கொவிட் 19 மூன்றாவது அலை: முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

0 750

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. தற்­போது பர­வி­வ­ரு­கின்ற உரு­மா­றிய கொரோனா வைர­ஸா­னது பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் போக்கு ஒன்றைக் காண்­பிப்­ப­தா­கவும் தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூடும் எனவும் தேசிய ஒள­டத அதி­கார சபையின் தலைவர் டாக்டர் பிர­சன்ன குண­ரத்ன தெரி­வித்­துள்ளார். இந்­தி­யாவின் வைரஸ் தாக்­க­மா­னது அயல் நாடான எமக்­கு­ பா­ரிய சவா­லாகும் எனவும் அவர் கூறினார்.

இதே­வேளை கொரோனா வைரஸ் தொற்­றா­னது தற்­போது அபாய நிலையை எட்­டி­யுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். மக்கள் அத்­தி­யா­வ­சிய தேவைகள் தவிர்ந்த பய­ணங்­களைத் தவிர்க்­கு­மாறும் கோரி­யுள்ளார்.

மொத்த தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்கை நேற்று வியா­ழக்­கி­ழமை வரை சுமார் ஒரு இலட்­சத்து 5 ஆயி­ரத்தை தாண்­டி­யுள்­ளது. நேற்று முன்­தினம் (28) வரை 661 பேர் கொரோனா தொற்­றினால் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள்.

இங்­கி­லாந்தில் இனங்­கா­ணப்­பட்ட B117 என்ற வைரஸே தற்­போது நாட்டில் பர­வி­யுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குரு­நாகல் மற்றும் பொர­லஸ்­க­முவ பகு­தி­க­ளி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட மாதி­ரிகள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­விலும் இதே வைரஸே பர­வி­யுள்­ள­தாக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் நோயெ­திர்ப்பு மற்றும் மூலக்­கூறு மருத்­து­வப்­பி­ரிவின் பிர­தம பேரா­சி­ரியர் டாக்டர் சந்­திம ஜீவந்­தர தெரி­வித்­துள்ளார்.

இதேவேளை நாட்டின் பொரு­ளா­தார, சுகா­தார மற்றும் அத்­தி­யா­வ­சிய வேலைத்­திட்­டங்கள் தவிர்ந்து ஏனைய சகல செயற்­பா­டு­க­ளையும் மே மாதம் முதலாம் திக­தி­யிலி­ருந்து மூன்று வார­கா­லத்­திற்கு முடக்க கொவிட் செய­லணிக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மே முதலாம் திக­தி­யி­லி­ருந்து கூட்­டங்­களோ நிகழ்­வு­களோ ஏனைய மக்கள் ஒன்று கூடும் எந்­த­வொரு செயற்­பா­டு­களோ நடத்த முடி­யா­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான வர்த்­த­மானி இன்று (30) வெளி­யி­டப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நாட்­டி­லுள்ள பாட­சா­லைகள் அனைத்தும் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளன. பாட­சா­லை­களை மீளத்­தி­றப்­பது குறித்த தீர்­மானம் எதிர்­வரும் 2 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.
சுகா­தார அமைச்சு கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்பு பெறு­வ­தற்கும் தொற்­றினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் வழி­காட்டல் அறிக்­கைகளை வெளி­யிட்­டுள்­ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு பயான், கியாமுல்லைல், இஃதிகாப் மற்றும் தௌபா நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் தொழுகைகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பலர் முகக்­க­வசம், முஸல்லா இன்றி பள்­ளி­வா­சல்­களில் தொழு­வதை காண­மு­டி­கி­றது. சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு மீற்றர் இடை­வெ­ளி­கூட அசட்டை செய்­யப்­ப­டு­கி­றது.
மக்­களை வழி­காட்­டல்­க­ளுக்குள் உட்­ப­டுத்­து­வதில் பாரிய அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொள்­வ­தாக பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தெரி­விக்­கின்­றன. நாம் எம்­மையும், சமூ­கத்­தையும் நாட்­டையும் வைரஸ் ­தொற்­றி­லி­ருந்து பாது­காத்­துக் ­கொள்­ள­வேண்டும். இல்­லையேல் ஏனைய சமூ­கங்கள் எமது சமூ­கத்தின் மீதே விரல் நீட்டும் நிலை உரு­வாகும். இந்­நி­லையில் வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் உலமா சபை பிரதிநிதிகளிடம் இது குறித்து கருத்து வின­வினோம். அவர்கள் தெரி­வித்த கருத்­து­களை இங்கு தரு­கிறோம்.

