மக்­களை தவ­றாக வழி­ந­டாத்தும் போலி மருத்­துவ தக­வ­ல்­கள்

0 641

எம்.பி.எம். பைறூஸ்

கொரோனா வைரஸ் தாக்­கி­விட்­டதா? ஒரு வெங்­கா­யத்தை பச்­சை­யாக சிறு சிறு துண்­டு­க­ளாக வெட்டி பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளிக்கு ஊட்­டி­வி­டுங்கள். 5 நிமிடம் தண்ணீர் குடிக்­க­வி­டக்­கூ­டாது. 5 ரூபாய் செலவில் 5 நிமி­டத்தில் குண­மா­கி­விடும். 15 நிமி­டத்தில் பரி­சோ­தித்து பாருங்கள் 1% உம் அந்த வைரஸ் இருக்­காது
• பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் கொரோ­னாவை விரட்­டலாம்.
• புகை­யிலை கொரோனா வைரஸை குணப்­ப­டுத்தும்
• சீனாவில் வெள்­ளைப்­பூண்டு கொரோனா வைரஸ் தொற்­றினைத் தடுக்­கி­றது
• வெந்­நீரில் குளிப்­பது கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து பாது­காக்கும்
• நுளம்­புக்­கடி மூல­மா­கவும் கொரோனா வைரஸ் கடத்­தப்­ப­டலாம்
• அதி­யுயர் மற்றும் குளி­ரான வெப்­ப­நி­லைகள் வைரஸைக் கொல்லும் ஆற்றல் கொண்­டவை

கொவிட் 19 வைரஸ் பரவ ஆரம்­பித்து ஒன்­றரை வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் மேற்­கு­றிப்­பிட்­ட­வா­றான பல போலிச் செய்­திகள் இன்­னமும் பரவிக் கொண்­டுதான் இருக்­கின்­றன.
உலகம் இன்று எதிர்­நோக்­கு­கின்ற மிகப் பாரிய அச்­சு­றுத்­தல்­களுள் ஒன்­றாக ‘போலிச் செய்தி’ உரு­வெ­டுத்­துள்­ளது. “ எமது பொது எதிரி கொவிட் 19. ஆனால் அது பற்றி அதிகம் பகி­ரப்­படும் போலி­யான தக­வல்­களும் எமது எதி­ரிதான் என்­பதை மறந்­து­விடக் கூடாது” என ஐ.நா. பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ குட்ரஸ் தெரி­வித்த கருத்தும் “ நாம் கொவிட் 19 வைரஸ் பர­வ­லுடன் மாத்­திரம் போரா­ட­வில்லை. போலி­யான தகவல் பரி­மாற்­றங்­க­ளு­டனும் போராடிக் கொண்­டி­ருக்­கிறோம்” என உலக சுகா­தார நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் நாயகம் தெட்ரொஸ் அதானொம் தெரி­வித்த கருத்தும் இதன் பார­தூ­ரத்தை உணர்த்­து­வ­தாகும்.

கொவிட் 19 முடக்க காலத்­திலும் உலக நாடு­களைப் போன்றே இலங்­கை­யிலும் போலிச் செய்­தி­களின் பரவல் அதி­க­ரித்­துள்­ளமை குறிப்­பிட்டுக் கூறத்­தக்­க­தாகும். We are social நிறு­வ­னத்தின் 2021 ஆம் ஆண்டின் ஜன­வரி மாத புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி இலங்­கையில் 7.90 மில்­லியன் சமூக வலைத்­தள பாவ­னை­யா­ளர்கள் இருக்­கி­றார்கள். இலங்­கையின் சனத்­தொ­கையை விடவும் 10 மில்­லியன் அதி­க­மான சிம் அட்­டைகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதி­க­ரிப்­பா­னது இலங்­கையில் போலிச் செய்­திகள் வேக­மாக பர­வ­ல­டை­யவும் குறு­கிய நேரத்தில் பெருந்­தி­ர­ளான மக்­களைச் சென்­ற­டை­யவும் கார­ண­மாக அமைந்­துள்­ளன.

