வஸீமின் படு­கொ­லைக்கு 9 வரு­டங்கள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் கொலை­யா­ளிகள்

0 587

எம்.எப்.எம்.பஸீர்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு கொலை செய்­யப்­பட்டு 9 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட நிலையில் ஜனாஸா அவ­ரது காருக்குள் இருந்து நார­ஹேன்­பிட்டி சாலிகா மைதா­னத்­துக்கு அருகில் இருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் இன்று வரை குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. கொலை­யா­ளிகள் அடை­யாளம் காணப்­ப­டவோ கைது செய்­யப்­ப­டவோ இல்லை.

இந் நிலையில், கடந்த 17 ஆம் திகதி ஞாயி­றன்று, வஸீம் தாஜு­தீனின் சகோ­தரி ஆய்ஷா தாஜுதீன், தனது முகப் புத்­த­கத்தில் வஸீமின் படு­கொ­லைக்கு இது­வரை நியாயம் கிடைக்­கா­மையை சுட்­டிக்­காட்டி, ‘ நீதி என்­ப­து­ஒரு மாயை ‘ என வர்­ணித்­தி­ருந்தார்.
“புயலைப் போல, பல ஆண்­டுகள் கடந்­து­விட்­டன, விட­யங்கள் அமை­தி­யா­கி­விட்­டன, நீதி என்­பது ஒரு மாயை. ஆனால் காயங்கள் இன்னும் புதி­தா­கவே எரி­கி­றது. அதனை ஒரு போதும் வெல்ல முடி­யாது. 9 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அந்த சமயம் நடந்­தது என்ன என்­பது இன்னும் எமக்கு கேள்விக் குறியே. மறக்க முடி­யாமல் உமது இறுதி நாள் தரு­ணங்­களில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம் வஸீம். நாம் உன்னை இழந்­து­விட்டோம்.” என ஆய்ஷா தாஜுதீன் பதி­விட்­டுள்ளார்.

கடந்த 2015 இல் ஆட்சி மாற்­றத்­தின்­போது வஸீம் தாஜுதீன் கொலை­யா­ளி­களை பிடிப்போம் என்ற வாக்­கு­று­திக்கும் முக்­கிய பங்கு இருந்­தது. எனினும் அது நடக்­கவே இல்லை. பல தடங்­கல்­களைக் கடந்து அந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, சந்­தேக நபர்­களை நெருங்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில், அதனை விசா­ரித்த சி.ஐ.டி. விசா­ரணை அதி­காரி, அவ்­வி­சா­ர­ணை­களை நெறிப்­ப­டுத்­திய உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ( தற்­போது பொலிஸ் அத்­தி­யட்சர்) உள்­ளிட்ட குழு, சி.ஐ.டி.யை விட்டே மாற்­றப்­பட்டு விட்­டனர். இந்த 8 வரு­டத்தில் சாட்­சி­யங்­களை மறைத்­தமை, அழித்­தமை தொடர்பில் மட்டும் மூவர் கைது செய்­யப்­பட்­டனர்.

மேல் மாகா­ணத்தில் கொலை நடந்த அன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த அனுர சேன­நா­யக்க, அப்­போது கொலை நடந்த பொலிஸ் பிரிவின் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் பெரேரா ஆகி­யோ­ருக்கு எதி­ராக தக­வல்­களை மறைத்­தமை தொடர்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டது. அக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அவர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில், கொலையின் பின்னர் மேல­திக ஆய்­வுக்­காக எடுக்­கப்­பட்ட வஸீமின் உடற் பாகங்கள் சில காணாமல் போனமை தொடர்பில் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணைக்கு அமை­வாக முன்னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந் நிலையில் அவர்­களில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, முன்னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகி­யோ­ருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் தண்­டனை சட்டக் கோவையின் 198 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் தண்­டனைக் குரிய குற்றம் ஒன்­றினை செய்­துள்­ள­தாக கூறி வழக்கு தொட­ரப்­பட்­டது. எவ்­வா­றா­யினும், வழக்கு விசா­ரணை ஆரம்­பத்தில் ஆனந்த சமரசேகரவும், பின்னர் அண்மையில் அனுர சேனநாயக்கவும் உயிரிழந்தனர். எனினும் கொலையாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. வஸீமின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. கொலையாளிகள் மாத்திரம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.