தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு கோரி ரிஷாத், ரியாஜ் உயர் நீதிமன்றில் மனு

தடுப்புக் காவல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரிக்கை

0 454

( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்­சரும், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் தம்மை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்­துள்­ளதை ஆட்­சே­பித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­துள்ளனர்.

அர­சி­ய­ல­மைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்­பு­ரைக்கு அமைய, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா ஊடாக, அவர்கள் இவ்­வாறு தனித் தனி­யாக அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை நேற்றும் நேற்று முன் தினமும் தாக்கல் செய்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யுதீன் கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்த மனுவில், சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜி.டி. குமா­ர­சிங்க, சி.ஐ.டி.யின் பொறுப்­ப­தி­காரி, சி.ஐ.டி. பணிப்­பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அர­சி­ய­ல­மைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்­பு­ரை­க­ளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

ரிஷாத்தின் சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா, தானே மனு­த­ார­ராக முன்­னின்று நேற்றுமுன்தினம் தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.பி. ஜய­சே­கர, சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜி.டி. குமா­ர­சிங்க, சி.ஐ.டி. பணிப்­பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அர­சி­ய­ல­மைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்­பு­ரை­க­ளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலை நடாத்­திய மொஹம்மட் இப்­ராஹிம் இன்சாப் அஹ­மட்­டுக்கு சொந்­த­மான குளோசஸ் எனும் செப்பு தொழிற்­சா­லை­யுடன் தொடர்­பு­பட்ட விவ­கா­ரத்தில் தன் மீது விரல் நீட்­டப்­பட்­டாலும், குறித்த நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­டைய கொடுக்கல் வாங்­கல்­க­ளுடன் தனக்கு எவ்­வித தொடர்­பு­களும் இல்லை என ஆவ­ணங்­க­ளையும் இணைத்து ரிஷாத் பதி­யுதீன் இந்த மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தான் கைது செய்­யப்பட்­டதும், 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவ­லில் வைக்க பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி வழங்­கிய அனு­ம­தியும் சட்­டத்­துக்கு முர­ணா­னது எனவும் குறித்த மனுவில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

அதன்­படி, குறித்த மனுவை விசா­ர­ணைக்கு ஏற்­கு­மாறும், சி.ஐ.டி. யில் தான் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தடுப்புக் காவல் உத்­தரவுக்கு இடைக்­காலத் தடை விதிக்­கு­மாறும் மனு­தாரர் கோரி­யுள்ளார். அத்­துடன் தனது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்ட ஈட்­டினை பிர­தி­வா­தி­க­ளிடம் இருந்து பெற்­றுத்தரு­மாறும் ரிஷாத், தனது சட்­டத்­த­ரணி ஊடாக உயர் நீதி­மன்றை கோரி­யுள்ளார்.

ரியாஜ் பதி­யு­தீ­னுக்­காக தானே மனு­தா­ர­ராக நின்று சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா நேற்று தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் ஏற்­க­னவே தான் ( ரியாஜ்) 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது. அத்­துடன் அப்­போது கைது செய்­யப்­பட்டு குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் தான் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், பின்னர் சாட்­சி­யங்கள் இல்­லை­யென்ற அடிப்­ப­டையில் 2020ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 29ஆம் திகதி விடு­தலை செய்­யப்­பட்­ட­தா­கவும் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் அதே குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் மீண்டும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வெள்­ள­வத்­தையில் வைத்து தன்னை கைது செய்­த­மையும், அது தொடர்பில் தடுத்து வைத்­துள்­ள­மையும் சட்ட விரோ­த­மா­னது எனவும் தனது அடிப்­படை உரி­மை­களை மீறும் வகையில் அந்த செயற்­பா­டுகள் உள்­ள­தா­கவும் ரியாஜ் பதி­யுதீன் சார்­பி­லான மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அதனால் தடுப்புக் காவல் உத்­த­ரவை ரத்து செய்து, அதற்கு எதி­ராக இடைக்­கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.