பேராயரின் முரண்பட்ட கருத்துக்கள்

0 533

எஸ்.றிபான்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் அத்­தாக்­குதல் பற்­றிய கருத்­துக்­களும், சந்­தே­கங்­களும் அதி­க­ளவில் முன் வைக்­கப்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்க முடி­கிறது. இத்­தாக்­கு­தலை பின்­ன­ணியில் இருந்து இயக்­கி­யவர் யார் என்­பதில் சந்­தே­கங்கள் நீடிக்­கின்­றன. இந்­நி­லையில் இத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை எழுந்­த­மா­னத்தில் இவர்தான் என்று குற்­றம்­சாட்­டு­வ­த­னையும் ஏற்றுக் கொள்ள முடி­யா­தென்று எதிர்க்­கட்­சி­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­களின் சாட்­சி­யங்கள் மறுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எதிர்க்­கட்­சி­யினர் குற்றம் சுமத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
எவ்­வா­றா­யினும் இத்­தாக்­கு­த­லுடன் பொறுப்­பு­டை­ய­வர்கள் நீதியின் அடிப்­ப­டையில் உறுதி செய்­யப்­பட வேண்டும். இதற்கு மாற்­ற­மாக விமர்­ச­னங்­க­ளி­லி­ருந்து விடு­பட்டுக் கொள்­வ­தற்­காக இவர்தான் பிர­தான சூத்­தி­ர­தாரி என்று அடை­யா­ளப்­ப­டுத்தும் போது உண்­மை­யான சூத்­தி­ர­தாரி தப்­பித்துக் கொள்­வ­தற்கும், அவரை பாது­காத்துக் கொள்­வ­தற்கும் கார­ண­மாக அமைந்­து­விடும். அது­மட்­டு­மல்­லாது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் போன்ற இன்­னு­மொரு தாக்­கு­தலை தடுப்­ப­தற்கு முடி­யாது கூட போய்­விடும்.
இதே வேளை, அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரியை அடை­யாளங் காணவும், கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­தவும் பல­த­ரப்­பட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு
மேலும், இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை விரை­வாக கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு முஸ்­லிம்கள் வழங்­கிய ஒத்­து­ழைப்பு பிர­தான கார­ண­மாகும். இத்­தாக்­கு­தலின் பின்னர்; பாது­காப்பு தரப்­பி­னரின் கெடு­பி­டிகள், வீடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணுவச் சோத­னைகள், இன­வா­தி­களின் கருத்­துக்கள் போன்­ற­வை­க­ளி­னாலும், பௌத்த இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளி­னாலும் முஸ்­லிம்கள் பெரும் துய­ரங்­களை அனு­ப­வித்­தார்கள்.

இத்­தனை தொல்­லை­க­ளுக்கு மத்­தி­யிலும் முஸ்­லிம்கள் சமூ­கத்தின் மீது விரல் நீட்­டப்­பட்ட பயங்­க­ர­வாத முத்­தி­ரைக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் சம்­பந்­த­மில்லை என்று நிரு­பிப்­ப­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­தார்கள். பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு தமது பூரண ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கி­னார்கள். இன்றும் முஸ்­லிம்கள் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி கைது செய்­யப்­பட வேண்­டு­மென்­பதில் முஸ்லிம் சமூகம் பிடி­வா­த­மா­கவே இருக்­கின்­றது.
இத்­தாக்­கு­த­லுக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கும் சம்­பந்­த­மில்லை என்­ப­தனை நிரு­பித்­துள்ள போதிலும், சிலர் இன்னும் முஸ்லிம் சமூ­கத்தை பயங்­ர­வா­திகள் போன்று சித்­தரித்துக் கொண்­டி­ருப்­ப­த­னையும், முஸ்­லிம்­களின் மத்ர­ஸாக்­களை மூட வேண்­டு­மென்றும், இஸ்­லா­மிய புத்­தகங்­களின் இறக்­க­ும­திக்கு தடை­வி­திக்க வேண்­டு­மென்றும் தெரி­வித்துக் கொண்­டி­ருப்­பது முஸ்­லிம்­க­ளுக்கு வேத­னைக்­கு­ரி­ய­தா­கவே இருக்­கின்­றது. ஆதலால், அர­சாங்கம் முஸ்­லிம்­களின் இந்த வேத­னையை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

