நோன்புப் பெருநாள் நடவடிக்கைகளால் புதிய கொத்தணிக்கு இடமளிக்காதீர்

சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்துகிறது வக்பு சபை

0 385

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘‘நாட்டில் கொவிட் -19 வைரஸ் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் அரசும், கொவிட் செய­ல­ணியும் வைரஸ் பர­வலைத் தடுப்­ப­தற்­காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், தொழு­கை­க­ளுக்கும், ரமழான் அமல்­க­ளுக்கும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவ­றினால் முஸ்­லிம்­களால் கொவிட் 19 ரமழான் கொத்­தணி உரு­வா­ன­தாக குற்றம் சுமத்தும் வாய்ப்பு உள்­ளது’’ என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் தீவி­ர­ம­டைந்து வரு­வது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், புனித ரமழான் மாதம் இன்னும் ஒரு வார­கா­லத்தில் நிறை­வுற இருக்­கி­றது.நோன்புப் பெரு­நா­ளையும் நாம் எதிர்­நோக்­கி­யி­ருக்­கிறோம். இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் கண்­டிப்­பாக கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக அமைய வேண்டும்.

முஸ்­லிம்கள் நாட்டின் சட்­டத்­துக்கு கட்­டா­ய­மாக அடி­ப­ணி­ய­வேண்டும் .சுகா­தார அமைச்சு விடுத்­துள்ள நிபந்­த­னைகள், கூட்­டுத்­தொ­ழு­கைக்­கான தடைகள் எமது சமூ­கத்­தையும், நாட்டு மக்­க­ளையும் கொவிட் -19 தொற்­றி­லி­ருந்து பாது­காப்­ப­தற்கே என்­பதை நாம் ஒவ்­வொ­ரு­வரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், தொழு­கை­க­ளுக்கும் விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­களும் கட்­டுப்­பா­டு­களும் வக்­பு­ச­பை­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­ன­மல்ல, சுகா­தார அமைச்­சினால் எமது நலன்­க­ருதி மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­ன­மாகும். இஸ்லாம் நாம் நாட்டின் சட்­டங்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்டும் என்றே போதித்­துள்­ளது. நாட்டின் சட்­டங்­க­ளுக்கும் நிபந்­த­னை­க­ளுக்கும் அணி­ப­ணிந்து நாம் உண்­மை­யான முஸ்­லிம்கள் என்­பதை நிரூ­பிக்க வேண்டும்.

நோன்புப் பெருநாள் தினத்­திலோ அதற்கு முன்போ நாம் கொவிட்-19 வழி­காட்­டல்­களை, சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்தின் சுற்­று­நி­ரு­பத்தை மீறிச் செயற்­பட்டால் நாம் ரமழான் கொத்­த­ணியை உரு­வாக்­கி­விட்­ட­தாக குற்றம் சுமந்­துவார்கள். இதற்­காக ஒரு தரப்­பினர் காத்­தி­ருக்­கி­றார்கள்.

தற்­போது நாட்டில் கொவிட் 19 தொற்று தீவி­ர­ம­டைந்­துள்­ளது. பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், திரை­ய­ரங்­குகள் மற்றும் பல அர­சாங்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டுள்­ளன. போக்­கு­வ­ரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் தமது செயற்பாடுகளில் விழிப்பாக இருக்கவேண்டும். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களையும் நிபந்தனைகளையும் எச்சந்தர்ப்பத்திலும் மீறக்கூடாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.