றிசாதின் கைதுக்கு எதிராக சர்வதேச ரீதியாக அழுத்தம் பிரயோகிக்க நடவடிக்கை

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவும் முஸ்தீபு

0 402

(றிப்தி அலி)

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அகில மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான றிசாத் பதி­யுதீனின் கைதுக்கு எதி­ராக சர்­வ­தேச ரீதி­யாக அழுத்தம் பிர­யோ­கி­க­வுள்­ள­தாக அக்­கட்­சியின் சட்ட ஆலோ­ச­க­ரான றுஸ்தி ஹபீப் தெரி­வித்தார்.

அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் றிசாத் பதி­யுதீன் மற்றும் அவ­ரது சகோ­தரர் றியாஜ் பதி­யுதீன் ஆகி­யோரின் சட்­ட­வி­ரோத கைதுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வினை அடுத்த வாரம் தாக்கல் செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இதற்கு தேவை­யான அனைத்து அனுமதியையும் கட்சித் தலைவர் றிசாத் பதி­யுதீன் வழங்­கி­யுள்­ள­தாக சட்­டத்­த­ரணி றுஸ்தி ஹபீப் மேலும் தெரி­வித்தார்.

குற்றப் புல­னாய்வு பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள றிசாத் பதி­யு­தீனை இது­வரை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா உள்­ளிட்ட இரு சட்­டத்­த­ர­ணிகள் நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இந்த நிலையில் அகில மக்கள் காங்­கி­ரஸின் சட்ட ஆலோ­ச­க­ரான றுஸ்தி ஹபீப் நேற்று (06) வியா­ழக்­கி­ழமை சந்தித்து சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக சட்ட ஆலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.