வக்பு சபையின் தலைவர்
சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன்
நாட்டில் தற்­போது புது­வ­கை­யான கொரோனா வைரஸ் பர­வி­வ­ரு­வ­தாக சுகா­தார துறை தக­வல்கள் மூலம் அறி­யக்­கி­டைத்­துள்­ளது. இது­வ­ரை­காலம் பர­விய கொரோனா வைரஸ் தொற்­றினை விடவும் உரு­மா­றிய அல்­லது புதிய வகை­யான வைரஸ் என்­பதை அறிய முடி­கி­றது. இந்­நி­லையில் மக்கள் குறிப்­பாக முஸ்லிம் சமூகம் மிகவும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். சுகா­தார வழி­மு­றை­களை கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் “வீரியம் மிக்க இந்த புதிய கொரோனா வைரஸ் காற்றில் ஒன்­றரை மணித்­தி­யாலம் தங்­கி­யி­ருக்­கக்­கூ­டி­யது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் ரமழான் நோன்­பினை அனுஷ்­டித்து வரும் நிலையில் நாம் பள்­ளி­வா­சல்­களில் அதி­க­ளவில் கூடு­வதால் இந்த வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகும் வாய்ப்பு அதி­க­முள்­ளது. அதனால் நாம் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்­களை கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்டும்.ஏனைய மதஸ்­த­லங்­களில் இடம் பெறும் வழி­பா­டு­க­ளை­விட முஸ்­லிம்­களின் வழி­பா­டு­க­ளின்­போது வைரஸ் தொற்­றுக்­கான வாய்ப்பு உள்­ளது.

நாம் தொழு­கை­யின்­போது நிலத்தை தொடு­கிறோம். சுஜூதின்­போதும் நிலத்தை தொடு­கிறோம். வுழூச் செய்­யும்­போது எமது எச்­சில்­களை வெளிப்­ப­டுத்­து­கிறோம். இவ்­வா­றான வழி­பாடு ஏனைய சமூ­கங்­க­ளிடம் இல்லை. எனவே தான் முஸ்­லிம்கள் அவ­தானம் மிக்­க­வர்­க­ளாக இருக்க வேண்டும்.’கொரோனா 3ஆவது அலையை முஸ்­லிம்­களே உரு­வாக்­கி­னார்கள் என்று குற்றம் சுமத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­காத வகையில் எமது செயற்­பா­டு­கள்­ அ­மைய வேண்டும்.

முஸ்லிம் பகு­திகள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டால் பள்­ளி­வா­சல்­களை மூடி­வி­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும்.அத்­தோடு வக்பு சபைக்கு கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்­டிய நிலைமை உரு­வாகும் என்றார்.

