கொவிட் அச்சுறுத்தல்; இலங்கையர்களுக்கு இம்முறையும் ஹஜ் யாத்திரை சாத்தியமில்லை

பயணத்துக்கான முயற்சிகளில் ஈடுபடாதீர் என அரச ஹஜ் குழு அறிவிப்பு

0 689
  • சவூதி ஹஜ் அமைச்சின் ஹஜ் யாத்திரை குறித்த அறிவிப்புகள் கிடைத்தால் மக்களுக்கு தெளிவு படுத்தப்படும்

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவல் கார­ண­மாக இவ்­வ­ருடமும் இலங்­கை­யர்­க­ளுக்கு ஹஜ் கட­மைக்­கான வாய்ப்பு இல்­லை­யெ­னவும் அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு முஸ்­லிம்­களை வேண்­டி­யுள்­ளது.

ஷவ்வால் பிறை 7இல் சவூதி அரே­பி­யாவின் விமான நிலை­யங்கள் திறக்­கப்­படும் என சவூதி அரே­பியா ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­த­போதும் விமான நிலை­யங்கள் திறக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலை­தீவு போன்ற நாடு­களின் விமா­னங்­க­ளுக்கும் சவூதி அரே­பிய அரசு தடை­வி­தித்­துள்­ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையை கண்­டிப்­பான சுகா­தார வழி­காட்­டல்­க­ளுடன் அனு­ம­திக்­க­வுள்­ள­தா­கவும் யாத்­தி­ரி­கர்­களின் பாது­காப்பு உறுதி செய்­யப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­தி­ரைக்கு செயல்­மு­றைத்­திட்­ட­மொன்­றினை விரை­வில்­அ­றி­விக்­க­வுள்­ள­தா­கவும் சவூதி ஹஜ் அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தாலும் இது­வரை அவ்­வா­றான அறி­விப்பு இலங்­கைக்கு கிடைக்­க­வில்லை.

அவ்­வா­றான அறி­விப்பு கிடைக்­கப்­பெற்­றாலும் இவ்­வ­ருடம் இலங்­கையில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வது சாத்­தி­யப்­ப­ட­மாட்­டாது.

ஏனென்றால் ஹஜ் ­யாத்­திரை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் 14 நாட்கள் இலங்­கையில் தனி­மைப்­ப­டுத்­தலில் இருக்க வேண்டும். பிசிஆர் பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்டும். அத்­தோடு சவூதி அரே­பி­யா­விலும் பிசிஆர் பரி­சோ­தனை மேற்­கொள்­ள ­வேண்டும். எனவே தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களையே புனித தலங்களில் அனுமதிக்க முடியும் என ஏற்கனவே சவூதி அறிவித்துள்ளது. இவ்­வா­றான நடை­மு­றை­க­ளினால் ஹஜ் யாத்திரை சாத்தியப்படமாட்டாது.

சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் ஹஜ் யாத்திரை தொடர்பான அறிவிப்புகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்படும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.