கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளுக்கான செலவு மூன்று கோடி 25 இலட்சம் ரூபாய்கள் என பாராளுமன்ற நிதிப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் கூடிய ஒரு நாள் அமர்வுக்கு சுமார் 65 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக பாராளுமன்ற நிதிப்பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், மின்சாரம், உணவு என்பன இச்செலவில் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.
மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு செலவுகளும் அதில் உள்ளடங்கியுள்ளன. பாராளுமன்ற அமர்வுகள் கடந்த நவம்பர் மாதம் 23, 27, 29, 30 மற்றும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.