கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏன் அவசியம்?

0 536

Dr.அ.அ. மு. அன்பாஸ் (MBBS, MD)
விஷேட பொது வைத்­திய நிபுணர்
ஆதார வைத்­தி­ய­சாலை,
கல்­முனை- வடக்கு

இலங்­கையில் கொரோனா வைரஸ் தடுப்­பூசி செலுத்தும் பணி ஆரம்­பிக்­கப்­பட்டு சில மாதங்கள் கடந்­தி­ருக்கும் நிலையில், இது­வரை சுகா­தார சேவை பணி­யா­ளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணி­யா­ளர்­க­ளுக்­கான தடுப்­பூ­சிகள் செலுத்­தப்­பட்டு நிறை­வ­டையும் நிலையில்,பொது மக்­க­ளுக்­கான தடுப்­பூசி விநி­யோகம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இருந்­த­போ­திலும் பொது­மக்கள் மனதில் தடுப்­பூசி செலுத்­தி­க் கொள்­வதா இல்­லையா , தடுப்­பூசி பாது­காப்­பா­னதா இல்­லையா , தடுப்­பூ­சியின் நோக்கம் என்ன? போன்ற பல்­வேறு கேள்­வி­களும் குழப்­பங்­களும் எழுந்­த­வண்ணம் உள்­ளன. அந்த வகையில் சில பொது­வான கேள்­வி­க­ளுக்­கான தெளி­வூட்­டல்­களை இங்கே முன்­வைக்­கிறேன்.

ஏன் தடுப்­பூ­சிகள் வழங்­கப்­ப­டு­கின்­றன?
தடுப்­பூ­சிகள் என்­பவை, குறிப்­பிட்ட சில கொடிய அல்­லது உயி­ரா­பத்தை விளை­விக்­கக்­கூ­டிய கிரு­மித்­தொற்­றுகள் ஏற்­ப­டு­வதில் இருந்து (வரு­முன்­காத்தல்) பாது­காப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அணு­கு­மு­றை­யாகும்.
எம்மை நோய்க்­கி­ரு­மிகள் தொற்­றும்­போது எம­து­டலில் இயற்­கை­யாக குறித்த நோய்த் தொற்­றிற்­கெ­தி­ரான நோய் எதிர்ப்பு சக்தி ( நிர்ப்­பீ­டணம்/immunity) உரு­வாகும். இதற்­காக பிற­பொருள் எதிரி எனும் பதார்த்­தத்தை (Antibodies) எமது உடல் உரு­வாக்கும். பிற­பொருள் எதி­ரிகள் நோய்க் கிரு­மி­க­ளுடன் போராடி அவற்றை அழிப்­பதன் மூலம் குறிப்­பிட்ட கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து எமது உடல் பாது­காக்­கப்­படும். எனினும், கொரோனா வைரஸ் போன்ற சில வீரி­ய­மான நோய்க் கிரு­மிகள் தொற்­றும்­போது, இவ்­வா­றான இயற்­கை­யான நோய் எதிர்ப்பு சக்தி எம்மை பாது­காக்க முன்பு நோய்க் கிரு­மிகள் எம­து­டலில் பல்­கிப்­பெ­ருகி எம்மை கொல்­லக்­கூ­டிய வாய்ப்­புகள் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன.

தடுப்­பூ­சிகள் குறிப்­பிட்ட நோய்த் தொற்­றிற்­கெ­தி­ரான பிரத்­தி­யே­க­மான பிற­பொருள் எதி­ரி­களை எம­து­டலில் உரு­வாக்கத் தேவை­யான பதார்த்­தங்­களைக் கொண்­டி­ருக்கும். இவ்­வா­றான பதார்த்­தங்கள் வலு­வி­ழக்­கச்­செய்­யப்­பட்ட நோய்க்­கி­ரு­மி­க­ளா­கவோ அல்­லது அவற்றின் ஒரு பகு­தி­யா­கவோ அல்­லது புதி­யதோர் பொறி­மு­றை­யா­கவோ இருக்­கக்­கூடும். எனவே தடுப்­பூ­சியை பெற்­றுக்­கொண்ட ஒருவர் புதி­தாக கிரு­மித்­தொற்று ஏற்­ப­டும்­போது அக்­கி­ரு­மித்­தொற்றின் ஆரம்ப நிலை­யி­லேயே நோய்க் கிரு­மி­களை போராடி அவற்றை அழிப்­ப­தற்கு தேவை­யான பிற­பொருள் எதி­ரி­களை பெற்­றி­ருப்பார். இதுவே தடுப்­பூ­சியின் பெரும் பல­மாகும். உதா­ர­ண­மாக போலியோ போன்ற சில கொடிய நோய்கள் இவ்­வு­லகில் இருந்து ஏறத்­தாழ இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளன.
ஆகவே கொரோனா வைரஸ் தடுப்­பூசி என்­பது தற்­போது காணப்­படும் சர்­வ­தேச கொரோனா பரவல் நிலையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு முக்­கி­ய­மான ஆயுதம் என்றால் மிகை­யா­காது.

