எத்தனை நாட்களுக்கு இந்த நாடகம் தொடரும்?

0 1,098

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடந்து சரி­யாக இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்ற நிலையில் அது தொடர்­பான கைது­களும் பர­ப­ரப்­பு­களும் அர­சியல் நகர்­வு­களும் முடி­வுக்கு வர­வில்லை.

இரண்டு வரு­டங்­க­ளா­கியும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டாத நிலை­யிலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரிகள் கண்­ட­றி­யப்­ப­டாத நிலை­யிலும் இந்த விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அர­சியல் நகர்­வுகள் மாத்­திரம் தொடர்ந்து வரு­கின்­றன. குறிப்­பாக கர்­தினால் மல்கம் ரஞ்சித் இது தொடர்­பாக அடிக்­கடி பல்­வேறு கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கிறார். அவ­ரது கோரிக்­கை­க­ளுக்கு அமைய பாதிக்­கப்­பட்ட சமூகம் என்ற வகையில் கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு மிக விரை­வாக நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்­டி­யது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும்.

எனினும் கர்­தினால் பெயர் குறிப்­பிட்­டு­விட்டார் என்­ப­தற்­கா­கவோ அல்­லது சில அர­சியல் தரப்­பு­க­ளையோ அல்­லது பெரும்­பான்மை மக்­களைத் திருப்­திப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­கா­கவே தாம் விரும்­பி­ய­வர்­களைக் கைது செய்து பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைப்­பது என்­பது நியா­ய­மற்­ற­தாகும்.
இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­ற­ வ­கையில் இது­வரை 700 க்கும் அதி­க­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிசார் கூறு­கின்­றனர். இவர்­களில் மாவ­னல்லை சிலை உடைப்பு மற்றும் வனாத்­த­வில்லு வெடி பொருட்கள் மீட்பு ஆகிய இரு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது மாத்­தி­ரமே இது­வரை வழக்குத் தொடர தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது வழக்குத் தொடர மேலும் பல மாதங்கள் எடுக்கும் என பாது­காப்புச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

எனினும் இது­வரை முஸ்லிம் சமூ­கத்தின் பல முக்­கி­யஸ்­தர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இறு­தி­யாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் ஆகியோர் சில தினங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் இரு­வரும் ஏலவே கடந்த வரு­டமும் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

அதே­போன்று இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். இவரும் முன்னர் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­வரே.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளு­ந­ரு­மான அசாத் சாலியும் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழே தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

ஏலவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் 2020 ஏப்ரல் முதலும், கவி­ஞரும் ஜாமிஆ நளீ­மியா மாண­வ­ரு­மான அஹ்னாப் ஜெஸீம் 2020 மே முதலும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்­கப்பால் 11 அமைப்­புகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றில் ஜன­நா­யக ரீதி­யாக தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வந்த அமைப்­பு­களே அதி­க­மாகும். இவற்றில் சில­வற்றின் பிர­தான வேலைத்­திட்டம் சமூக நலன் நட­வ­டிக்­கை­க­ளே­யாகும். உரிய கார­ணங்கள் எது­வு­மின்றி இந்த அமைப்­புகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

புர்­கா­வுக்கு தடை விதிக்கும் யோச­னைக்கு அமைச்­ச­ரவை அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜெனீவா பிரே­ர­ணைக்கு முன்­னரே இந்த அறி­விப்பு வெளி­வந்த போதிலும் முஸ்லிம் நாடு­களின் எதிர்ப்பு கார­ண­மாக இந்த யோசனை கைவி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் தற்­போது மீண்டும் இதனை பேசு­பொ­ரு­ளாக்­கி­யி­ருப்­பதும் அர­சியல் உள்­நோக்­கங்­க­ளுக்­கா­கவே அன்றி வேறில்லை எனலாம்.

கொவிட் 19 தொற்றிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக முகக்கவசம் அணிந்து முகத்தை மறைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் மக்களைக் குழப்பத்துக்குள்ளாக்கும் வகையில் புர்கா தடை குறித்த அறிவிப்பை வெளியிடுவது எந்தளவு தூரம் அறிவுபூர்வமானது என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது அதனை தமது அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவதானது வெட்கத்துக்குரியதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரும் அநீதியுமாகும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தைப் பயன்படுத்தி நாடகமாடுவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதுடன் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாக்குவதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.