பேராயர் மல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்­குதல் குறித்து பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்ற கருத்­துக்கள் முரண்­பா­டு­களைக் கொண்­ட­தாக இருக்­கின்­றன. இத்­தாக்­குதல் நடை­பெற்ற போது, இத்­தாக்­கு­த­லுக்கும் சாதா­ரண முஸ்­லிம்­க­ளுக்கும் எந்த சம்­பந்­தமும் கிடை­யாது. அதனால், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்­களை கடிந்து கொள்ள வேண்­டி­ய­தில்லை என்று அறிக்கை வெளி­யிட்டார். இவ­ரது இந்த அறிக்கை பல­ராலும் பாராட்­டப்­பட்­டது.

இதே வேளை, கடந்த நல்­லாட்சி அர­சாங்கம் தாக்­குதல் குறித்த தக­வல்கள் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு கிடைத்த போதிலும், அதனை தடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்று மைத்­திரி – ரணில் கூட்­டாட்­சியை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை விமர்­சனம் செய்­தி­ருந்தார். மேலும், இன்­றைய புதிய அர­சாங்­கத்தின் மீதும் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் மீதும் நம்­பிக்­கை­யையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

இத்­த­கைய பின்­ன­ணியில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு தனது அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்­தது. இந்த அறிக்­கையின் பிரதி பேராயர் கர்­தினால் ரஞ்சித் ஆண்­ட­கை­யி­டமும் கைய­ளிக்­கட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை முழு­மை­ய­டை­யாத ஓர் அறிக்கை என்­பதால் அது குறித்து திருப்தி அடைய முடி­யாது என பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கொழும்பு பேராயர் இல்­லத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

இன்­றைய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வெளி­யிட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை 2021 ஏப்ரல் 21இற்கு முன்­ன­தாக அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை கைது செய்­யாது போனால், நீதி­மன்­றத்­திற்கு செல்­ல­வுள்­ள­தா­கவும், சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடப்­போ­வ­தா­கவும் பிறி­தொரு வேளையில் அவர் அர­சாங்­கத்தை எச்­ச­ரித்தார்.

“பௌத்த அமைப்­பு­களை தடை செய்­யு­மாறு, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­களை நிரா­க­ரிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் சில பௌத்­தர்­க­ளுக்கும் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கும் இடை­யி­லான ஐக்­கி­யத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

மேலும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை முழு­மை­யா­காத ஒன்றும் என்றும் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு பௌத்த இன­வாத முஸ்லிம் விரோத அமைப்­புக்­க­ளுக்கு ஆத­ர­வாக கருத்­துக்­களை பதிவு செய்த அவர், முஸ்லிம் அமைப்­புக்­களை அர­சாங்கம் தடை செய்த போது அது பற்றி எக்­க­ருத்­துக்­க­ளையும் நேர­டி­யாக வெளி­யி­ட­வில்லை.

ஆயினும், இந்தப் பின்­ன­ணியில் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை வெளி­யிட்ட கருத்­துக்கள் ஊட­கங்­களில் முக்­கிய இடத்­தினைப் பிடித்­தது. அதா­வது, “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­த­லுக்கு மத தீவி­ர­வாதம் கார­ண­மல்ல. மத தீவி­ர­வா­தத்தை ஒரு கரு­வி­யாக பயன்­ப­டுத்தி தமது அர­சியல் அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முற்­பட்ட சில­ரது செயலே இது” என்­றுள்ளார்.

“அன்று எமது சகோ­த­ரர்­களை தாக்­கி­ய­வர்கள் மத அடிப்­ப­டை­வா­திகள் அல்லர். அந்த மத அடிப்­ப­டை­வா­தி­களை தமது கைபொம்­மை­க­ளாக பயன்­ப­டுத்தி, தமது அர­சியல் அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்திக் கொள்ள முன்­னின்­ற­வர்­களே அதனைச் செய்­தனர். தமது அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு சில குழு­வினர் முன்­னெ­டுத்த முயற்­சியின் பிர­தி­ப­ல­னா­கவே அதனை நாம் பார்க்­கின்றோம். மதத்­தையோ, இனத்­தையோ, மொழி­யையோ மற்­றொ­ரு­வரை துன்­பு­றுத்­து­வ­தற்­காக பயன்­ப­டுத்த வேண்டாம் என நாட்­டி­லுள்ள அனை­வ­ரி­டமும் கோரிக்கை முன்­வைக்­கின்றோம். அத்­துடன் தமது அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏனை­ய­வர்­களை கொலை செய்யும் சிந்­த­னை­யி­லி­ருந்து விடு­ப­டுங்கள்” என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் கேட்­டி­­ருந்தார்.