கொரோனா வைரஸ் தடுப்­பூ­சியின் முக்­கி­யத்­துவம் என்ன ?
· கொரோனா நோய்த் தொற்­றுக்­குள்­ளா­வ­தற்­கான தன்­மையை குறைக்­கின்­றது.
· நோய்த் தொற்று ஏற்­பட்­டாலும் , அதன் வீரி­யத்­தன்­மையை பெரு­ம­ளவில் குறைக்­கின்­றது.
· நோய்த் தொற்­றினால் ஏற்­படும் இறப்பு வீதத்தை பெரு­ம­ளவில் குறைக்­கின்­றது.
· சில­வே­ளை­களில் நீங்கள் நோய்த் தொற்­றுக்­குள்­ளாகி உங்­க­ளுக்கு கொரோனா நோய­றி­குறி தென்­ப­டாத நிலையில் உங்­களைச் சுற்­றி­யுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயோ­தி­பர்கள் மற்றும் சிறார்­க­ளுக்கு கொரோ­னாவை பரப்பும் தன்­மையை குறைக்­கலாம் .
· மக்கள் தொகையில் அதி­க­மா­னோ­ருக்கு தடுப்­பூசி ஏற்­று­வதன் மூலம் கூட்­டெ­திர்ப்பு சக்­தியை (herd immunity) அடை­யலாம். இது சமூ­கத்தில் வைரசு பரம்­பலை கட்­டுப்­ப­டுத்தும்.
· மேலும் மக்கள் தொகையில் அதி­க­மா­னோ­ருக்கு தடுப்­பூசி ஏற்­று­வ­தன்­மூலம் வைரஸ் பிறழ்­வுகள் (Virus mutations) ஏற்­பட்டு வீரி­ய­மான வைர­சுக்கள் புதி­தாக உரு­வா­கு­வதை குறைக்­கலாம்.

கொரோனா வைரஸ் தடுப்­பூ­சி­யினால் பக்­க­வி­ளை­வுகள் ஏற்­ப­டுமா?
இன்­றைய உலகில் பயன்­பாட்­டி­லுள்ள ஏறக்­கு­றைய அனைத்து மருந்­து­களும் நன்­மையைத் தரும் அதே­வே­ளையில் பக்­க­வி­ளை­வு­களும் காணப்­ப­டு­கின்­றன. நன்­மைகள் பெரி­ய­தா­கவும் பக்­க­வி­ளை­வுகள் சிறி­ய­தா­கவோ அல்­லது பாரிய பக்­க­வி­ளை­வுகள் புறக்­க­ணிக்­கத்­தக்க அளவில் நிக­ழும்­போது, அவை சிறந்த மருந்­து­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­றன.
இந்­த­வ­கையில் கொரோனா தடுப்­பூ­சி­யா­னது பாரி­ய­ளவில் மக்­க­ளுக்கு பய­ன­ளிக்கக் கூடி­ய­தா­கவும், பல சிறிய பக்­க­வி­ளை­வு­க­ளை­கொண்­ட­தா­கவும் மிக மிக அரி­தாக அல்­லது புறக்­க­ணிக்­கத்­தக்க அளவில் நிக­ழக்­கூ­டிய பாரிய பக்­க­வி­ளை­வு­க­ளையும் கொண்­டது.
பக்­க­வி­ளை­வுகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மற்றும் வெவ்­வேறு வகை­யான தடுப்­பூ­சி­க­ளுக்­கி­டையில் வேறு­ப­டக்­கூ­டி­யவை.
பொது­வாக(Common side effects) நிக­ழக்­கூ­டிய சிறிய பக்­க­வி­ளை­வுகள், உதா­ர­ண­மாக:
· தடுப்­பூசி ஏற்­றப்­பட்ட இடத்தில் ஏற்­ப­டக்­க­கூ­டிய தற்­கா­லிக வலி
· காய்ச்சல்
· உடல்­வலி
· தலை­வலி
· களைப்­புத்­தன்மை
இவை உட­ன­டி­யா­னவை,தற்­கா­லி­க­மா­னவை, சாதா­ர­ண­மா­னவை.
மேலும் இவ்­வா­றான அறி­கு­றிகள்,எம­து­டலில் தடுப்­பூசி தனது நோய் எதிர்ப்பு சக்­தியை வலுப்­ப­டுத்தும் செயற்­பாட்டை ஆரம்­பித்­துள்­ளது என்­ப­தனை குறித்து நிற்­கின்­றது.

