தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் 3 தௌஹீத் அமைப்புக்கள் வழக்கு

• சமல், கமல், சவேந்திர, சுரேஷ் சலே உள்ளிட்டோர் பிரதிவாதிகள் • வர்த்தமானிக்கு இடைக்கால தடையும் கோரப்பட்டது

0 447

• சமல், கமல், சவேந்திர, சுரேஷ் சலே உள்ளிட்டோர் பிரதிவாதிகள்
• வர்த்தமானிக்கு இடைக்கால தடையும் கோரப்பட்டது

(எம்.எப்.எம்.பஸீர்)
பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்கள் சில, தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளன. அண்­மையில் தடை செய்­யப்­பட்ட 11 அமைப்­புக்­களில் உள்­ள­டங்கும் சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு, முத­லா­வது அடிப்­படை உரிமை மீறல் மனு­வினை தாக்கல் செய்­துள்­ளது.

சட்­டத்­த­ரணி ல­க்ஷிகா பக்­மீ­வவ ஊடாக சிலோன் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் அப்துல் லதீப் மொஹம்மட் ரிசான் குறித்த மனுவை தாக்கல் செய்­துள்ளார். இத­னை­விட யூ.டி.ஜே. எனப்­படும் ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத், ஏ.சி.டி.ஜே. எனப்­படும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் ஆகி­யன சார்­பிலும் உயர் நீதி­மன்றில் தடையை எதிர்த்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

சிலோன் தௌஹீத் ஜமா அத் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவில், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் சமல் ராஜ­பக்ஷ, பாது­காப்பு செயலர் ஜெனரால் கமல் குண­ரத்ன, பாது­காப்பு படை­களின் தலைமை அதி­காரி ஜெனரால் சவேந்­திர சில்வா, தேசிய உளவுச் சேவை பணிப்­பாளர் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

அர­சி­ய­ல­மைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்­பு­ரைக்கு அமைய இவ்­வ­டிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அர­சி­ய­ல­மைப்பின் 3ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் உள்ள 10,12(1),12(2),14(அ),(ஆ),(இ),(உ),(ஊ) ஆகிய உறுப்­பு­ரைகள் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள தமது அடிப்­படை உரி­மைகள், தமது அமைப்பு உள்­ளிட்ட 11 அமைப்­புக்­களை தடை செய்யும் வர்த்­த­மானி அறி­வித்தல் ஊடாக மீறப்­பட்­டுள்­ள­தாக சிலோன் தௌஹீத் ஜமாஅத் தலைவர் தனது அடிப்­படை உரிமை மீறல் மனு ஊடாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதா­வது, சிந்­தனை, மன­சாட்சி, மத சுதந்­திரம் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், சமத்­து­வத்­திற்­கான உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், பேச்சு சுதந்­திரம், ஒன்று கூடு­வ­தற்­கான ஒழுங்­க­மைப்­ப­தற்­கான சுதந்­தி­ரங்கள், மீறப்­பட்­டு­ள­தா­கவும் மனு­தாரர் குறிப்­பிட்­டுள்ளார்.

தமது சிலோன் தௌஹீத் ஜமாஅத், சஹ்ரான் ஹாஷீம் தொடர்பில் உளவுப் பிரி­வு­க­ளுக்கு தகவல் வழங்கி எச்­ச­ரித்த அமைப்பு எனவும், அடிப்­ப­டை­வாத, தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளு­டனோ சிந்­த­னை­க­ளு­டனோ தமது அமைப்­புக்கு எவ்­வித தொடர்­பு­களும் இல்லை என்றும் குறித்த மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
நாட்டில் சிங்­க­ள­மொ­ழியில் அல் குர் ஆனை மொழி பெயர்த்து முதலில் தாங்­களே வெளி­யிட்­ட­தா­கவும், முகத்தை முழு­மை­யாக மறைக்கும் உடை தொடர்பில் கூட தமது நிலைப்­பாடு மாறு­பட்­டது என்றும் அந்த மனுவில் சிலோன் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சிலோன் தௌஹீத் ஜமா அத் அமைப்­புக்கு நாட­ளா­விய ரீதியில் 52 கிளைக் காரி­யா­ல­யங்கள் உள்­ள­தா­கவும், அவ்­வ­மைப்பின் கொள்­கை­களை பின்­பற்றும் சுமார் 5 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் இருப்­ப­தா­கவும் குறித்த மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள நிலையில் அவ்­வ­மைப்­புக்கு நாட­ளா­விய ரீதியில் 229 நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னர்கள் இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலை­யி­லேயெ இவ்­வ­டிப்­படை உரிமை மீறல் மனுவை விசா­ர­ணைக்கு ஏற்­கு­மாறும், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதிக்­கு­மாறும் மனுவில் கோரப்­பட்­டுள்­ளது. அதன்­படி மனுவை விசா­ரணை செய்து தமது உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக முடிவு செய்து நியா­ய­மான நிவா­ர­ணத்தை பெற்றுத் தரு­மாறு மனுவில் கோரப்­பட்­டுள்­ளது.

நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாது­காப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக கடந்த 13 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

இவ்­வ­மைப்­புக்­களை தடை செய்யும் வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டதன் பின்னர், அவ்­வ­மைப்­புக்­களைச் சார்ந்­த­வர்கள், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே, தடை பட்டியலில் தாம் எவ்வித காரணமும் இன்றி இணைக்கப்பட்டுள்ளதாக கூறியே தற்போது சில முஸ்லிம் அமைப்புக்கள் நீதிமன்றை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.