இந்தியா போன்று இலங்கையும் நெருக்கடிக்குள் தள்ளப்படுமா?

0 829

உலக நாடு­களில் மீண்டும் கொவிட் 19 தொற்றுப் பரவல் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளது. நேற்று முன்­தினம் 881,124 பேர் உல­க­ளா­விய ரீதியில் தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இதுவே உலகில் ஒரே நாளில் அதி­க­ள­வானோர் தொற்­றுக்­குள்­ளான நாள் என ஊட­கங்கள் கூறு­கின்­றன. அத்­துடன் நேற்று முன்­தினம் மாத்­திரம் 14,122 பேர் உல­கெங்கும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

குறிப்­பாக இந்­தி­யாவில் மாத்­திரம் ஒரே­நாளில் (நேற்று முன்­தினம்) 315,802 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ள­துடன் அன்­றைய தினம் 2,102 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இதுவே இந்­தி­யாவில் ஒரே நாளில் ஏற்­பட்ட அதிக தொற்று என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக புது டில்­லியில் அள­வுக்­க­தி­க­மான தொற்­றா­ளர்கள் மற்றும் மர­ணங்­களால் அங்­குள்ள வைத்­தி­ய­சா­லைகள் நோயா­ளி­க­ளாலும் சட­லங்­க­ளாலும் நிரம்பி வழி­கின்­றன. நோயா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்குத் தேவை­யான ஒட்­சிசன் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளதால் அங்கு பாரிய நெருக்­கடி தோன்­றி­யுள்­ளது. மக்­க­ளுக்கு முன்­ன­ணியில் நின்று சிகிச்­சை­ய­ளித்து வரும் வைத்­தி­யர்கள் கூட உயி­ரி­ழக்கும் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. சட­லங்­களை வீதி­களில் அடுக்கி வைக்­கின்ற, கிடைத்த இடத்தில் வைத்து எரிக்­கின்ற சம்­ப­வங்­களும் பதி­வாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தி­யாவில் ஏற்­பட்­டுள்ள இந்த நிலைமை இலங்­கை­யிலும் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­பதே எமது பிரார்த்­த­னை­யாகும். எனினும் சிங்­கள, தமிழ் புத்­தாண்டு விடு­மு­றையைத் தொடர்ந்து நாட்டில் கொவிட் தொற்­றா­ளர்­களின் எண்­ணிக்­கையில் திடீர் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தார பணி­ய­கத்தின் தக­வல்கள் கூறு­கின்­றன. மக்கள் புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் சுகா­தார விதி­மு­றை­களை மீறிச் செயற்­பட்­ட­மையே இதற்குக் காரணம் எனக் கூறப்­ப­டு­கி­றது.

இந் நிலையில் நேற்­றைய தினம் குளி­யா­பிட்­டிய பொலிஸ் பிரிவு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு முன்­ன­ராக குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள தித்­த­வல்­கால கிராம சேவை­யாளர் பிரிவு முடக்­கப்­பட்­டது. கம்­பஹா மாவட்­டத்­தி­லுள்ள திவு­ல­பிட்­டி­ய­விலும் நூற்­றுக்கும் அதி­க­மான தொற்­றா­ளர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளதால் அப் பகு­தியும் முடக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அண்­மைக்­கா­ல­மாக எழுந்­த­மா­ன­மான பி.சி.ஆர். பரி­சோ­த­னைகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் புத்­தாண்டின் பின்னர் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தினமும் 15 ஆயிரம் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது. புத்­தாண்­டுக்கு முன்னர் தினமும் 100 பேர் வரை­யி­லேயே தொற்­றுக்­குள்­ளா­கிய நிலையில் தற்­போது தினமும் 500 பேர் வரை தொற்­றுக்­குள்­ளா­கின்­றனர். இது 5 மடங்கு அதி­க­ரிப்­பாகும். எதிர்­வரும் நாட்­களில் தினமும் தொற்­றுக்­குள்­ளா­கின்­ற­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது பரவும் வைரஸின் பாதிப்­பினால் தொற்­றா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் அறி­கு­றி­க­ளிலும் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­வ­தாக ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­ப­டு­ப­வர்­களில் கணி­ச­மான இளம் வய­தி­னரைக் காண முடி­வ­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

முஸ்­லிம்கள் தற்­போது ரமழான் மாத அமல்­களில் ஈடு­பட்டு வரும் நிலையில் பல பள்­ளி­வா­சல்­களில் உரிய சுகா­தார விதி­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை எனும் முறைப்­பா­டுகள் தமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக வக்பு சபை தெரி­வித்­துள்­ளது. அதே­போன்று கிழக்கு மாகா­ணத்தில் இடம்­பெற்ற சுகா­தார அதி­கா­ரி­களின் சந்­திப்பு ஒன்­றிலும் இந்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ரமழான் மாதத்தில் கடைப்­பி­டிக்­க­வென ஏலவே சுகா­தார அமைச்­சினால் வெளியிடப்பட்ட வழி­காட்­டல்கள் உரிய முறையில் பின்­பற்­றப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ரமழான் மாதத்தில் வணக்க வழி­பா­டு­க­ளுக்­கா­கவும் இப்­தா­ருக்­கா­கவும் ஒரே நேரத்தில் கூடு­த­லானோர் ஒன்று சேர்­வதால் ஒரு மீட்டர் இடை­வெளி, முகக் கவசம் அணிதல், முஸல்­லாக்­களை பயன்­ப­டுத்­துதல் போன்ற விதி­மு­றைகள் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும் என வக்பு சபை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

பள்­ளி­வாசல் ஒன்றின் ஊடாக புதி­ய­தொரு கொத்­தணி உரு­வா­கி­யது என்ற பழி எம்­மீது வந்­து­விடக் கூடாது. கடந்த காலங்­களில் முஸ்­லிம்­கள்தான் இலங்­கையில் கொரோ­னாவைப் பரப்­பி­னார்கள் என இன­வாத ஊட­கங்கள் மேற்­கொண்ட பிர­சா­ரங்­க­ளையும் அதனால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளையும் நாம் மறந்­து­விட முடி­யாது. என­வேதான் நாம் இது விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இன்றேல் வக்பு சபை கூறியுள்ளதைப் போன்று மீண்டும் பள்ளிவாசல்களை மூட வேண்டிய துரதிஷ்டநிலை தோற்றம் பெறலாம்.

மொத்தத்தில் இலங்கையும் இந்தியா போன்ற ஆபத்துக்கு முகங்கொடுக்க வேண்டி வருமோ என்ற அச்சம் பலர் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்குத் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களது பொறுப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.