முஸ்லிம் சமூகத்தைப் பணயம் வைத்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்

0 719

ஏ.ஜே.எம்.நிழாம்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நிகழ்ந்த குண்டுத் தாக்­கு­தல்கள் அர­சியல் நோக்கம் கொண்­ட­வை­யாகும் என கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை முடி­வாகக் குறிப்­பிட்­ட­துடன் ஜனா­தி­ப­தியின் விசா­ர­ணைக்­குழு அறிக்கை திருப்தி தர­வில்லை, முறை­யான விசா­ரணை வேண்டும், இன்றேல் சர்­வ­தே­சத்தை நாட­வேண்­டி­வரும் எனவும் கூறி­யுள்ளார். அத்­தாக்­கு­தல்­களில் மூன்று கிறிஸ்­தவ ஆல­யங்­களும் நூற்­றுக்­க­ணக்­கான கிறிஸ்­த­வர்­களும் அழி­வுற்­றதால் நிகழ்ந்­தவை பற்றி இவ­ரது கருத்­துக்­களே முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

சர்­வ­தேச முஸ்லிம், கிறிஸ்­தவப் பகையின் விளைவே இத்­தாக்­கு­தல்கள் என்னும் செய்தி முதலில் பர­வ­லா­னது. சில முஸ்­லிம்­களின் பெயர்கள் இதில் அடி­பட்­ட­தாலும் மூன்று கிறிஸ்­தவ ஆல­யங்கள் தாக்­கப்­பட்டு நூற்­றுக்­க­ணக்­கான கிறிஸ்­த­வர்கள் அழி­வுக்­குள்­ளா­ன­தா­லுமே அத்­த­கைய நம்­பிக்கை வலுப்­பெற்று முஸ்லிம் கிறிஸ்­தவக் கல­வரம் நேரலாம் என்னும் நிலை ஏற்­பட்­டது. உடனே கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அமைதி காக்­கும்­படி கிறிஸ்­த­வர்­க­ளிடம் வேண்­டிக்­கொண்­டதால் கல­வர சூழல் ஏற்­ப­ட­வில்லை. இது முழு­தாக விட­யத்தை அறி­யமுன் விடுத்த வேண்­டு­கோ­ளாகும். எனினும் முஸ்லிம் விரோதப் பேரி­ன­வா­திகள் கிறிஸ்­தவ அனு­தா­பத்தின் பெயரால் சில நக­ரங்­களில் முஸ்­லிம்­களைத் தாக்­கினர். மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அங்­கெல்­லாம்போய் நிலை­மையை சுமு­க­மாக்­கினார். அவர் அவ்­விதம் செய்­தி­ருக்­கா­விட்டால் முஸ்லிம் விரோதப் பேரி­ன­வா­திகள் கிறிஸ்­த­வர்­க­ளையும் தம்­மோடு இணைத்­துக்­கொண்டு முஸ்­லிம்­களைப் பேர­ழி­விற்கு உள்­ளாக்­கி­யி­ருப்­பார்கள்.

