ஷவ்வால் மாத பிறை பார்ப்பது புதன் மாலை

0 442

இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் நாள் எதிர்­வரும் 12 ஆம் திகதி (ரம­ழான் பிறை 29) புதன் கிழமை மாலையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷவ்வால் மாதத்­திற்­கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்­வரும் புதன் கிழமை மாலை கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­கள சிரேஷ்ட உத்­தி­யோ­கத்தர், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் முக்­கி­யஸ்­தர்­களும் இம்­மா­நாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதன்­போது, புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை தொடர்­பான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. எனவே, அன்­றைய தினம் மாலை பிறை பார்க்­கு­மாறு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன், பிறை தென்­பட்­டமை, இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் எனவும், தலைப்­பிறை சம்­பந்­த­மான ஊர்­ஜி­த­மற்ற தக­வல்­க­ளையோ வதந்­தி­க­ளையோ பகிர்­வதை தவிர்ந்­து கொள்­ளு­மாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புகளுக்கு : 0112432110, 0112451245, 0777316415 – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.