புனித ரமழான் மாதத்திற்குள்  அசாத் சாலியை விடுவியுங்கள்

ரியாஸ் சாலி ஜனாதிபதிக்கு கடிதம்

0 593

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

ஷரீஆ சட்டம் பற்றி ஊட­கங்­களில் கருத்து தெரி­வித்­த­தாக குற்றம் சுமத்தி கொள்­ளுப்­பிட்டி சந்­தையில் கைது செய்­யப்­பட்ட அசாத்­சாலி தற்­போது பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டு­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­டவர் என அவர்­மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. எனது சகோ­தரர் தீவி­ர­வா­தியோ அடிப்­ப­டை­வா­தியோ அல்ல.அவரை புனித ரமழான் மாதத்தில் விடு­தலை செய்­யுங்கள் என­அ­சாத்­சா­லியின் சகோ­தரர் ரியாஸ் சாலி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

கடி­தத்தில் மேலும் தெரிவிக்க ப்­பட்­டுள்­ள­தா­வது “ அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை பாது­காப்பு பிரி­வி­ன­ரிடம் சர­ண­டையச் செய்­வ­தற்கு அவர் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டார். அடிப்­ப­டை­வா­தத்­துக்கும், தீவி­ர­வா­தத்­துக்கும் எதி­ராக குரல் கொடுத்­தவர் அவர்.அவரின் விடு­த­லையை பல்­வேறு சிவில்­ச­மூக அமைப்­புகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில் அவர் மீதான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி ரமழானில் விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­மாறு வேண்­டிக்­கொள்­கிறேன்.

தான் நிர­ப­ராதி குற்­ற­மற்­றவன் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு அவ­ருக்கு அவ­காசம் வழங்­கு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறேன் என கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.