அவ­ரது அத்­த­கைய அப்­போ­தைய செயற்­பாட்­டுக்­காக இலங்கை முஸ்லிம் சமூகம் அவ­ருக்கு பெரிதும் நன்­றிக்­கூறக் கட­மைப்­பட்­டுள்­ளது எனக் கூற­லாமா? அதே கால­கட்­டத்தில் அது­ர­லியே ரத்ன தேரர் கண்டி தலதா மாளி­கைக்கு அருகே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக உப­வாசம் இருக்க ஞான­சார தேரர் முஸ்லிம் அமைச்­சர்­க­ளையும் ஆளு­நர்­க­ளையும் நீக்­கா­விட்டால் களி­யாட்­டம்தான் என்றார். அந்த நிகழ்வில் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை ஏன் கலந்து கொண்டார். பெளத்த சிங்­கள யாப்பு, பெளத்த சிங்­கள அரசு, பெளத்த சிங்­கள அமைச்­ச­ரவை என்­றெல்லாம் அங்கு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­ட­னவே. அங்கு இவர் எதற்­காகப் போனார். அந்த கூட்­டத்தில் ஞான­சார தேரர் முஸ்லிம் விரோதக் கருத்­துக்­களைக் கடு­மை­யாகப் பரப்­புரை செய்து எச்­ச­ரிக்­கையும் விடுத்­தி­ருந்தார். பெளத்த சிங்­க­ளவர் மட்டும் என்னும் கூட்­டத்­திலும், உப­வா­சத்­திலும், கிறிஸ்­தவ மதத்­த­லைவர் ஏன் கலந்து கொண்டு ஆசி வழங்க வேண்டும். இது தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் மட்­டு­மல்ல கிறிஸ்­த­வர்­க­ளையும் பிரிப்­ப­தாகும் என்­பது தெரி­யாதா? பெளத்த சிங்­க­ள­வா­தமே இலங்­கையின் பேரி­ன­வா­த­மாகும். பெளத்த யாப்பு, பெளத்த அரசு, பெளத்த அமைச்­ச­ரவை என்­ப­ன­வற்றை இவர் சரி கண்­டாரா? அந்த வகையில் தான் பெரும்­பான்மை மக்­களின் மனங்கள் துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு ஆட்­சி­மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. ஆக தேசிய பாது­காப்பை முன்­வைத்து தனி நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை தனித்து அமோக மக்­க­ளா­ணை­யோடு உரு­வா­கவும் அந்த குண்டு வெடிப்­பு­களே கார­ண­மா­கி­யி­ருந்­தன. தற்­போ­தைய நிலை என்ன?

போதிய புல­னாய்வுத் தக­வல்கள் கிடைத்தும் கூட ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தது குறித்து பாதிக்­கப்­பட்ட 289 பேர் நஷ்ட ஈடு கோரி வழக்­குத்­தாக்கல் செய்­துள்­ளார்கள். முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட 6 பேர் மீது இரு மாவட்ட நீதி­மன்­றங்­களில் இவ் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு மாவட்ட நீதி­மன்­றங்கள் மூலம் 1250 மில்­லியன் ரூபா கோரப்­பட்­டுள்­ளது. கட்­டு­வாப்­பிட்­டி­யவில் பாதிக்­கப்­பட்ட 182 பேர் நீர்­கொ­ழும்பு நீதி­மன்­றத்­திலும், கொழும்பு கொச்­சிக்­க­டையில் நிகழ்ந்த தாக்­கு­தலால் பாதிக்­கப்­பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதி­மன்­றத்­திலும் வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர். இவற்றில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, தேசிய புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரு­மான நிலந்த ஜய­வர்­தன, முன்னாள் சட்­டமா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

