பெளத்தர்களிடையே ஆதிக்கத்தை மேம்படுத்தும் பொதுபலசேனா

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை

0 587

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பொது­பல சேனா அமைப்பு இலங்­கையில் பெரும்­பான்மை இன­மாக பெளத்­தர்­களின் ஆதிக்­கத்தை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­வ­தாக அமெ­ரிக்க அறிக்­கை­யொன்று குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம்,சர்­வ­தேச சமய சுதந்­திரம் தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள 2020 ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் சிவில் சமூக குழுக்­களின் கருத்­துப்­படி சமூக ஊட­கங்கள் சமய ரீதி­யான சிறு­பான்மை இனத்­தின்­மீது வெறுப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வதை இலக்­காகக் கொண்டு பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பத்­தி­ரிகை செய்­திகள் மற்றும் சிவில் சமூ­கத்தின் கருத்­துப்­படி பொது­பல சேனா போன்ற தேசிய அமைப்­புகள் பெரும்­பான்மை இன­மான பெளத்த மக்­களின் ஆதிக்­கத்தை மேம்­ப­டுத்தும் வகையில் சிறு­பான்மை இன மக்­களை ஏற்­றுக்­கொள்ள மறுத்து வரு­கின்­றன. குறிப்­பாக சமூக ஊட­கங்­களில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்ச்­சியைத் தூண்டி விடு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வ­தில்லை என சிவில் சமூக அமைப்­புகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளன எனவும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2020 மார்ச், ஜூன் மாதங்­க­ளுக்­கி­டையில் ஒன்­லைனில் (Online) வெளி­யான இனங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பு­ணர்ச்­சியைத் தூண்டும் வகை­யி­லான பேச்­சுக்­களில் (சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் மொழி­களில்)58 வீத­மா­னவை பல்­வேறு வகையில் முஸ்­லிம்­களை அல்­லது இஸ்­லாத்தைத் தாக்­கு­வ­தா­கவே அமைந்­துள்­ளன. அத்­தோடு 30 வீத­மா­னவை கிறிஸ்­த­வர்­க­ளையும் 5 வீத­மா­னவை தமி­ழர்கள் அல்­லது இந்து மதத்தைத் தாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளன.

2020 ஜன­வ­ரியில் முஸ்லிம் டாக்­ட­ரான சியாப்தீன் ஷாபி மீதான குற்­றச்­சாட்­டொன்று தொடர்பில் விசா­ர­ணை­யொன்று நடாத்­தப்­பட்­டது. டாக்டர் ஷாபி பல வரு­டங்­க­ளாக சிங்­கள பெண்­க­ளுக்கு பல­வந்­த­மாக கருத்­தடை (மல­டாக்கும்) அறுவைச் சிகிச்சை மேற்­கொண்டு வந்­தாக வைத்­தி­யத்­து­றையைச் சேர்ந்த 76 பணி­யா­ளர்கள் விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­ய­ம­ளித்­தனர். கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை குற்­றச்­சாட்டு தொடர்பில் ஆரா­யு­மாறு வைத்­திய நிபு­ண­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­போதும் 2019 முதல் அது நிலு­வை­யி­லேயே உள்­ளது. இது­வரை பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை.

அத்­தோடு டாக்டர் ஷாபி சந்­தே­கத்­துக்­கி­ட­மான வகையில் சட்­ட­வி­ரோ­த­மாக சொத்­துகள் திரட்­டி­ய­தாக கைது செய்­யப்­பட்டு 2019 இல் விடு­தலை செய்­யப்­பட்டார். சமூக ஊட­கங்கள் அவர் சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­ட­தாக குற்றம் சுமத்­தி­ய­தை­ய­டுத்து அவர் மீண்டும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். ஆனால் அவர்­மீது எந்­த­வொரு குற்­றத்­துக்கும் குற்­றப்­பத்­தி­ரிகை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் பொலி­ஸாரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க மஜிஸ்­திரேட் நீதிவான் வழக்­கினை 2021 மார்ச் மாதம் வரை தொடர்ந்தார்.

கொவிட் 19 தொற்று நோய் பரவல் தொடர்­பிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சமூக ஊட­கங்கள், தொலைக்­காட்சி மற்றும் அச்சு ஊட­கங்­களில் பிர­சாரம் செய்­யப்­ப­டு­வ­தாக முஸ்லிம் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் தக­வல்­க­ளின்­படி 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்­களில் முஸ்­லிம்கள் வேண்­டு­மென்றே கொவிட் 19 தொற்று நோயைப் பரப்­பு­வ­தாக சமூக ஊட­கங்­களில் பொய் குற்­றச்­சாட்­டுகள் முன் வைக்­கப்­பட்­டன. அதனால் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை பகிஷ்­க­ரிக்­கும்­ப­டியும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இதனை அதி­கா­ரிகள் மறுக்­க­வு­மில்லை.

கொவிட் 19 வைரஸ் தொற்று காலத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக தொடர்ந்து விஷ­மி­களால் வெறுப்­பு­ணர்வு தூண்­டப்­ப­டு­வ­தாக பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் புகார் செய்­யப்­பட்­டது. ஏப்ரல் 12 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் உட்­பட பல முஸ்லிம் அமைப்­புகள் மற்றும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் என்­பன பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தன. கடி­தத்தில் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கும்­ப­டியும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.

அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் அறிக்­கை­யின்­படி 2020 நவம்பர் 10 ஆம் திகதி அர­சாங்கம் கொவிட் 19 தொற்­று­நோயால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிப்­பது தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யி­ருந்த நிலையில், பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர், வஹாப்­வா­திகள் சமூ­கத்­துக்குள் ஊடு­ரு­வு­வ­தாக ஊட­கங்­களில் பிரசாரம் செய்தார்.

இனம் மற்றும் சமய ரீதி­யி­லான சிறு­பான்மை மக்கள் கெள­ர­வப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி ஒரு­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என அமெ­ரிக்­காவின் இலங்­கைக்­கான தூதுவர் அலைனா பி டெப் லிட்ஸ் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவின் இலங்­கைக்­கான தூதுவர் மற்றும் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள், ஜனா­தி­பதி, பிர­தமர், மற்றும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.