இலங்­கையைப் பொறுத்­த­வரை சுகா­தார, மருத்­துவ ஆலோ­ச­னைகள் எனும் போர்­வையில் பரப்­பப்­படும் போலிச் செய்­தி­களை நம்பிப் பின்­பற்றும் போக்கு அதி­க­ரித்து வரு­கி­றது. கடந்த வருடம் பேஸ்புக் மூல­மாக பகி­ரப்­பட்ட போலி­யான தக­வலை நம்பி, Gaja Madara எனப்­படும் இலை­களைப் பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­பட்ட குடி­பா­னத்தை அருந்­திய கம்­ப­ஹாவைச் சேர்ந்த 36 வய­தான இளைஞர் ஒருவர் உயி­ரி­ழந்­த­மை­யா­னது, இலங்­கையில் போலிச் செய்­திகள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கத்தை உணர்த்­து­வ­தாக உள்­ளது.

ஐ.டி.எச் வைத்­தி­ய­சா­லையின் அறி­வு­றுத்­தல்கள்

‘ஐ.டி.எச் வைத்­தி­ய­சா­லையின் அறி­வு­றுத்­தல்கள்’ என்ற பெயரில் கொவிட் தொற்று தொடர்­பான பல தக­வல்கள் சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­ப­டு­கின்­றன. ‘‘VitC-1000, Vit E மாத்­தி­ரை­களை சாப்­பி­டுங்கள், காலை 10 முதல் 11 மணி வரை சூரிய வெளிச்­சத்தில் 15 முதல் 20 நிமி­டங்கள் வரை நில்­லுங்கள், தினமும் ஒரு முட்டை சாப்­பி­டுங்கள், 7 முதல் 8 மணி நேரம் ஓய்­வெ­டுங்கள், தினமும் 1.5 லீற்றர் நீர் அருந்­துங்கள்….’’ என நீண்ட பட்­டியல் கொண்ட அறி­வித்தல் ஒன்று கடந்த ஒரு வருட காலத்­திற்கும் மேலாக மூன்று மொழி­க­ளிலும் பகி­ரப்­பட்டு வரு­கி­றது. எனினும் இவ்­வா­றான எந்­த­வித மருத்­துவ வழி­காட்­டல்­க­ளையும் தாம் வெளி­யி­ட­வில்லை என ஐ.டி.எச். வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் ஹஸித திஸ்­ஸேரா மறுத்­துள்ளார்.

இதே­வேளை மேற்­படி தக­வல்­களை சுகா­தார மேம்­பாட்டுப் பணி­ய­கமும் மறுத்­துள்­ளது. இது குறித்து பணி­ய­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ முக­நூலில் அறி­வித்தல் ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

‘‘ இந்த ஆரோக்­கிய குறிப்­புகள் ஒரு­வ­ரது சுகா­தா­ரத்­திற்கு நல்­ல­வைதான். ஆனால் இவை ஒரு­போதும் கொவிட் தொற்­றி­லி­ருந்து ஒரு­வரை பாது­காக்கப் போவ­தில்லை. கொரோனா வைர­ஸி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கான தேசிய சுகா­தார வழி­காட்­டல்கள் சுகா­தார அமைச்சு, சுகா­தார மேம்­பாட்டுப் பணி­யகம் மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவு என்­ப­வற்­றி­னா­லேயே வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. அவற்­றையே மக்கள் பின்­பற்ற வேண்டும். மாறாக யாரோ பகிரும் போலி­யான தக­வல்­களை நம்பி தவ­றாக வழி­ந­டாத்­தப்­படக் கூடாது’’ என குறித்த அறி­விப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தம்­மிக்க பாணி

இத­னி­டையே இலங்­கையில் தொழின்­முறை மருத்­து­வ­ரல்­லாத நபர் ஒரு­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ‘தம்­மிக்க பாணி’ எனும் மருந்து கொரோனா வைரஸை குணப்­ப­டுத்­து­வ­தாக தேசிய ஊட­கங்கள் வாயி­லாக பாரிய பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சுகா­தார அமைச்சர் முதல் சபா­நா­யகர் வரை இந்த பாணியை அருந்தி அவற்றை ஊட­கங்கள் வாயி­லாக விளம்­ப­ரப்­ப­டுத்­தி­யதால் இப் பாணிக்­கான கிராக்கி அதி­க­ரித்­தது. பல்­லா­யிரக் கணக்­கான மக்கள் குறித்த நபரின் வீட்­டுக்குச் சென்று அப் பாணியைப் பெற்று அருந்­தினர்.