இவ்­விரு வழக்­கு­களும் பாது­காப்­புத்­து­றையை மட்­டுமே குறிக்­கின்­றன என்­ப­தையும் முஸ்­லிம்­க­ளை­யல்ல என்­ப­தையும் நாம் அவ­தா­னிக்க வேண்டும். கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இதில் அர­சியல் நோக்கம் உள்­ளது எனவும் விசா­ர­ணையில் திருப்­தி­யில்லை எனவும் சர்­வ­தே­சத்­துக்குக் கொண்டு செல்வேன் எனவும் குறிப்­பிட்­டி­ருக்­கையில் அந்த குண்டு வெடிப்­பு­களால் பாதிக்­கப்­பட்டோர் பாது­காப்­புத்­துறை மீது வழக்­குகள் தொடுத்­தி­ருக்­கையில் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் ஏன் விரட்டி விரட்டி வேட்­டை­யா­டு­கி­றார்கள். இதன் நோக்கம் என்ன? அரபுப் போரா­ளி­களின் இலக்கு மேலை­நாட்டு ஏகா­தி­பத்­தி­ய­வா­த­மே­யாகும். அவர்­க­ளுக்கு இலங்­கையில் வேலை­யில்லை. எனினும் அதன் பெயரைப் பாவித்து சில முஸ்­லிம்­களைப் பயன்­ப­டுத்திப் பயிற்சி வழங்கிக் கிறிஸ்­தவர் மீது தாக்­குதல் தொடுத்து முஸ்லிம் கிறிஸ்­தவ சண்­டையை மூளச் செய்து அதன் மூலம் கிறிஸ்­த­வரின் அப­ரி­மித வாக்­கு­களைப் பெற்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பயங்­க­ர­வா­தப்­பூச்­சாண்­டியைக் கிளப்பி அதன் மூலமும் பெரு­வா­ரி­யாக சிங்­கள வாக்­கு­களைப் பெற அவர்­களின் உள்­ளங்­களைத் துரு­வப்­ப­டுத்­து­வதா?இவற்றின் மூலம் வடக்கு கிழக்குத் தமி­ழரின் கோரிக்­கை­களைத் திசை திருப்பி அவர்­களின் சர்­வ­தேச முன்­னெ­டுப்­பு­க­ளையும் பின் தள்ள வைப்­பதா? கடந்­த­கால பேரி­ன­வாத செயற்­பா­டுகள் தாம் இவ்­வி­த­மெல்லாம் நம்மை எண்ண வைக்­கி­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு அறி­மு­க­மற்ற ஏழெட்டு முஸ்­லிம்கள் திடீ­ரென சம்­பந்­தப்­பட்ட ஒரு செய­லுக்­காக அந்த வெடிப்­புகள் நிக­ழ­வில்லை.அவர்கள் குறிப்­பிட்ட காலம்­வரை பாது­காப்பும் பயிற்­சியும் வளங்­களும் பெற்று இயங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவற்­றுக்கு முழு முஸ்லிம் சமூ­கமும் பொறுப்­பல்ல. இவர்­க­ளுக்கு இந்த வாய்ப்­புக்­களை வழங்­கிய ஒரு மறை­கரம் இருக்­கி­றது. அது எது என்­பது இது­வரை வெளிச்­சத்­துக்கு வர­வில்லை. அதுவே முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் பணயம் வைத்து தனது இலக்கை எட்­டி­யி­ருக்­கி­றது. கிறிஸ்­த­வர்­களும் இதில் பண­ய­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவையே பேரி­ன­வா­த­மாகும்.

மேற்­படி குண்­டுத்­தாக்­கு­தல்கள் அர­சியல் நோக்கம் கொண்­டவை எனவும் ஜனா­தி­ப­தியின் விசா­ர­ணைக்­குழு அறிக்கை திருப்தி தர­வில்லை எனவும் முறை­யான விசா­ரணை இல்­லா­விட்டால் சர்­வ­தே­சத்தை நாட­வேண்­டி­வரும் எனவும் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை குறிப்­பிட்­டுள்ளார். ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­தல்கள் அர­சியல் நோக்கம் கொண்­டவை என இவர் குறிப்­பி­டு­வது இங்கு ஒரு முக்­கி­ய­வி­ட­ய­மாகும். அப்­ப­டி­யானால் இவ­ருக்கு அந்த அர­சியல் நோக்கம் பற்றித் தெரியும் எனக் கூற­லாமா? இல்­லா­விட்டால் அவர் இதை இப்­படி உறு­தி­யாகக் கூற மாட்டார். இவர் ஒரு சாதா­ரண ஆளல்ல. கிறிஸ்­த­வ­ம­த­குரு. எனினும் பேரி­ன­வா­தத்தின் திட்­டத்தை பின்­புதான் இவர்­அ­றிந்து கொண்­டி­ருக்­கலாம். இல்­லா­விட்டால் இவர் அது­ர­லிய தேரரின் உப­வா­சத்­திற்கு போயி­ருக்­க­மாட்டார் என்றே நினைக்­கிறேன்.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிய­மித்த விசா­ர­ணைக்­குழு அவர் மீதே குற்றம் சுமத்­தி­யி­ருக்­கி­றது. ஞான­சார தேரர்­மீதும் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கி­றது. எனினும் அவ்­வி­ரு­வ­ருக்கும் குற்ற விலக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இன்னும் என்­னென்ன மாற்­றங்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­ற­னவோ? என்­ப­தால்தான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை விசா­ரணை அறிக்­கையில் திருப்­தி­யில்லை என்­கி­றாரோ? இல்­லா­விட்டால் சர்­வ­தே­சத்தை நாட வேண்­டி­வரும் எனவும் அவர் கூறி­யி­ருக்­கி­றாரே? என்ன அர்த்தம் உள்­நாட்டு விசா­ர­ணை­களில் நம்­பிக்கை இல்லை என்­பது தானே. இதையே மனித உரிமை விட­யத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தொடர்ந்து 12 ஆண்­டு­க­ளாகக் கோரிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஏதா­வது நிவா­ரணம் கிடைத்­ததா இல்­லையே. சில­வேளை இது பௌத்­த­ருக்கும் கிறிஸ்­த­வ­ருக்கும் இடை­யி­லான நெடுங்­கால முறு­க­லா­கவும் ஆகி­விடும். ஞான­சார தேரரும் அது­ர­லியே ரதன தேரரும் குறிப்­பி­டு­வ­துபோல் எதிர்­கா­லத்தில் பௌத்த யாப்பு பௌத்த ஆட்சி பௌத்த அமைச்­ச­ரவை ஆகி­யவை அமையும் பட்­சத்தில் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை கோரும் முறை­யான விசா­ரணை நீர்த்துப் போய் கிறிஸ்­த­வர்கள் பாதிக்­கப்­ப­டலாம். இது ஈஸ்டர் தாக்­கு­தலை விடவும் ஆபத்­தாகும்.

