பலஸ்தீன் மீது கடந்த சில தினங்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடாத்திவரும் நிலையில், அங்குள்ள நிலைவரங்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் தாம் என்றென்றும் பலஸ்தீன மக்களுடனேயே இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி தார் சுஹைர் ஹம்மதல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“பலஸ்தீனில் நடப்பவை கவலையளிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பில் எமது அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். பலஸ்தீனுக்கான இலங்கையின் ஒருமைப்பாட்டை மீளவும் உறுதிப்படுத்துகிறோம்” என்றும் பிரதமர் இதன்போது தூதுவரிடம் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று முன்தினம் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பலஸ்தீனுக்கான இலங்கையின் ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் பலஸ்தீன தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Vidivelli