புத்தக இறக்குமதிக்கு புதிய விதிகள் அமுல்

0 564

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய விதிகளை விதித்துள்ளது.

புதிய விதி­க­ளுக்­க­மைய இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பு அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். முன் அ-னு­ம­தி­யின்றி இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­மதி செய்ய முடி­யாது.

நிறு­வ­னங்­களோ, அமைப்­பு­களோ,தனி­ந­பர்­களோ இஸ்­லா­மிய நூல்­களை இறக்­கு­மதி செய்­வ­தென்றால் அதன் பிர­தி­யொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும்.

அத்­தோடு நூலின் பெயர், நூலின் உள்­ள­டக்கம், ஆசி­ரி­யரின் பெயர், அவ­ரது பின்­னணி, நூலில் தீவி­ர­வாத கருத்­துக்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­னவா-? அந்நூல் வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்­டுள்­ளதா? எந்த நாட்­டி­லி­ருந்து நூல் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. எனும் விப­ரங்கள் இறக்­கு­ம­தி­யா­ளர்­களால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.

மேலு­ம் புத்­தகம் விலை கொடுத்து கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றதா? அல்­லது நன்­கொ­டை­யாகக் கிடைக்­கப்­பெ­று­கி­றதா? நன்­கொ­டை­யென்றால் நன்­கொ­டை­யாக வழங்­கு­ப­வரின் விப­ரங்கள் என்­ப­னவும் தெரி­விக்­கப்­ப­ட­வேண்டும்.

இந்த விதிகள் தொடர்பில் முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளர்ஏ.பி.எம்.அஷரப் விளக்­க­ம­ளிக்­கையில்:
இஸ்­லா­மிய நூல்கள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வ­தற்கு குறிப்­பிட்ட விப­ரங்­க­ளுடன் விண்­ணப்பம் கிடைத்­ததும் அது தொடர்பில் ஆராய்ந்து புத்­தகம் இறக்­கு­மதி செய்­வ­தற்கு தகு­தி­யு­டை­ய­தென்றால் அது தொடர்­பான சிபா­ரி­சினை திணைக்­களம் புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சிற்கு வழங்கும்.

புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு பரி­சீ­லனை செய்து பாது­காப்பு அமைச்­சுக்கு தனது சிபாரிசினை வழங்கினால் மாத்திரமே இஸ்லாமிய புத்தகங்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்ய முடியும்.

இந்­ந­டை­முறை தற்­போது அமு­லுக்கு வந்­துள்­ளது. எனவே இறக்­கு­ம­தி­யா­ளர்கள் இத­னைப்­பின்­பற்­ற­வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.