பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான புதிய புனர்வாழ்வு வர்த்தமானி தடை கோரி உயர் நீதிமன்றில் 6 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

மத சிந்தனை, கருத்து, சமத்துவம், சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருத்தல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் தெரிவிப்பு

0 474

(எம்.எப்.எம்.பஸீர்)
அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்ட விதிகள் உள்­ள­டக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்ட நிலையில், அந்த வர்த்­த­மா­னிக்கு தடை கோரி உயர் நீதி­மன்றில் ஆறு அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

குறித்த வர்த்­த­மா­னி­யா­னது, அர­சி­ய­ல­மைப்பின் 3 ஆவது அத்­தி­யா­யத்தில் கூறப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தாக அமைந்­துள்­ள­தாக கூறியே இந்த மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான அம்­பிகா சற்­கு­ண­நாதன், மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­காக மத்­திய நிலையம், மனித உரிமை செயற்பாட்டாளர் ஷிரீன் சரூர், மட­வளை பஸாரை சேர்ந்த அப்துல் ஜவாத் இன்சாப், அப்துல் வஹாப் ஹில்மி அஹமட் மற்றும் பாத்­திமா சில்மா மொஹிதீன் அஹமட், அர­நா­யக்­கவைச் சேர்ந்த எம்.எல்.நெளபர் அமீர் ஆகி­யோரால் இந்த 6 மனுக்­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.
இவ்­வாறு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மூன்று மனுக்­களில் பாது­காப்பு செயலர் ஓய்­வு­பெற்ற ஜெனரல் கமல் குண­ரத்ன, புனர்­வாழ்வு ஆணை­யாளர் நாயகம் ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரால் தர்­ஷன ஹெட்டி ஆரச்சி, பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, சட்டமா அதிபர் ஆகிய நால்வர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். ஏனைய இரு மனுக்­களில் புனர்­வாழ்வு ஆணை­யா­ளர்­நா­யகம் ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்டி ஆரச்சி, பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, சட்ட மா திபர் ஆகிய மூவர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 27 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் ஜனா­தி­ப­தி­யினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி 2218/68 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யினால் கையெ­ழுத்­தி­டப்­பட்டு மார்ச் 12 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட இந்த புனர்­வாழ்­வ­ளித்தல் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலின் முத­லா­வது ஒழுங்­கு­வி­தி­யா­னது, இவ்­வர்த்­த­மா­னியின் உள்­ள­டக்­கத்தை ‘ 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடுப்பு ( வன்­மு­றை­யான மட்டு மீறிய மதக் கொள்­கை­கையைக் கொண்­டி­ருப்­ப­தற்கு எதி­ரான தீவி­ர­ம­ய­மற்­ற­தாக்­குதல்) ஒழுங்­கு­வி­திகள் ‘ என அறி­முகம் செய்­துள்­ளது.
இவ்­வர்த்­த­மா­னியின் 5 ஆம் ஒழுங்­கு­வி­தியின் 4 ஆவது உப ஒழுங்கு விதி­யா­னது, அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர் ஒரு­வரை, வழக்கு விசா­ர­ணைகள் இன்றி புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்த நீதிவான் ஒரு­வ­ருக்கு அதி­கா­ர­ம­ளிக்­கின்­றது. இதற்­காக சட்ட மா அதி­பரின் எழுத்து மூல அனு­மதி மட்­டுமே அவ­சி­ய­மா­கி­றது.

குறித்த ஒழுங்கு விதி பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. ‘ புரி­யப்­பட்ட தவறின் தன்­மைக்கு இணங்க சர­ண­டைந்­தவர் ஒரு­வ­ருக்கு அல்­லது, தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டவர் ஒரு­வ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் நட­வ­டிக்­கை­களை தொடுப்­ப­தற்குப் பதி­லாக புனர்­வாழ்வு நிலை­ய­மொன்றில் அவ­ருக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும் என சட்ட மா அதிபர் அபிப்­பி­ரா­யப்­ப­டு­மி­டத்து, அத்­த­கைய சர­ண­டைந்­தவர் அல்­லது தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டவர் சட்ட மா அதி­பரின் எழுத்து மூல அங்­கீ­கா­ரத்­துடன் நீதிவான் ஒருவர் முன் நிறுத்­தப்­ப­டுதல் வேண்டும். நீதிவான் ஒருவர், 3 ஆம் ஒழுங்­கு­வி­தியில் குறித்­து­ரைக்­கப்­பட்ட தவ­றுகள் அல்­லாத வேறு ஏதும் தவ­று­களை அத்­த­கைய சர­ண­டைந்த அல்­லது தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தவர் புரிந்­துள்­ளாரா என்­பதை கருத்தில் கொண்டு ஒரு புனர்­வாழ்வு நிலை­யத்தில் ஒரு வரு­டத்தை விஞ்­ஞாத காலப்­ப­கு­திக்­காக அவரை புனர்­வாழ்­வுக்­காக ஆற்­றுப்­ப­டுத்தி கட்­ட­ளை­யாக்­கலாம்.’

எனினும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பா­னது, கைது செய்­யப்­படும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுப்­ப­தற்­கான அடிப்­படை உரிமை உள்­ள­தாக கூறும் நிலையில், இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லா­னது, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையும், சர்­வ­தேச இணக்­கப்­பா­டு­க­ளையும் குறிப்­பாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்­படும் சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்­டி­னையும் மீறும் வகையில் அமைந்­துள்­ள­தாக மனு­தா­ரர்கள் தமது மனுக்­களில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

குறிப்­பாக குறித்த புனர்­வாழ்வு வர்த்­த­மா­னி­யா­னது, அர­சி­ய­ல­மைப்பின் 3 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் உள்ள 10 ஆவது உறுப்­பு­ரை­யான மத சுதந்­திரம், சிந்­தனை சுதந்­திரம், மன­சாட்­சியை பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­திரம் , 11 ஆவது உறுப்­பு­ரை­யான சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­காமல் இருப்­ப­தற்­கான சுதந்­திரம், 13 ஆவது உறுப்­பு­ரை­யான தன்­னிச்­சை­யாக கைது செய்­யப்­ப­டாமல், தண்­டிக்­கப்­ப­டாமல் இருப்பதற்கான உரிமை, 14 ஆம் உறுப்புரையான பேச்சு, ஒன்றுகூடல், நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

எனவே குறித்த வர்த்தமானியை அமுல்படுத்துவதை உடனடியாக தடை செய்யுமாறும், மனுக்களை விசாரணைக்கு ஏற்று, மனுதாரர்களுக்கு அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் 10,11,12(1), 13 (1), 13 (2), 13 (3), 13 (4),13 (3), 14 (1) அ, ஆ,இ, ஈ, உ, ஊ,எ ஆகிய உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றை கோரியுள்ளனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.