ஆக, சர்­வ­தேச விசா­ரணை என அவர் குறிப்­பி­டு­வது அமெ­ரிக்கா உட்­பட ஐரோப்­பிய கிறிஸ்­தவ நாடு­க­ளையே என நினைக்­கிறேன். தற்­போது சீனாவின் பக்கம் அதிகம் சார்ந்­தி­ருக்கும் இலங்கை அதற்­கெல்லாம் மசி­யப்­போ­வ­தில்லை. இதனால் அர­சியல் கெடு­பி­டி­க­ளுக்கும் அவர் ஆளா­கலாம். ஒரு­வேளை இவர் தனது கோரிக்­கையை மனித உரிமைப் பேர­வையின் அக்­டோபர் மாதக் கூட்­டத்தில் முன் வைக்கும் வாய்ப்பு உண்டு. தற்­போது 46/1 கூட்­டத்­தொ­டரில் தோல்­வி­யுற்­றி­ருக்கும் இலங்கை இதனால் மேலும் பாதிப்­பு­று­மானால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் தலை மீது பெரும் பழி விழ நேரிடும்.

பேராயர் சர்­வ­தேச விசா­ரணை பற்றிக் குறிப்­பி­டு­கையில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான ஆதா­ரங்­களைத் திரட்ட வேண்­டி­யுள்­ளதால் அவர்­களைத் தண்­டிக்க கால­தா­ம­தங்கள் ஏற்­படும் எனப் பாது­காப்புச் செய­லாளர் கமல் குண­ரத்ன குறிப்­பி­டு­கிறார். அப்­ப­டி­யானால் இனித்­தானா ஆதா­ரங்­களைத் திரட்ட வேண்டும். ஆதா­ரங்கள் இன்­றியும் ஆதா­ரங்­களைச் சேக­ரிக்­கா­ம­லுமா கைது செய்­தி­ருக்­கி­றார்கள். தக்க ஆதா­ரங்­க­ளோடு கைது செய்­வது வேறு. சந்­தே­கத்தின் பெயரால் ஆதா­ரங்­க­ளின்றி கைது செய்து விட்டு ஆதா­ரங்­களைத் திரட்­டு­வது வேறு, ஒருவன் மீதான சந்­தேகம் அவனைக் குற்­ற­வா­ளி­யாக்­கி­விடக் கூடாது. ஒருவன் மீதான நம்­பிக்கை அவனை சுத்­த­வா­ளி­யாக்­கி­வி­டவும் கூடாது.