மு.ச.ப. திணைக்­கத்தின்
பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப்
கொவிட் 19 வைரஸ் பர­வ­லி­லி­ருந்தும் எமது பள்­ளி­வா­சல்­க­ளையும், சமூ­கத்­தையும் நாட்­டையும் நாம் காப்­பாற்­றிக்­கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சல்கள் மூடப்­ப­டாமல் இருப்­ப­தற்கும், எமது ரமழான் அமல்கள் பள்­ளி­வா­சல்­களில் தொடர்­வ­தற்கும் நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதனால் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள கொவிட் 19 தொடர்­பான வழி­காட்­டல்­களை கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்டும்’ என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘எமது நாட்டின் ஏனைய சமூ­கங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் தொடர்­பான அர­சாங்­கத்தின் அறி­வு­றுத்­தல்­களை முழு­மை­யாகக் கடைப்­பி­டிக்­கின்­றன. நாட்டில் மீண்டும் வீரி­ய­மான கொவிட் 19 வைரஸ் தொற்று பரவி வரு­வ­தாக அர­சாங்கம் கடந்த 13 ஆம் திகதி அறி­வித்­தது. இத­னை­ய­டுத்து நாட்டின் பல பகு­தி­களில் சிங்­கள, தமிழ் மக்கள் 14ஆம் திகதி தங்­க­ளது புத்­தாண்டை கொண்­டாடவில்லை. அத்­தோடு கடந்த 22 ஆம் திகதி தேவை­யற்ற பய­ணங்­களைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து பெரும்­பா­லான மக்கள் பய­ணங்­களைத் தவிர்த்துக் கொண்­டனர். எனவே நாமும் ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து இந்த வைரஸ் தொற்­றி­லி­ருந்து எம்­மையும் நாட்­டையும் பாது­காத்­துக்­கொள்ள வேண்டும். இதற்கு தொடர்ந்து ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

புதி­தாக பர­வி­வரும் வைரஸ் காற்றில் 1½ மணி நேரம் தங்­கி­யி­ருக்கக் கூடி­யது என சுகா­தார அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதற்கு முன்னர் பர­விய வைரஸ் பொருட்கள் மீது மாத்­தி­ரமே தங்­கி­யி­ருந்­தது. எனவே நாம் எப்­போதும் மாஸ்க்கை கழற்­றாமல் இருக்க வேண்டும். மாஸ்க் அணி­வதன் மூலம் தன்­னையும் மற்­ற­வர்­க­ளையும் காப்­பாற்ற வேண்டும்.

நோயா­ளிகள், வயோ­தி­பர்கள், சிறு­வர்கள் மற்றும் பய­ணிகள் பள்­ளி­வா­ச­லுக்கு செல்­வதைத் தவிர்க்க வேண்டும். வீடு­களில் வுழூச் செய்து கொண்டே பள்­ளி­வா­ச­லுக்குச் செல்ல வேண்டும். தொழு­கை­களை வீடு­க­ளிலே நிறை­வேற்றிக் கொள்­வது சிறந்­த­தாகும்.

தொற்று நாம் எதிர்­பா­ராத இடங்­களில் இருக்­கலாம். ஊர­டங்கு உத்­த­ர­வினைப் பொருட்­ப­டுத்­தாமல் நீங்கள் ஒரு இடத்­தி­லி­ருந்து இன்­னொரு இடத்­திற்கு தேவை­யில்­லாமல் பயணம் செய்தால் நீங்கள் அறி­யாமல் வைரஸை உங்­க­ளுடன் எடுத்துச் சென்று உங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்கள் அனை­வ­ரையும் ஆபத்தில் ஆழ்த்­தலாம். எனவே பொறுப்­புள்­ள­வர்­க­ளாக நடந்து கொள்­ளுங்கள்.

இக்­க­டி­ன­மான சூழ்­நி­லையில் வீட்டில் தங்­கி­யி­ருப்­பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்­களின் வழி­காட்­ட­லாகும். நபிகள் நாயகம் (ஸல்) இவ்­வாறு கூறி­யுள்­ளார்கள். ‘தனக்கு தீங்கு விளை­விப்­பதும் கூடாது. பிற­ருக்கு தீங்கு விளை­விப்­பதும் கூடாது. எவர் மற்­ற­வர்­க­ளுக்கு தீங்கு செய்­கி­றாரோ அவ­ருக்கு அல்லாஹ் தீங்கு செய்வான். எவன் ஒருவன் மற்­ற­வர்­க­ளுக்கு கஷ்டம் ஏற்­ப­டுத்­து­கி­றாரோ அவ­னுக்கு அல்லாஹ் கஷ்டம் ஏற்­ப­டுத்­துவான்.
வீட்டை விட்டு வெளியே­றா­தி­ருப்­பதன் மூலம் சமூ­கத்தை பாது­காக்க உத­வுங்கள். அக்­கம்­பக்­கத்தில் சுற்­றித்­தி­ரி­வ­தற்குக் கூட வீட்­டை­விட்டு வெளியே­று­வது முழு சமூ­கத்­தையும் ஆபத்தில் ஆழ்த்­திவிடும்’ என்றார்.

