முஸ்லிம் அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவிகள் பெற புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்

மு.ச.ப.அ. திணைக்களம் தெரிவிப்பு

0 633

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் தற்­போது தடை செய்­யப்­பட்­டுள்ள அமைப்­பு­களைத் தவிர ஏனைய முஸ்லிம் அமைப்­புகள், தொண்டு நிறு­வ­னங்கள் என்­பன வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிதி­யு­த­விகள் பெற்றுக் கொள்­வ­தற்கும் கட்­டுப்­பா­டுகள் அமுல்படுத்­தப்­ப­ட­வுள்­ளன.

வெளி­நா­டு­களில் நிதி­யு­தவி பெற்றுக் கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் சிபா­ரிசு கடி­தத்­தினை பெற்றுக் கொள்­வ­தற்கு வருகை தரும் முஸ்லிம் அமைப்­புகள் மற்றும் தொண்டு நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்ட பிர­தே­சங்­களின் பிர­தேச செய­லாளர் மற்றும் அர­சாங்க அதிபர் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து கடி­தங்­க­ளையும் மற்றும் ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பிக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வள்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

அத்­தோடு எந்த நாட்­டி­லி­ருந்து, எந்த அமைப்­பி­ட­மி­ருந்து, என்ன தேவைக்­காக நிதி­யு­தவி பெற்றுக் கொள்­ளப்­படப் போகி­றது என்­பதை கடிதம் மூலம் தெரி­விக்க வேண்டும். நிதி­யு­தவி பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள திட்­டத்தின் பிரதி சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும்.

மேலும் சம்­பந்­தப்­பட்ட அமைப்­புகள், தொண்டு நிறு­வ­னங்கள் தங்­க­ளது கடந்த 3 வருட கால கணக்­காய்வு அறிக்கை மற்றும் செயற்­பாட்­ட­றிக்கை என்­ப­ன­வற்­றையும் சமர்ப்­பிக்க வேண்டும். எனவே வெளி­நாட்டு நிதி­யு­த­வியைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான சிபா­ரி­சினை பெற வரு­ப­வர்கள் இந்­ந­டை­மு­றையைப் பின்­பற்ற வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சிபா­ரி­சுகள் மூலம் நிதி­யு­த­வி­களைப் பெற்றுக் கொள்­ளலாம் என்று எதிர்­பார்க்க வேண்டாம் என்றார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், கிடைக்­கப்­பெறும் விண்­ணப்­பங்கள் திணைக்­க­ளத்­தினால் பரி­சீ­லிக்­கப்­பட்டு தகு­தி­யெனக் கண்டால் புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனூடாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனே நிதியுதவிகள் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.