அசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு ஆபத்து நேர்ந்தால் சி.ஐ.டி.யே பொறுப்பு

சி.ஐ.டி.பிரதானி, பணிப்பாளர், பொறுப்பதிகாரிக்கு சட்டத்தரணி கடிதம்

0 419

(எம்.எப்.எம்.பஸீர்)
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் உடல் நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தடுப்புக் காவலில் உள்ள அவ­ருக்கு உட­ன­டி­யாக உரிய சிகிச்­சைகள் வழங்­கப்­ப­டாது ஏதும் பாதிப்­புக்கள் ஏற்­ப­டு­மாக இருப்பின் அதற்கு சி.ஐ.டி.யினரே பொறுப்புக் கூற வேண்டும் என அவ­ரது சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா அறி­வித்­துள்ளார். சி.ஐ.டி.யின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரண­சிங்க, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஹான் பிரே­ம­ரத்ன மற்றும் பொறுப்­ப­தி­காரி ஜயந்த பயா­கல ஆகி­யோ­ருக்கு விஷேட கடிதம் ஊடாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா இதனை அறி­வித்­துள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ள அசாத் சாலியின், மனை­வியின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா இந்த கடி­தத்தை அனுப்பி வைத்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக அசாத் சாலி கைது செய்­யப்ப்ட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ரது கைது மற்றும் தடுத்து வைப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் மேல­திக விசா­ர­ணைக்­காக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தி­யிடம் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் 9(1) பிரிவின் கீழ் தடுப்புக் காவல் உத்­த­ரவைப் பெற்று குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தில் அசாத் சாலியை தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­பு­ரை­களை மீறு­வ­தாக அசாத் சாலியின் கைது அமைந்­துள்ள நிலையில், பாது­காப்பு அமைச்­சரின் தடுப்புக் காவல் உத்­த­ரவு சட்­ட­வ­லு­வற்­ற­தென தீர்ப்­ப­றி­விக்­கு­மாறும் இடைக்­கால தடை உத்­த­ரவு வழங்கி கைதி­யான அசாத் சாலியை விடு­தலை செய்­யும்­ப­டியும் இம்­மனு ஊடாக கோரப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே குறித்த மனுவின் பிர­தி­வா­திகள் மூவருக்கு, அசாத் சாலிக்கு உரிய சிகிச்சையளிக்காது அவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் சி.ஐ.டி.யே பொறுப்புக் கூற வேண்டும் என்ற அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.