பலஸ்தீனர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

0 529

பலஸ்­தீனின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளையும் பலஸ்­தீ­னத்தில் உள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்கள் மீதும் மேற்­கொண்­டுள்ள தாக்­கு­தல்­க­ளையும் வன்­மை­யாக கண்­டிப்­ப­தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, காஸா பிராந்­தியம் மற்றும் அல் அக்ஸா வளாகம் என்­பன மீது இஸ்ரேல் நடத்தி வரும் மனி­தா­பி­மா­ன­மற்ற கொடூர தாக்­கு­தல்­களை கண்­டிக்க முன்­வ­ரு­மாறு உலக நாடு­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறோம்.
இஸ்­ரேலின் விமான குண்டு வீச்­சினால் இது­வரை காஸாவில் 50 சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லாக 180 க்கும் அதி­க­மா­ன­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 1000 க்கும் அதி­க­மானோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.

இதே­வேளை பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ர­வாக சமூக ஊட­கங்­களில் முன்­வைக்­கப்­படும் கருத்­து­களை அகற்­று­வ­தற்கு சமூக ஊடக நிறு­வ­னங்கள் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யவை. இது மனித உரி­மை­க­ளுக்கு ஆத­ர­வான குரல்­களை நசுக்கும் முயற்­சி­யாகும். அதே­போன்று களத்தில் நின்று அறிக்­கை­யிடும் பல பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். காஸாவில் அமைந்­துள்ள அல்­ஜ­ஸீரா, அசோ­சியேட் பிரஸ் போன்ற பிர­தான சர்­வ­தேச ஊடக நிறு­வ­னங்­களின் அலு­வ­ல­கங்கள் மற்றும் அவற்றின் கலை­ய­கங்கள் அமைந்­துள்ள கட்­டிடம் இஸ்­ரே­லிய வான் படை­யி­னரால்‌ தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. இது ஊடக சுதந்­தி­ரத்­திற்கு இழைக்­கப்­பட்­டுள்ள மாபெரும் அத்­து­மீ­ற­லாகும்.

இவ்­வாறு இஸ்­ரேலின் மனித குலத்­துக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்­கின்­றன. அந்த வகையில் மேற்­படி தாக்­கு­தல்­களை நாம் கண்­டிப்­ப­துடன் பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரேலின் அடா­வ­டித்­த­னங்­களை முடி­வுக்குக் கொண்­டு­வர விரைந்து செயற்­ப­டு­மாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்­வ­தேச பொறி­மு­றை­களை கோரு­கிறோம். அத்­துடன் பலஸ்­தீன மண்ணில் அமைதி திரும்­பவும் பாதிக்­கப்­பட்ட மக்கள் விரைவில் குண­ம­டை­யவும் இந்த நன்­னாட்­களில் பிரார்த்­திக்­கு­மாறும் வேண்­டுகோள் விடுக்கிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.