ஏப்ரல் தாக்குதல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவரை விடுவிக்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியவர் யார்?

முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி

0 506

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சஹ்­ரா­னு­ட­னுடன் தொடர்­பு­வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் விளக்கமறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நபர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். அவரை விடு­தலை செய்­யு­மாறு சட்­டமா அதி­ப­ருக்கு ஆலோ­சனை வழங்­கிய மறை­முக சக்தி யார் என்­பதை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­த ­வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற விளை­யாட்டில் ஊக்க பதார்த்தம் பயன்­பாட்டிற் கெதி­ரான சம­வாய சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஏப்ரல் தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி பாணந்­து­றையில் ஒருவர் கைது­ செய்­யப்­பட்டார். இராணுவ புல­னாய்வு பிரி­வி­னால்தான் அந்த நபர் கைது­செய்­யப்­பட்டார். அவரை விசா­ரணை மேற்­கொண்டு பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வுக்கு ஒப்­ப­டைத்­தார்கள். பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரிவு அதி­கா­ரிகள் அந்த நப­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணையில் பல தக­வல்கள் வெளி­வந்­தன. குறித்த நபர் 2017இல் குரு­ணா­க­லையில் கெகு­ணு­கொல்ல பிர­தே­சத்­துக்கு சென்று, தற்­போது அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்கும் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான நெளபர் மெள­ல­வியின் வீட்­டுக்கு சென்று அவரின் மக­னுக்கு உப­தேசம் ஒன்றை செய்­தி­ருக்­கின்றார். அந்த நேரத்தில் அவர் சஹ்­ரா­னுடன் சம்­பந்­தப்­பட்ட 20 பேரை சந்­திக்­கின்றார். அப்­போது தங்­களின் பிர­சா­ரங்­க­ளுக்கு உத­வு­மாறு சஹ்ரான் அவ­ருக்கு ஆலோ­சனை வழங்கி இருக்­கின்றார்.

அத்­துடன் குறித்த நபர் சஹ்ரான் மற்றும் நெளபர் மெள­ல­வி­யுடன் நீண்­ட­காலம் தொடர்பு வைத்­தி­ருப்­பது தொடர்­பான தக­வல்­களை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரிவு நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றது. அதன் பிர­காரம் அவரை 2019 ஒக்­டோபர் 14ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி, குற்­றப்­பத்­தி­ரிகை ஒன்றை சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றது. அதில் குறித்த நபர் சஹ்­ரானின் போத­னை­களை பரப்பும் அடிப்­ப­டை­வாத நிலைப்­பாட்டில் இருப்­பவர். அதனால் அவரை தனி சிறைக்­கூ­டத்தில் வைக்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெற்று வெற்­றி­பெற்ற பின்னர் இந்த விசா­ர­ணையை மேற்­கொண்­டு­சென்ற புல­னாய்வு பிரிவு மற்றும் குற்ற விசா­ரணை பிரிவு அதி­காரிகள் அனை­வ­ரையும் இடம்­மாற்றி புதி­ய­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டார்கள். ஆனால் 2019 டிசம்பர் 9 இல் இருந்து 2020 செப்­டம்பர் 30 ஆம் திக­தி­வரை சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த அந்த நபர் தொடர்பில் எந்த விசா­ர­ணையும் இடம்­பெ­ற­வில்லை. பீ அறிக்கை ஒன்று கூட நீதி­மன்­றுக்கு சமர்ப்­பிக்­க­வில்லை. ஆனால் 2020 செப்­டம்பர் 18ஆம் திகதி சட்­டமா அதிபர் குற்ற விசா­ரணை பிரி­வுக்கு கடிதம் ஒன்றை எழுதி அதில், குறித்த நபர் தொடர்பில் தொடர்ந்தும் சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள எந்த தக­வலும் இல்லை அதனால் அவரை விடு­தலை செய்­யு­மாறு தெரி­வித்­துள்ளார்.

எமது அர­சாங்க காலத்தில் குற்ற விசா­ரணை பிரி­வினால் கைது­செய்து, சஹ்ரான் மற்றும் வேறு நபர்­க­ளுடன் நேரடி தொடர்­பு­களை மேற்­கொண்­டவர் என குற்றம் சுமத்­தி­யி­ருந்த நிலையில், அவரை விடு­விக்­கு­மாறு சட்­டமா அதிபர் உத்­த­ர­விட்­டி­ருக்­கின்றார். அது­மாத்­தி­ரல்­லாது, குறித்த நபர் 2020 ஜூன் மாதம் 10ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றை உயர் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்றார். அதில் அவர் இராணு­வத்தின் புல­னாய்வு பிரிவின் தகவல் வழங்­கு­ப­வ­ராக செயற்­ப­டு­ப­வ­ராக இருந்­ததை அவர் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.

இந்த நபர் இராணு­வத்தின் புல­னாய்வு பிரி­வுடன் செயற்­பட்­ட­தாக ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அதே­நேரம் இவர் சஹ்­ரானின் குழு­வுடன் செயற்­பட்­டி­ருப்­பதை புல­னாய்வு பிரிவும் கண்­டு­பி­டித்­துள்­ளனர். அவ்­வாறு செயற்­பட்­ட­வ­ரையே சட்­டமா அதி­பரின் கோரிக்­கைக்­க­மைய விடு­தலை செய்­தி­ருக்­கின்­றார்கள். இது எவ்­வாறு இடம்­பெற முடியும்? இவரை விடு­தலை செய்­யு­மாறு சட்­டமா அதி­ப­ருக்­கு ஆலோ­சனை வழங்­கி­யது யார்? பாரிய குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் இந்த நபரை எவ்­வாறு விடு­தலை செய்ய முடியும்?

ஆனால் தாக்­குதல் தொடர்பில் எந்த குற்­றச்­சாட்டும் இல்­லாத பலர் இன்று வரு­டக்­க­ணக்கில் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஐ.எஸ்க்கு எதி­ராக கவிதை எழுதிய இளம் கவிஞர் இன்சாப் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் இந்த விசாரணையை மறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நெளபர் மெளலவி மீது குற்றத்தை சுமத்தி இந்த விசாரணையை மூடிவிடவே முயற்சித்தார்கள். ஏனெனில் இந்த விசாரணைகள் தொடரும்போது இன்னும் பல உண்மைகள் வெளிவருகின்றதை தடுப்பதற்கே இதனை மூடிவிட இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.