ஞானசார தேரரை கைது செய்யாது எனது கணவரை கைது செய்துள்ளமை அநீதியானது

ரிஷாத் பதியுதீனின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்

0 418

(ஏ.ஆர்.பரீல்)
“உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் ஞான­சார தேரரும் அவ­ரது செயற்­பா­டு­களும் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பிர­தான கார­ணி­யாக அமைந்­தது என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அவரோ அல்­லது இதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் என இனங் காணப்­பட்­ட­வர்­களோ இது­வரை கைது செய்­யப்­ப­டவோ, விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டவோ இல்லை. அதே­வேளை எனது கணவர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கும் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக இது­வ­ரையில் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை உட­ன­டி­யாக விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுங்கள்” என ரிசாத் பதி­யு­தீனின் மனைவி ஆயிஷா ரிசாத் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி ஆயிஷா ரிசாத் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; “உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடாத்த தீவி­ர­வாதி சஹ்ரான் ஹாஷிம் பயங்­க­ர­வாத குழு­வொன்­றினை வழி நடத்­தினார். இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­தினார். இலங்­கையில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்ள 10 கார­ணங்­களை இனங்­கண்டு அவர் வீடியோ பதி­வொன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார். அவற்றில் 8 கார­ணங்கள் கட்­டா­ய­மாக பேசப்­ப­ட­வேண்டும் என நாம் நம்­பு­கிறோம்.

• பகி­ரங்­க­மாக அல்­லாஹ்வை அவ­ம­தித்­தமை, வசை பாடி­யமை.
• குளி­யாப்­பிட்­டியில் இடம்­பெற்ற சம்­ப­வ­மொன்றில் பன்­றியின் உரு­வப்­ப­டத்தில் அல்லாஹ் என எழு­தப்­பட்­டி­ருந்­தமை.
• அல்லாஹ் மீண்டும் பிறப்­பா­ரென ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டமை.
• நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களை பகி­ரங்­க­மாக அவ­ம­தித்­தமை, அவ­தூறு செய்­தமை.
• குர்­ஆனை கிழித்­த­மையும், எரித்­த­மையும்.
• பள்­ளி­வா­சல்­களை அழித்­தமை.
• முஸ்­லிம்­களின் வீடு­களை அழித்­தமை மற்றும் காணி­களை பல­வந்­த­மாக கைப்­பற்­றி­யமை.
• முஸ்லிம் பெண் ஒருவர் உளவுப் பிரிவு அதி­கா­ரி­களால் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தப்ப ட்டமை.

எனது கணவர் ரிசாத் பதி­யுதீன் சட்­டத்­துக்கு முர­ணாக கைது செய்­யப்­பட்­ட­மை­யினால் நானும் எனது பிள்­ளை­களும் மிகுந்த கவ­லைக்­குள்­ளா­கி­யி­ருக்­கிறோம். ரமழான் மாதத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி அதி­காலை 3.00 மணி­ய­ளவில் குற்ற விசா­ரணைப் பிரி­வினர் எமது வீட்­டுக்குள் நுழைந்து எனது கண­வரைக் கைது செய்­தனர். கைது செய்­கின்­ற­மைக்­கான கார­ணங்கள் எதையும் அப்­போது அவர்கள் கூற­வில்லை. பின்னர் எனது கணவர் கைத்தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ராக இருந்­த­போது அவ­ருக்கும் அமைச்சின் மேல­திக செய­லாளர் பால­சுப்­ர­ம­ணியம் என்­ப­வ­ருக்கும் இடையில் இடம்­பெற்ற தொலை­பேசி உரை­யா­டல்கள் பற்­றிய விசா­ர­ணைக்­காக கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் என்று அறிந்தோம். அத்­தோடு பால­சுப்­ர­ம­ணி­யத்­துக்கு இன்சாப் தொலை­பேசி அழைப்­பு­களை மேற்­கொண்­ட­தா­கவும் கூறப்­பட்­டது.