‘‘ இப் பாணி பற்றி தக­வல்கள் வேக­மாகப் பர­வி­யதால் மக்கள் நம்­பினர். குறிப்­பாக கொவிட் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்கள் கூட தம்­மிக பண்­டா­ரவின் வீட்­டுக்குச் சென்று கூட்­டத்­தோடு கூட்­ட­மாக நின்று பாணியைப் பெற்று அருந்­தினர். இப் பாணியை அருந்­தினால் சுகம் கிடைக்கும் என இம் மக்கள் நம்­பி­யமை ஆபத்­தா­ன­தாகும். இதனால் அவர்கள் சுகா­தார வழி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­காது அலட்­சி­ய­மாக இருந்­தனர். இது எமது பகு­தியில் கொவிட் மேலும் பல­ருக்கு தொற்ற வழி­யேற்­ப­டுத்­தி­யது’’ என வரக்­காப்­பொல பிர­தேச சுகா­தார பரி­சோ­தகர் ஜயந்த குமார குறிப்­பி­டு­கிறார்.

இப் பாணி தொடர்பில் ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மருத்­துவப் பரி­சோ­த­னை­களில் இதனால் கொரோனா வைரஸைக் குணப்­ப­டுத்த முடி­யாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
‘‘அநு­ரா­த­புர வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த 68 கொவிட் நோயா­ளர்­க­ளுக்கு இந்தப் பாணியை வழங்கி பரி­சோ­தித்தோம். அவர்­களில் எந்­த­வித முன்­னேற்­றங்­க­ளையும் எம்மால் மருத்­துவ ரீதி­யாக கண்­ட­றிய முடி­ய­வில்லை’’ என ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட விரி­வு­ரை­யாளர் டாக்டர் சேனக பிலா­பி­டிய கூறு­கிறார்.
‘‘இப் பாணியை பிர­பல்­யப்­ப­டுத்­து­வதில் முன்­னின்ற சுகா­தார அமைச்­சரும் மேலும் சில சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கொவிட் தொற்­றுக்­குள்­ளா­னமை நகைப்­புக்­கு­ரி­ய­தாகும். அர­சாங்கம் இன்­று­வரை இப் பாணியைத் தடை செய்­வ­தற்கோ அல்­லது போலி­யான இப் பாணியைத் தயா­ரித்து விற்­றமை குறித்து விசா­ரிப்­ப­தற்கோ நட­வ­டிக்கை எடுக்­காமை கவ­லைக்­கு­ரி­யது’’ என சமூக ஊடக ஆய்­வாளர் சஞ்­சன ஹத்­தொட்­டுவ குறிப்­பி­டு­கிறார். அத்­துடன் இந்தப் போலிப் பாணியை மக்கள் மத்­தியில் சந்­தைப்­ப­டுத்­து­வதில் சமூக ஊட­கங்­களை விட சில தொலைக்­காட்­சி­களே முக்­கிய பங்கு வகித்­த­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டு­கிறார்.

உலக சுகா­தார நிறு­வ­னத்தின் Mythbusters

தவ­றான தக­வல்கள் உயி­ரையே கொல்லக் கூடி­யவை. 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்­களில் கொரோனா வைரஸ் தொடர்­பான தவ­றான தக­வல்­களால் உல­கெங்கும் 6000 பேர் வரை வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் இவர்­களில் 800 பேர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­கவும் உலக சுகா­தார நிறு­வ­னத்தின் ஆய்­வொன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.
இந் நிலையில் கொவிட் தொற்று நோயைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்ற அதே­நேரம் அது தொடர்­பான போலிச் செய்­தி­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை உலக சுகா­தார நிறு­வனம் முன்­னெ­டுத்­துள்­ளது.
இதற்­க­மைய Mythbusters எனும் போலிச் செய்­தி­களைத் துகி­லு­ரிக்கும் இணையப் பக்கம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதில் உல­க­ளா­விய ரீதியில் அதிகம் பகி­ரப்­படும் கொவிட் 19 தொடர்­பான போலிச் செய்­திகள் தொகுக்­கப்­பட்டு அவற்­றுக்­கான விளக்­கங்­களும் மறுப்­பு­களும் துறைசார் நிபு­ணர்கள் மூலம் வழங்­கப்­ப­டு­கின்­றன.

