ரேல் அழித்­தி­ருக்­கின்­றது. சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் அறிக்­கைக்­க­மைய 6279 பலஸ்­தீ­னர்கள் இஸ்ரேல் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். இஸ்­ரே­லுக்கு எதி­ராக எந்த நாடும் எதிர்த்து பேசாத அள­விற்கு உலகில் பக்­க­சார்­பான நீதி நிலைநி­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இஸ்ரேல் கடந்த 73 வரு­டங்­க­ளாக மிகவும் பலம்­பெற்ற நாடாக முன்­னேறிக் கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­காக அமெ­ரிக்கா பில்­லியன் கணக்­கி­லான டொலர்கள் நிதி உத­வி­க­ளையும் ஏனைய பொரு­ளா­தார மற்றும் ஆயுத உத­வி­க­ளையும் செய்து கொண்­டி­ருக்­கின்­றது.

அரபு நாடு­களின் முயற்சி
பலஸ்­தீ­னத்தை மீட்­ப­தற்­காக எகிப்து தலை­மையில் அரபு நாடுகள் 1948, 1956, 1967, 1973 ஆம் ஆண்­டு­களில் இஸ்ரேல் மீது போர் தொடுத்­தன. பலஸ்­தீ­னத்தை மீட்­டெ­டுப்­ப­தற்­காக பல அமைப்­புக்கள் உரு­வா­கின. ஹமாஸ், பலஸ்­தீன விடு­தலை இயக்கம் உட்­பட 10 இற்கும் மேற்­பட்ட அமைப்­புக்கள் பலஸ்­தீன விடு­த­லைக்­காக போரா­டு­கின்­றன.

பல­முறை சமா­தான பேச்­சு­வார்த்­தை­களும் நடத்­தப்­பட்­டுள்­ளன. 1967ஆம் ஆண்டு சமா­தான மாநாடு, 1977ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட மெட்ரிட் மாநாடு, 1993ஆம் ஆண்டு நோர்­வேயின் தலை­நகர் ஒஸ்­லோவில் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்தை, 2000ஆம் ஆண்டு நடை­பெற்ற கேம் டேவிட் உடன்­ப­டிக்கை, 2001 ஆம் ஆண்டு நடை­பெற்ற “தபா” பேச்­சு­வார்த்தை, 2003 ஆம் ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட பய­ணப்­பாதை வரை­படம், 2007 ஆம் ஆண்டு சவுதி ஆரே­பி­யாவின் ரியாதில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை உட்­பட பல சந்­தர்ப்­பங்­களை குறிப்­பி­டலாம். ஆனாலும் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளையும் இஸ்ரேல் தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்தி வந்­தி­ருப்­ப­தோடு எந்­த­நி­லை­யிலும் அதன் பலத்­தையும் விட்­டுக்­கொ­டுப்­ப­தாக இஸ்ரேல் நடந்­து­கொள்­ள­வில்லை. இன்­றைய நிலையில் இஸ்ரேல் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­தி­ற்கும் அச்­சு­றுத்­த­லா­கவே இருந்து வரு­கின்­றது.

1987 ஆம் ஆண்டு பலஸ்­தீன மக்கள் எழுச்சி (இந்­தி­பாதா) காசா மற்றும் மேற்கு கரை பிர­தே­சங்­களில் நீதி மறுக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தை சுதந்­திர நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. இதன் எதி­ரொ­லி­யாக பலஸ்­தீ­னர்­க­ளுக்கு சுயாட்சி வழங்கும் தீர்­மானம் ஐ.நா. சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. அத்­துடன் அது தொடர்­பான உடன்­ப­டிக்கை 1994 ஆம் ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்­டது. பலஸ்­தீன சுயாட்சி அதி­கா­ர­சபை ஏற்­ப­டுத்­தப்­பட்டு புதி­தாக பலஸ்­தீன அர­சாங்கம் ஒன்­றுக்­கான முன்­னெ­டுப்­புக்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அந்த அதி­கார சபையின் ஜனா­தி­ப­தி­யாக யாசீர் அரபாத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