அரி­தான (Rare side effects) நிக­ழக் ­கூ­டிய நடுத்­தர -பெரிய பக்­க­வி­ளை­வுகள்
· சிறிய ஒவ்­வாமை (mild allergic reaction)
· கடு­மை­யான ஒவ்­வாமை (severe allergic reaction or Anaphylaxis)
இவை தடுப்­பூசி ஏற்­றப்­பட்டு 30 நிமி­டங்­க­ளுக்குள் நிக­ழக்­கூ­டி­யவை. இதற்­காக வேண்டி தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ள­வர்கள் 30 நிமி­டங்கள் தரித்­துச்­செல்­லு­மாறு வேண்­டப்­ப­டுவர். இவை உட­ன­டி­யான சிகிச்­சை­யினால் குணப்­ப­டுத்­தக்­கூ­டி­யவை.
மிக மிக அரி­தாக (Very Rare side effects) நிக­ழக்­கூ­டிய கடு­மை­யான பக்­க­வி­ளை­வுகள்
· குறிப்­பாக Astrazeneca Vaccine- குரு­தி­யு­றைவு. இது ஒரு மில்­லியன் தடுப்­பூசி பெற்­ற­வர்­களில் நால்­வ­ருக்கு (4:1,000,000) எனும் விகி­தத்தில் நிகழ்ந்­துள்­ளது.

யார் தடுப்­பூ­சி­யை­ப் பெற தகு­தி­யா­ன­வர்கள்?
18 வயதுக்கு மேற்­பட்­ட­வர்கள் (எனினும் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்ட வய­தெல்லை சுகா­தார அமைச்­சினால் தீர்­மா­னிக்­கப்­படும்)

யாருக்கு தடுப்­பூசி வழங்­கப்­ப­ட­மாட்­டாது ?
· 18 வய­துக்­குட்­பட்­ட­வர்கள்
· கர்ப்­பிணித் தாய்மார்
· கடந்த காலத்தில் கடு­மை­யான ஒவ்­வாமை (severe allergic reaction or Anaphylaxis) ஏற்­பட்­ட­வர்கள்
· தடுப்­பூ­சியில் உள்ள பதார்த்தம் ஒன்­றிற்கு எதி­ரான ஒவ்­வா­மையை கொண்­ட­வர்கள்.
மேலும் குரு­தி­யு­றை­யாமை அல்­லது கடந்த காலங்­களில் நாளத்தில் குரு­தி­யு­றைவு ஏற்­பட்­ட­வர்கள் தடுப்­பூசி செலுத்­தப்­படும் நாளில் இவற்றை அங்­குள்ள வைத்­தி­ய­ரிடம் கூறிக்­கொள்­வது சிறந்­தது.
குறிப்­பாக Sinopharm தடுப்­பூ­சியை பெற இருப்­ப­வர்கள் , கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத வலிப்பு நோய் ( uncontrolled Epilepsy) மற்றும் Gullain-Barre syndrome போன்ற கடு­மை­யான நரம்­பு­நோய்­களை கடந்த காலங்­களில் எதிர்­கொண்­டி­ருப்பின் அவற்­றையும் வைத்­தி­ய­ரிடம் கலந்­து­ரை­யா­டு­வது சிறந்­தது.

கடந்த காலங்­களில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­கி­யி­ருப்பின் தடுப்­பூ­சி­ பெ­ற­ மு­டி­யுமா ?
ஆம். கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து குண­மாகி இரண்டு வாரங்கள் கடந்த­ பின்னர் பெற­மு­டியும்.