உதா­ர­ண­மாக இக் கட்­டு­ரையில் ஆரம்­பத்தில் பட்­டி­ய­லி­டப்­பட்ட சில போலிச் செய்­தி­க­ளுக்­கான விளக்­கங்­களும் இதில் உள்­ளன.

வெங்­கா­யத்தில் மருத்­துவ நன்­மைகள் உள்ள போதிலும் கொவிட் தொற்­றினைக் குணப்­ப­டுத்தும் என்­ப­தற்­கான எந்­த­வித ஆதா­ரங்­களும் இல்லை என Mythbusters குறிப்­பி­டு­கி­றது.
• பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் மூலம் வைரஸைக் கட்­டுப்­ப­டுத்­தலாம் என்­பது முற்­றிலும் தவ­றா­னதும் அடிப்­ப­டை­யற்­ற­தாகும் என உலக சுகா­தார நிறு­வனம் கூறு­கி­றது.
• புகை­யிலை கொரோனா வைரஸை குணப்­ப­டுத்தும் எனும் கருத்தில் எந்­த­வித உண்­மை­யு­மில்லை என ஹெல்த் அன­லைடிக் ஆசியா எனும் அமைப்பு உறுதி செய்­துள்­ளது.
•சீனாவில் வெள்­ளைப்­பூண்டு கொரோனா வைரஸ் தொற்­றினைத் தடுக்­கி­றது எனும் தக­வலை உலக சுகா­தார நிறு­வனம் மறுத்­துள்­ளது. வெள்­ளைப்­பூண்டில் சில நுண்­ணுயிர் எதிர்ப்பு இயல்­புகள் காணப்­ப­டு­கின்ற போதிலும் அது கொவிட் தொற்­றி­லி­ருந்து மக்­களைப் பாது­காக்­காது என்றும் வைத்­தி­யர்கள் கூறு­கின்­றனர்.
•வெந்­நீரில் குளிப்­பது கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து பாது­காக்கும் எனப் பகி­ரப்­படும் தக­வல்கள் போலி­யா­னவை என உலக சுகா­தார நிறு­வ­னத்தின் இணை­யத்­தளம் கூறு­கி­றது. ‘‘வெந்நீர்க் குளியில் உங்­களை கொவிட் தொற்­றி­லி­ருந்து தடுக்­காது. நீங்கள் எந்த வெப்­ப­நிலை கொண்ட நீரில் குளித்­தாலும் உங்­களில் வெப்­ப­நிலை 36.5–37 செல்­சியஸ் இலேயே காணப்­படும் என அது கூறு­கி­றது.
• நுளம்­புக்­கடி மூல­மா­கவும் கொரோனா வைரஸ் கடத்­தப்­ப­டலாம் எனும் கருத்­தையும் உலக சுகா­தார நிறு­வ­னத்தின் இணை­யத்­தளம் மறுக்­கி­றது. இன்­று­வரை இப் புதிய கொரோனா வைரஸ் நுளம்பின் மூலம் கடத்­தப்­ப­டு­வ­தற்­கான சான்­றுகள் இல்லை. இவ் வைரஸ் சுவாசத் தொகு­தி­யுடன் தொடர்­பு­பட்­ட­தாகும்.’’ என்றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
• அதி­யுயர் மற்றும் குளி­ரான வெப்­ப­நி­லைகள் வைரஸைக் கொல்லும் ஆற்றல் கொண்­டவை என்ற கருத்தை பலரும் நம்­பு­கின்­றனர். எனினும் இதுவும் தவ­றான நம்­பிக்­கை­யாகும். கொவிட் 19 வைரஸ் வெப்பம் மற்றும் ஈரப்­பதன் கால­நிலை கொண்ட பிர­தே­சங்கள் உள்­ள­டங்­க­லாக அனைத்துப் பிர­தே­சங்­க­ளுக்கும் கடத்­தப்­படும் தன்மை கொண்­டது உலக சுகா­தார நிறு­வனம் கூறு­கி­றது.