இவ்­வாறு தெரி­வித்த பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் மறுநாள் மேற்­படி கருத்­தினை மறுத்து மற்­று­மொரு அறிக்­கையை வெளி­யிட்டார்.
நாட்டில் முஸ்லிம் தீவி­ர­வாதம் இல்லை என நான் தெரி­விக்­க­வில்லை. நான் நாட்டில் எந்த அர­சியல் சக்தி குறித்தும் குறிப்­பி­ட­வில்லை. நான் சர்­வ­தேச அளவில் காணப்­படும் வஹா­பிசம் குறித்தே தெரி­வித்தேன்.

உலகின் வலி­மை­மிக்க நாடுகள் வஹா­பி­சத்தை தங்­களின் சாத­ன­மாக பயன்­ப­டுத்­தலாம். உள்ளுர் அர­சியல் கட்­சிகள் குறித்தோ, அதன் தலை­வர்கள் குறித்தோ நான் எத­னையும் தெரி­விக்­க­வில்லை சர்­வ­தேச சக்­திகள் குறித்தே நான் தெரி­வித்­தி­ருந்தேன் என்றார்.

பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தாம் வெளி­யிட்ட கருத்தை மறு­நாளே மறுக்­கின்றார் என்றால், அவர் ஏதோ­வொரு சக்­திக்கு அச்­சப்­ப­டு­கின்றார் அல்­லது தமது கருத்தை தெளி­வாக முன் வைப்­பதில் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்றார் என்று கருத முடி­கின்­றது.

இரட்டை முக­வ­ராக செயற்­படல்
அர­சியல் நோக்­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது என மெல்கம் ரஞ்சித் கர்­தினால் ஆண்­டகை குறிப்­பிட்­டுள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது. இரட்டை முக­வ­ராக செயற்­ப­டு­வதை கர்­தினால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்கம் மீது உள்ள முரண்­பாட்டை அவர் தனிப்­பட்ட முறையில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தை ஒரு கரு­வி­யாக பயன்­ப­டுத்­து­வது முறை­யற்­றது என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் பேராயர் கர்­தினாலின் கருத்­துக்கு பதில் அளித்­துள்ளார்.

நுவ­ரெ­லியா அமோ­க­ராம விகா­ரையில் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையிலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் உல­க­ளா­விய ரீதியில் வியா­பித்­துள்­ளது. அற­வழி மத கொள்­கைக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள் இஸ்­லா­மிய மத கொள்­கை­யினை தவ­றான வகையில் புரிந்துக் கொண்டு அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களில் ஈடுப்­பட்டு ஏனைய மதங்கள் மீது வேறு தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்­கி­றார்கள்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் நடத்­தப்­பட்­டது என்­பது பல்­வேறு விசா­ர­ணைகள் ஊடா­கவும், குண்­டுத்­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த அடிப்­ப­டை­வா­தி­களின் காணொளி ஆதா­ரங்கள் ஊடா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்­கை­யினால் ஈர்­க்­கப்­பட்­ட­வர்கள் தாக்­கு­தல்­களை முன்னெ­டுத்­தார்கள் என்று மெல்கம் ரஞ்சித் கர்­தினால் ஆண்­டகை ஆரம்­பத்தில் குறிப்­பிட்டார்.

ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்று இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­­கின்­றன. இவ்­வா­றான நிலையில் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் மத கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நடத்­தப்­பட்­டது அல்ல. அத்­தாக்­குதல் அர­சியல் கார­ணி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது என மெல்கம் ரஞ்சித் கர்­தினால் ஆண்­டகை குறிப்­பிட்­டுள்­ளதை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம் என ஞான­சார தேரர் குறிப்­பிட்­டுள்ளார்.

