அல் அக்­ஸா மீதா­ன இஸ்ரேலின் மிலே­ச்­சத்­த­ன­மா­ன தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­­டிக்­கி­றோம்

பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு

0 720

ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­­லில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது.

பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்­நா­யக்­க, பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்­பி­­டப்­பட்டிருப்பதாவது:

ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்­­மை­யாகக் கண்­டிக்­கி­­றோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம்.

சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்­ளி­வா­ச­லுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

பல தசாப்தகால சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களின் அண்மைக்கால பேசுபொருளாக மாறியிருக்கும் ஷெய்க் ஜர்ராவை அண்மித்த பகுதிகளிலும் இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும்.

எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்­ளிட்ட புனித தலங்­களின் காவ­லர்­கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம்.
மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.