இஸ்­ரேலின் சதித் திட்­டங்கள்
அரபு உல­கத்தை ஒற்­று­மைப்­ப­டாது பிள­வு­களை வளர்ப்­பதில் அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் கூட்­டாக செயற்­பட்டு வரு­கின்­றன. இஸ்­லா­மிய நாடு­க­ளான ஈரான், ஈராக், சிரியா, எகிப்து, துருக்கி, சவுதி அரே­பியா, லிபியா உட்­பட முக்­கி­ய­மான நாடுகள் ஒற்­று­மைப்­பட்டால் அதனால் இஸ்­ரே­லுக்கு ஆபத்து ஏற்­படும் என்­பதை அறிந்து இஸ்­லா­மிய ஒற்­று­மையை சீர்­கு­லைக்க திட்­ட­மிட்டு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பலஸ்­தீன விடு­த­லைக்­காக குரல் எழுப்­பிய, போரா­டிய தலை­வர்­களை கொலை செய்­வதை இஸ்ரேல் இலக்காக் கொண்­டி­ருந்­தது. இஸ்­ரே­லுக்கு எதி­ராக செயற்­பட்ட எகிப்தின் ஜனா­தி­பதி கமால் அப்துல் நாசர் இஸ்­ரேலின் கையாள் ஒரு­வனால் 1958 ஆம் ஆண்டு கொலை செய்­யப்­பட்டார். 1982 ஆம் ஆண்டு லெப­னா­னிற்குள் ஊடு­ருவி பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தை இலக்­கு­வைத்து மேற்­கொண்ட தாக்­கு­தலால் 17,825 பலஸ்­தீ­னர்கள் கொலை செய்­யப்­பட்­டனர். அகதி முகாம்கள் மீது தாக்­குதல் நடத்தி அப்­பா­வி­களை கொன்று குவித்­தது. 2004 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி ஹமாஸ் இயக்­கத்தின் தலை­வ­ராக இருந்த ஷெய்க் யாசீனை கொலை செய்­தது. பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தலைவர் யசீர் அர­பாத்­தையும் கொலை செய்ய பல முறை முயற்­சித்­தது. 2004 நவம்பர் 11 ஆம் திகதி யசீர் அரபாத் மர­ண­ம­டைந்தார். அவர் இஸ்ரேலினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதாகவே நம்பப்படுகிறது. 2000 ஆம் ஆண்டின் பின்னர் அரே­பிய தீப­கற்­பத்தில் ஏற்­பட்ட அமை­தி­யின்மை, முஅம்மர் கதாபி, சதாம் ஹுசைன் மற்றும் பின்­லாதின் ஆகி­யோரின் கொலைகள், சிரி­யா­விற்குள் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யின்மை ஆகி­ய­வற்றின் பின்­ன­ணியும் இஸ்­ரேலின் பாது­காப்பே ஆகும். ஈராக், லிபியா, சிரியா ஆகிய தேசங்­களை குண்­டு­மழை பொழிந்து ஜன­நா­ய­கத்தை பாது­காப்­பது என்ற பெயரில் அமெ­ரிக்கா அழித்­த­மையும் இஸ்­ரேலை பாது­காப்­ப­தற்­கான திட்டம் எனலாம்.

முடி­வுரை
103 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பிரிட்டன் செய்த அனைத்­து­வி­த­மான சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கும் முர­ணான முறையில் நிறைவேற்றிய பால்போர் பிர­க­ட­னத்தின் விளைவே இவை­யாகும். கடந்த 103 வரு­டங்­க­ளுக்கு மேலாக பலஸ்­தீனில் நடை­பெறும் அனைத்­து­வி­த­மான மனித உரிமை மீறல்கள், படு­கொ­லைகள், அழி­வுகள், பொரு­ளா­தார இழப்­புக்கள் அனைத்­தையும் இங்­கி­லாந்தே பொறுப்­பேற்க வேண்டும். இவ்­வா­றான ஒரு நிலையில் பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு தீர்வு என்ன? அந்த தீர்வை யார் முன்­வைப்­பது என்­பதே இன்றை பிர­தான கேள்­வி­யாகும்.

கடந்த ஏழு வரு­டங்­க­ளாக ஓய்ந்­தி­ருந்த பலஸ்­தீன இஸ்ரேல் மோதல்கள் மீண்டும் ஆரம்­பித்­துள்­ளன. இனி மோதல்கள் உக்­கி­ர­ம­டைந்தால் நிலைமை மிக மோச­ம­டை­யலாம். பிராந்­திய நாடு­களும் இந்த மோதல்­க­ளுக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் ஒன்­றி­ணை­யு­மானால் அது பாரிய யுத்­த­மாக மாறும் அபாய நிலை உரு­வாகியிருக்­கின்­றது.
இன்­றைய நவீன அணு ஆயுத ஏவு­கனை கால­கட்­டத்தில் பலஸ்­தீ­னத்­திற்­காக இஸ்­ரேலை அழிக்கும் நோக்கில் மீண்டும் ஒரு யுத்தம் புரி­வ­தா­னது எந்­த­வ­கையில் சாத்­தி­யப்­படும் என்­பது பிர­தான சவா­லாகும். அவ்­வா­றான ஒரு நிலைக்கு அரபு நாடுகள் முன்­வ­ரு­மானால் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான உலக வல்­ல­ரசு நாடுகள் அனைத்தும் இஸ்­ரேலின் பக்­கமே நிற்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இவ்­வா­றான ஒரு நிலை உரு­வா­கினால் அது நிச்­ச­யமாக மூன்றாம் உலக மகா­யுத்தம் என்றே கூறலாம். அதனால் ஏற்­ப­டப்­போ­வது சிந்­தித்துப் பார்க்க முடி­யாத அழி­வாகும். அவ்­வா­றாயின் ஆக்­க­பூர்­வ­மான சமா­தான வழியில் பலஸ்­தீ­னத்தில் எல்­லை­களில் இஸ்­ரேலின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு முடிவுகட்டி மக்கள் சுதந்திரமாகவும் இறைமையுடனும் வாழ்வதற்கான உத்தரவாத்தை அடைவதற்கான முயற்சிகளே இன்றைய காலத்தின் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.