அருட்­தந்­தையின் கருத்து
தௌஹித் ஜமாஅத் உள்­ளிட்ட 15 அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களில் சுமார் 350 இஸ்­லா­மிய இளைஞர் யுவ­திகள் அடிப்­ப­டை­வாத, வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான பயிற்­சியைப் பெற்­றுள்­ள­தாக உயிர்த்த ஞாயிறு தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவர்­களில் தற்­கொலை குண்­டு­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு இறந்­த­வர்கள் தவிர ஏனைய அனை­வரும் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் நட­மாடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். எஞ்­சி­யோரில் மிகக் குறு­கி­ய­ள­வா­னோரே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று அருட்­தந்தை சிறில் காமினி தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் இது வரையில் வெளி­யா­கி­யுள்ள தக­வல்­களின் அடிப்­ப­டையில் சஹ்ரான் என்­ப­வரால் தௌஹித் ஜமாஅத் அமைப்­பினால் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­துள்­ளன. இத­னுடன் தொடர்­பு­டைய 15 அமைப்­புக்கள் நாட்டில் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இந்த அமைப்­புக்­களால் இஸ்லாமிய இராச்­சியம், ஏனைய மதங்­களை அழித்தல், இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற அநீ­தி­க­ளுக்­காக அவர்­களை பழி­வாங்­குதல் உள்­ளிட்ட 5 விட­யங்கள் பரப்பப்­பட்­டுள்­ளன என்றும் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி கருத்­துக்கள் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில், அருட்­தந்தை சிறில் காமி­னியின் கருத்­துக்கள் குறித்து அவரை விசா­ரணை செய்­யு­மாறு அர­சாங்­கத்தை கேட்டுக் கொண்டார்.

இதே வேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலின் இரண்டு வருட நிறை­வை­யொட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிகழ்­வுகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் விசேட செய்­தி­யாளர் மாநாடு கொழும்­பி­லுள்ள பேராயர் இல்­லத்தில் (19.04.2021) நடை­பெற்­றது. இதில் பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள், முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டு­களை வைத்து நாம் அந்த குற்­றச்­சாட்டை சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப் போவ­தில்லை. சிறு தரப்­பி­னரே இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர். இந்த நாட்டில் முஸ்­லிம்கள் பல­நூறு வரு­டங்­க­ளாக சிங்­கள, தமிழ் மக்­க­ளுடன் மிகவும் ஐக்­கி­ய­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­களை நாம் ஒரு­போதும் புறக்­க­ணிக்க மாட்டோம்.

சர்­வ­தேச அழுத்­தங்கள் கார­ண­மாக அவர்­களில் சிறு தரப்­பினர் இத்­த­கைய தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். உண்­மை­யான முஸ்லிம்கள் மத அடிப்­ப­டையை தவிர்த்து அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்­டா­மென நாம் உண்­மை­யான முஸ்­லிம்­க­ளிடம் கேட்­டுக்­கொள்­கின்றோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

விசா­ர­ணை­களில் திருப்­தி­யில்லை
“உயிர்த்த ஞாயிறு தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் முன்­வைக்கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை தவிர்த்து, ஒரு சிலரை மாத்­திரம் கைது செய்து அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதால் திருப்­தி­ய­டைந்து விட முடி­யாது. தற்­போ­தைய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளிலும் எம்மால் 100 வீதம் திருப்­தி­ய­டைய முடி­யாது. தற்­போ­துள்­ளதை விடவும் மேலும் தீவி­ர­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

கத்­தோ­லிக்க மக்­க­ளுக்­காக மாத்­திரம் நாம் இந்த கோரிக்­கையை முன்­வைக்­க­வில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களால் இந்து, பௌத்த, முஸ்லிம் மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த அடிப்­ப­டை­வாத தாக்­கு­தல்­களின் பின்­னணி கண்­ட­றி­யப்­படும் வரை முழு நாடும் அச்­சு­றுத்தல் மிக்க நிலை­மை­யி­லேயே காணப்­படும். இந்த கோரிக்­கை­களின் மூலம் மதங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்த நாம் முயற்­சிக்­க­வில்லை. உண்­மையை கண்­ட­றியும் செயற்­பா­டுகள் புறக்­க­ணிக்­கப்­பட்டால் நாடு அபாய கட்­டத்­தி­லி­ருந்து மீள முடி­யாது.