எத்­தனை தட­வைகள் தடுப்­பூ­சியை செலுத்­த­வேண்டும் (Vaccine shots)?
இரண்டு தட­வைகள். இரண்டு தடுப்­பூ­சி­க­ளுக்­கி­டை­யி­லான ஆகக்­கு­றைந்த இடை­வெளி நான்கு வாரங்­க­ளாகும்.

எத்­தனை வகை­யான தடுப்­பூ­சிகள் தற்­போது எமது நாட்டில் செலுத்­தப்­ப­டுகின்­றன?
· Covishield தடுப்­பூசி- ( இது Oxford-AstraZeneca தடுப்­பூ­சியின் இந்­திய நாட்டின் தயா­ரிப்­பாகும் )
· Sinopharm தடுப்­பூசி- இது சீன நாட்டின் தயா­ரிப்­பாகும்.
· Sputnik V தடுப்­பூசி- இது ரஷ்யா நாட்டின் தயா­ரிப்­பாகும்.
தடுப்­பூ­சியின் செயல்­திறன் (Efficacy) மற்றும் பக்க விளை­வு­களின் தன்மை (side effects profile) என்­பன இவற்­றுக்­கி­டையில் வேறு­படும். இவை அனைத்தும் இல­வ­ச­மா­கவும் பாது­காப்­பான முறை­யிலும் தற்­போது வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் எமக்கு விருப்­ப­மான தடுப்­பூ­சியை எம்மால் தெரி­வு­செய்ய முடி­யாது.
தற்­போ­தைய கால­கட்­டத்தில் சர்­வ­தேச கொரோனா பர­வல்­நி­லையை (Pandemic) எதிர்­கொண்­டுள்ள நாம் உலக சுகா­தார நிறு­வ­னத்­தினால் அனு­ம­திக்­கப்­பட்­டதும் இல­கு­வாக கிடைக்கக் கூடி­ய­து­மான தடுப்­பூ­சியை பெற்று எமது பெறு­ம­தி­யான உயிர்­களை பாது­காத்துக் கொள்­வதே புத்­தி­சா­லித்­த­ன­மாகும்.

கொரோனா வைரஸ் தடுப்­பூ­சி­யினால் கொரோனா தொற்று ஏற்­ப­டுமா?
உறு­தி­யாக இல்லை எனக்­கூ­ற­மு­டியும். இது அனைத்து கொரோனா தடுப்­பூ­சி­க­ளுக்கும் பொருந்தும்.

தடுப்­பூ­சியை ஏற்­றிக்­கொண்ட ஒரு­வ­ருக்கு தொற்று ஏற்­ப­டு­மி­டத்து அக்­கு­றிப்­பிட்ட நபர் கொரோனா வைர­ஸினை பரப்ப சாத்­தி­ய­முண்டா?
தடுப்­பூ­சியை ஏற்­றிக்­கொண்ட ஒரு­வ­ருக்கு தொற்று ஏற்­ப­டு­மி­டத்து, அத்­தொற்­றா­னது நோய­றி­குறி தென்­ப­டாத நிலையில் உடலில் காணப்­பட இடமுண்டு. தடுப்பூசி கொரோனா தொற்று பரவலின் வீரியத்தன்மையை குறைக்கின்றபோதிலும், பரவலை முற்று முழுதாக தடுப்பதில்லை . இதன்காரணமாக, தடுப்பூசியை ஏற்றிக்கொண்டபோதிலும் மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் ,சமூக இடைவெளியை பேணல் என்பவற்றை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தற்போது பயன்பாட்டிலுள்ள கொரோனா தடுப்பூசிகள் மாறுபட்ட (Variant) அல்லது பிறழ்வுபட்ட (mutated) வைரசுகளுக்கெதிராக செயற்படுமா?
தற்போதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கமைவாக, பொதுவாக தற்போது பயன்பாட்டிலுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஆகக் குறைந்தது, பகுதியளவேனும் மாறுபட்ட அல்லது பிறழ்வுபட்ட வைரசுகளுக்கெதிராக செயற்படும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
மேற்­படி விட­யங்கள் கொவிட் தடுப்­பூசி தொடர்­பான போது­மான தெளிவை வழங்­கி­யி­ருக்கும் என நம்­பு­கிறேன். அந்த வகையில் உங்­க­ளது பிர­தே­சங்­களில் தடுப்­பூசி வழங்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மானால் தாம­தி­யாது சென்று அதனைப் பெற்றுக் கொள்­வதே நமக்கும் நமது குடும்­பத்­திற்கும் நாட்­டுக்கும் பாதுகாப்பானதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.