இவற்­றுக்கு அப்பால் கொவிட் தொடர்­பான போலிச் செய்­தி­களை எதிர்­கொள்­வது தொடர்­பான முத­லா­வது சர்­வ­தேச மாநாடு ஒன்­றையும் அண்­மையில் உலக சுகா­தார நிறு­வனம் நடாத்­தி­யது. மேலும் ஐக்­கிய இராச்­சியம் மற்றும் பி.பி.சி. வலை­ய­மைப்­புடன் இணைந்து உல­கெங்கும் கொவிட் தொடர்­பான தவ­றான தக­வல்­க­ளி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­ப­தற்­கான பாரிய வேலைத்­திட்­டங்­க­ளையும் இந் நிறு­வனம் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

சமூக ஊட­கங்­களின் வேலைத்­திட்­டங்கள்

இவ்­வா­றான தவ­றான தக­வல்கள் சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­ப­டு­கின்ற நிலையில் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­தவும் அது தொடர்பில் மக்­களை விழிப்­பு­ணர்­வூட்­டவும் பேஸ் புக் நிறு­வ­னமும் இலங்கை சுகா­தார மேம்­பாட்டுப் பணி­ய­கமும் இணைந்து வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்­துள்­ளன. இதற்­க­மைய ‘‘ கொவிட் 19 சம்­பந்­த­மான தவ­றான தக­வல்­க­ளுக்கு எதி­ராக போராட 6 குறிப்­புகள்’’ எனும் தலைப்­பி­லான விழிப்­பூட்டல் குறிப்­புகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

1. வெறு­மனே ஒரு தலைப்பை மட்­டு­மல்­லாது, முழுக் கதை­யையும் அறிந்து கொள்­ளுங்கள்
2. ஒரு நம்­ப­க­ர­மான ஆதா­ரமே உங்கள் பாது­காப்­பான தெரி­வாகும் .
3. வதந்­தி­களை அல்­லாது, உண்­மை­களைப் பகிர்ந்து கொள்­ளுங்கள்.
4. நம்­ப­க­ர­மான ஆதா­ரங்­க­ளி­லி­ருந்து முழு­மை­யான பின்­ன­ணி­யையும் தக­வல்­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளுங்கள்
5. ஒரு தவ­றான கதை ஒரு நண்­ப­ரினால் அல்­லது குடும்ப அங்­கத்­த­வ­ரினால் பகி­ரப்­பட்­டி­ருந்தால் அவர்­க­ளுடன் தொடர்பு கொண்டு உண்­மையைத் தெளி­வு­ப­டுத்­துங்கள்.
6. உங்கள் உணர்­வு­களை ஆராய்ந்து பாருங்கள் ஆழ­மாகச் சிந்­தி­யுங்கள் எனும் 6 வழி­காட்­டல்கள் இதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

தற்­போது இலங்­கையில் கொவிட் 19 மூன்­றா­வது அலை பரவ ஆரம்­பித்­துள்ள நிலையில் பல போலிச் செய்­திகள் வலம்­வர ஆரம்­பித்­துள்­ளன. சமூக ஊட­கங்கள் வாயி­லாக தமக்கு கிடைக்கப் பெறும் தவ­றான தக­வல்­களைப் பரப்­பு­வோரில் பாமர மக்கள் மாத்­தி­ர­மன்றி நன்கு படித்­த­வர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அந்­த­வ­கையில் படித்­த­வர்கள், பாம­ரர்கள் என்ற வேறு­பா­டின்றி அனை­வ­ருக்கும் இதன் பார­தூரம் தொடர்­பிலும் தக­வல்­களை உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே பகிர வேண்டும் என்­பது பற்­றியும் அறி­வூட்ட வேண்­டி­யுள்­ளது.

அந்த வகையில் இலங்­கையில் கொவிட் 19 தொடர்­பான உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களை சுகா­தார மேம்­பாட்டுப் பணி­யகம் மாத்­தி­ரமே வெளி­யி­டு­கி­றது. இதன் சமூக வலைத்தள பக்கங்களில் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பின்தொடர்வதன் மூலம் கொவிட் 19 தொடர்பான நம்பகமான தகவல்களையும் போலிச் செய்திகளையும் பிரித்தறியக் கூடியதாக இருக்கும் என்பது திண்ணம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.