‘ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தொடர்பில் கடு­மை­யாக கூறப்­பட்­டுள்­ளது. அண்­மையில் அவர் தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­பிய போது நான் அதற்கு பத­ல­ளித்­தி­ருந்தேன். அந்த அறிக்­கையில் முன்னாள் பிர­தமர் தொடர்­பிலும் சில விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொ­ருவர் தொடர்­பிலும் நான் தனித்­த­னி­யாக கருத்­துக்­களை தெரி­விக்­க­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்­திற்கு கட்சி தலைவர் மாத்­திரம் எதி­ராக வாக்­க­ளிக்க ஏனைய அனை­வரும் அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதில் உள்ள இர­க­சியம் என்ன? முஸ்லிம் வாக்­குகள் தேவை­யில்லை என்று தெரி­வித்த நப­ருக்கு ஆத­ர­வாக இந்த செயற்­பாடு இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இதற்­கான காரணம் என்ன? இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விவ­கா­ரத்தில் அர­சாங்கம் இர­க­சிய கூட்­ட­ணி­யாக செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் எழு­கி­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிஷாத் பதி­யு­தீ­னு­டைய சகோ­தரர் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட போதே நாம் இதனைக் கூறி­யி­ருந்தோம். இவ்­வாறு அர­சாங்கம் இர­க­சிய கூட்­ட­ணி­யாக செயற்­பட்டு உயிர்த்த ஞாயிறு விவ­கா­ரத்தை புறந்­தள்ள முயற்­சித்தால் அது முழு நாட்­டுக்கும் இழைக்­கப்­படும் அநீ­தி­யாகும்” என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார்.

அர­சியல் இலாபம் தேடல்
இதே வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை வைத்து அர­சியல் கட்­சிகள் அர­சியல் இலாபம் தேடிக் கொள்ளும் வகையில் ஆளுக்கு ஆள் குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் தெரிவித்துக் கொண்டிருப்பதனை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். முஸ்லிம்களிடையே இன்னும் ஒரு சிறு குழுவினர் திவிரவாதிகளாக இருக்கின்றார்கள் என்ற கருத்துக் கூட முஸ்லிம்கள் எல்லோரையும் சந்தேகிக்க வேண்டியதொரு சூழலை உருவாக்கியுள்ளது.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எந்த இனமாக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் அப்பாவிகளின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.

இதே வேளை, வல்­ல­ரசு நாடு­களும் இலங்­கையின் மீது கழுகு பார்வை கொண்டு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. தங்­களின் ஆதிக்­கத்தை இலங்­கையில் நிலை­நாட்டிக் கொள்­வ­தற்கு ஆட்­சி­யா­ளர்­களின் மீது நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்திக் கொண்டு வரு­வ­த­னையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. மேலும், அர­சாங்கம் இலங்கை முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்­களில் பௌத்த இன­வா­தி­களை திருப்­தி­ப­டுத்தும் செயற்­பா­டு­களை தவிர்த்தல் வேண்டும். இலங்கை அர­சாங்­கத்தின் அண்­மைக்­கால நட­வ­டிக்­கைகள் பல முஸ்லிம் நாடு­களின் அதி­ருப்திக்கு கார­ண­மா­கி­யுள்­ளன. இத­னால்தான் ஐக்­கிய நாடுகள் சபையில் மனித பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் நிறை­வே­று­வ­தற்கு கார­ண­மாகும். ஆகவே, நாடு என்ற ரீதியில் இலங்­கையின் மீது சர்­வ­தேச ரீதி­யாக கொண்டு வரப்­படும் அழுத்­தங்கள் முஸ்­லிம்­க­ளையும் பாதிக்கச் செய்யும், நாட்டின் எதிர்­கா­லத்தின் மீதும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். ஆதலால் இந்த நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும், அபி­வி­ருத்­திற்கும், அமை­தி­யான வாழ்­வுக்கும் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்­களைப் போன்று துணை­யாக செயற்­படும். அத்­தோடு, இதற்கு மாற்­ற­மாக முஸ்லிம்களிடையே யார் செயற்பட்டாலும் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு முஸ்லிம்கள் தயங்கக் கூடாதென்பது எமது வேண்டுகோளாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.