அ.இ.ஜ.உ.சபையின்
பொதுச்­செ­ய­லாளர் அர்கம் நூராமித்

‘நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்று மூன்­றா­வது அலை­யாக உரு­வெ­டுக்கும் அபாயம் உரு­வா­கி­யுள்­ளது. எமது அயல் நாடான இந்­தி­யாவில் மூன்­றா­வது அலை வீரியம் கொண்டு மக்­களைப் பலி­யெ­டுத்து வரு­கி­றது. எனவே முஸ்­லிம்கள் சமூ­கத்­தையும் தாய் நாட்­டையும் பாது­காத்­துக்­கொள்ள முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பில் நாட­ளா­விய ரீதியில் உலமா சபை உல­மாக்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. உல­மாக்கள் மக்­களை இது தொடர்பில் அறி­வு­றுத்­து­வார்கள் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது தராவிஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை என்பவற்றுக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. வக்பு சபை இந்தத்தீர்மானத்தை எடுத்துள்ளது. கூட்டாக ஜமாஅத்தாக தொழுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் அது பாவமில்லை.
எமதும், ஏனைய மக்களினதும் நாட்டினதும் பாதுகாப்பு கருதியும் நலன்கருதியுமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே எமது சமூகம் சுகாதார அமைச்சு, கொவிட் செயலணி மற்றும் வக்பு சபையின் வழிகாட்டல்களைப் பேண வேண்டும். அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.

நாடு எதிர்நோக்கியுள்ள இந்த கொடிய தொற்றிலிருந்தும் மீட்சிபெற நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். புனித ரமழான் மாதத்தில் எமது துஆக்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்­நி­லையில் சுகா­தார அமைச்சு வழங்கும் வழி­காட்­டல்­களை கண்­டிப்­பாக பின்­பற்றி இந்த நோயி­லி­ருந்து எம்­மையும், எமது குடும்­பத்­தையும் , நம் நாட்டு மக்­க­ளையும் பாது­காக்க அனை­வரும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும்.

நபி ஸல் அவர்கள் கூறி­னார்கள்: தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம். அந்த நோய் ஏற்­பட்ட ஊரி­லிந்து வெளி­யே­றவும் வேண்டாம். இந்­நோய்கள் விட­யத்தில் நாம் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக நடந்து கொள்ள வேண்டும் என்­பதை இஸ்லாம் எமக்குப் போதித்­துள்­ளது.

இவ் வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து அனை­வ­ரையும் பாது­காத்­துக்­கொள்ள பின்­வரும் விட­யங்­களைப் பின்­பற்ற வேண்டும்.
• முஸ்லிம்கள் ரமழான் காலத்திலும் ஏனைய காலங்களிலும் சுகாதார துறையினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளல், ஒரு மீற்றர் இடைவெ ளியைப் பேணுதல், சனநெரிசல் மிக்க இடங்களைத் தவிர்த்தல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
• சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதன் அவசியத்தை உலமாக்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் அறிவுறுத்தி தங்களது மார்க்க சொற்பொழிவுகளில் இதனை ஞாபகமூட்ட வேண்டும்.
• கூட்டாக அமல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களிலும் ஏனைய நேரங்களிலும் மஸ்ஜித்களும் மேற்படி விடயத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் வக்பு சபையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
• யா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழு நோய் உட்பட மற்றும் மோசமான நோய்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன் எனும் துஆவை ஓத வேண்டும் என உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் கோரியுள்ளார்.
அந்த வகையில் மேற்படி முக்கியஸ்தர்களின் அறிவுரைகளைக் கருத்திற் கொண்டு நமது ரமழான் மாத செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுடன் உரிய சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி நடக்க வேண்டியது சகலரினதும் கடப்பாடாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.