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 33/24 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்­தலை உங்கள் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­கிறேன். இந்த அறி­வித்­த­லின்­படி உலோக கழி­வு­களை ஏற்­று­மதி செய்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்கும் அதி­காரம் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் செய­லா­ள­ருக்­குள்­ளது. அச்­சந்­தர்ப்­பத்தில் இந்த அதி­காரம் அமைச்சின் செய­லா­ள­ரினால் மேல­திக செய­லா­ள­ருக்-கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது. 2019.03.27 ஆம் திகதி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கூட்­ட­மொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. கூட்­டத்தில் அமைச்சின் செய­லாளர், மேல­திக செய­லாளர் மற்றும் பல்­வேறு ஏற்­று­ம­தி­யா­ளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். ஆனால் கூட்டம் தொடர்பில் எனது கண­வ­ருக்கு எவ்­வித தக­வலும் வழங்­கப்­ப­ட­வில்லை. அக்­கூட்­டத்­துக்கு எனது கணவர் சென்­றி­ருக்­க­வு­மில்லை. என்­றாலும் அக்­கூட்­டத்தில் உலோ­கக்­க­ழி­வு­களை ஏற்­று­மதி செய்­வ­தற்கு அனு­மதி வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இத­ன­டிப்­ப­டை­யிலே கொலோசஸ் பிரைவட் லிமிடெட் நிறு­வ­னத்­துக்கும் மேல­தி­க­மாக மேலும் இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் அ-னு­மதி வழங்­கப்­பட்­டது. என்­றாலும் கொலோசஸ் நிறு­வன உரி­மை­யா­ள­ரான இன்சாப் அஹமட் தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக மாறுவார் என்ற சந்­தேகம் அப்­போது எவ­ருக்கும் இருக்­க­வில்லை. ஆகவே தமது அதி­கா­ரங்­களின் அடிப்­ப­டையில் அமைச்சின் செய­லாளர் ரஞ்சித் அசோக மற்றும் மேல­திக செய­லாளர் பால­சுப்­ர­ம­ணியம் ஆகி­யோரே ஏற்­று­ம­திக்­கான அனு­ம­தியை வழங்­கி­னார்கள்.

இதே­வேளை கொண்­டச்சி கைத்­தொ­ழில்­பேட்டை மற்றும் வெலி­ஓயா கைத்­தொ­ழில்­பேட்டை ஆகி­ய­வற்றை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான திட்டம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக 2019.03.27 மற்றும் 28 ஆம் திக­தி­களில் பால­சுப்­ர­ம­ணி­யத்­தினால் எனது கண­வ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட தொலை­பேசி அழைப்­புகள் தற்­போது விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­போது கொலோசஸ் நிறு­வனம் தொடர்­பிலோ அல்­லது ஏற்­று­மதி தொடர்­பிலோ எதுவும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை என்று என்னால் உறு­தி­யாகக் கூற முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை எனது கணவர் கடு­மை­யாக கண்­டித்­தி­ருந்தார். என்­றாலும் இதன்­மீது தொடர்­பு­டை­ய­வ­ரென அவர் மீது விரல் நீட்­டப்­பட்­டது. அவர் அமைச்சர் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்ய வேண்­டு­மென சில குழுக்கள் வலி­யு­றுத்­தின. அதற்கு மதிப்­ப­ளித்து எனது கணவர் பதவி விலகி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைத்தார். அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க விசேட பிரி­வொன்று நிறு­வப்­பட்­டது. விசா­ர­ணை­களின் முடிவில் எனது கணவர் நிர­ப­ராதி என அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

எனது கணவர் கடந்த 20 வரு­டங்­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றார். அவ­ருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக இது­வரை நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் நீதி­மன்ற உத்­த­ர­வின்றி அவர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது நியா­ய­மற்­ற­தாகும் என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. அத்­தோடு அவர் விசா­ர­ணை­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கி வந்த நிலையில் பயங்­க­வ­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­மையை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.

எனவே இவை­ய­னைத்­தையும் கருத்­திற்­கொண்டு எனது கண­வ­ரையும், அவ­ரது சகோ­த­ர­ரையும் விடு­தலை செய்­யு­மாறு சட்­டமா அதி­ப­ருக்கு அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.