விரை­வான விசா­ர­ணைக்குப் பின் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டால் மட்­டுமே தண்­டிக்­கப்­பட வேண்டும். தண்­டிக்க கால தாம­தங்கள் ஏற்­படும் என்றால் என்ன அர்த்தம். எத்­தனை கால­மா­யினும் சிறையில் இருக்க வேண்­டி­யது தான். இது இரு­வகை தண்­ட­னைகள் அல்­லவா? வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்ள போதும் தண்­டிக்க வலு­வான ஆதா­ரங்கள் வேண்டும். அவற்­றையே திரட்­டு­கின்றோம் எனப் பாது­காப்பு செய­லாளர் குறிப்­பி­டு­கிறார். அப்­ப­டி­யானால் தண்­டிப்­ப­தற்­கான ஆதா­ரங்கள் இவ­ரிடம் இல்லை என்­றா­கி­றது. அப்­ப­டி­யானால் எதற்­காக தடுத்து வைத்­தி­ருக்க வேண்டும். பிணையில் விட்­டு­விட்டுத் தக்க ஆதா­ரங்­களைச் சேர்த்துக் கொண்டு கைது செய்­ய­லாமே. தக்க ஆதா­ரங்கள் இருந்தும் உட­னடி நட­வ­டிக்கை இல்லை. ஆதா­ரங்கள் இல்­லா­மலும் உட­னடி நட­வ­டிக்கை என்­ப­தி­லேயே அர­சியல் தலை­யீடு இருக்­கி­றது.

முழு நாட்­டையும் உலுக்கி அதிர்ச்­சி­ய­டையச் செய்த அந்த தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களில் 40 அல்­லது 50 பேரை மட்டும் சார்ந்­ததா? இல்லை. அவர்கள் சக்­தி­மிக்க ஒரு தரப்பால் பயன்­ப­டுத்­தப்­பட்டு மட்­டுமே இருக்க முடியும். காரணம் முழு­மை­யான கட்­ட­மைப்பைக் கொண்ட தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளா­லேயே ஒரு நொடியில் அப்­படி செய்ய முடி­ய­வில்லை. எனவே சொற்ப முஸ்­லிம்கள் களத்தில் நிறுத்­தப்­படும் மனித கேடயத்தைப் போல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் முஸ்லிம்களுக்கு இந்த வலு இருந்திருக்குமாயின் வடக்கு கிழக்கில் தமிழ் போராளிகளிடமும் தெற்கில் ஞானசார தேரரிடமும் வருடக் கணக்கில் தொல்லைக்குட்பட்டிருக்கமாட்டார்கள். கிழக்கில் ஓர் முஸ்லிம் ஆயுதக் குழுவை உருவாக்கித் தமிழ் தரப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முஸ்லிம் தனித்துவக் கட்சிகளை முடக்கவும் பேரினவாதம் கருதியிருக்கலாம். அதற்கென மத தீவிர வாத முஸ்லிம்களைத் தெரிவு செய்து பிக்குகளோடு மோத விட்டு சிங்கள மக்களை உசுப்பேற்றி அவர்களின் வாக்குகளை அள்ளிப் பெறுவதோடு முஸ்லிம் சமூகத்தையும் முடக்க பேரினவாதம் எண்ணியிருக்கலாம். பின்வரும் கேள்விகளுக்கு விடைகள் தேவை. சம்பவம் நிகழும் முன் இந்திய புலனாய்வுத் தகவல் கிடைத்தது என்கிறார்கள். அதன்படி ஏன் செயற்படவில்லை. சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு பெண் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டாள் என்கிறார்கள். அந்த இக்கட்டான கட்டத்தில் ஒரு பெண்ணால் அப்படி பாதுகாப்பாகத் தனித்துக் கடல் கடக்க முடியுமா? சில சிங்கள இளைஞர்களும் சிலை உடைத்த தகவல் மறைக்கப்பட்டதே. சிலை உடைத்த இந்தியர் சிறையில் மாண்டு போனாரே அவர் ஏன் எப்படி இறந்தார்?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.