ஜெய்லானியில் தாதுகோபுரம் நிர்மாணிப்பதற்கு கண்டனம்

0 476

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜெய்­லா­னியில் தொல்­பொருள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டு­தப்­பட்­டுள்ள சுரங்­க­ம­லையில் நிர்­மா­ணிக்­கப்­படும் 100 அடி உய­ர­மான தாது­கோ­பு­ரத்­துக்கு ஜெய்­லானி பள்­ளி­வாசல் பரி­பா­லன சபையின் ஆலோ­சகர் ஒருவர் கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

மேலும் நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த மத்­திய நிலை­யத்தின் தலைமை பிக்­கு­வான வது­ர­கும்­புர தம்­மா­ர­தன தேரர் தெரி­வித்­துள்ள கருத்­துகள் முற்­று­மு­ழு­தாக தவ­றா­னவை என்றும் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் அவர் “விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்; நெல்­லி­கல தேரர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிர­தேசம் அவர்­க­ளுக்­கு­ரி­ய­தெ­னவும், பள்­ளி­வா­சலில் இஸ்­லாத்­துக்கு முர­ணான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் கருத்து வெளி­யிட்­டுள்ளார். ஜெய்­லா­னியில் அடிப்­ப­டை­வாத வஹா­பிசக் கொள்­கைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்படுவதா­கவும் கூறி­யுள்ளார். இக்­க­ருத்­துக்கள் அடிப்­ப­டை­யற்­ற­தாகும்.

பள்­ளி­வா­சலும் சுரங்­க­ம­லையும் தொல்­பொருள் வல­ய­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 6 ஏக்கர் நிலப்­ப­ரப்­பி­லேயே அமைந்­துள்­ளது. எனவே தொல்­பொருள் வல­யத்தில் எவ்­வித நிர்­மா­ணப்­ப­ணி­க­ளையும் முன்­னெ­டுக்­க­மு­டி­யாது. ஆனால் தற்­போது சுரங்­க­ம­லையில் தாது­கோ­பு­ர­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது.

2013 ஆம் ஆண்டு தற்­போ­தைய ஜனா­தி­பதி பாது­காப்பு செய­லா­ள­ராக பதவி வகித்த காலத்தில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் உலமா சபை தவ­றான கருத்­து­களைத் தெரி­வித்­துள்­ளது. இதன்­கா­ர­ண­மா­கவே நெல்­லி­கல தேரர் பள்­ளி­வா­சலில் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான கொள்­கைகள் பின்­பற்­றப்­ப­டு­வ­தாகத் தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

‘ஜெய்லானி பள்ளிவாசலையும், ஸியாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பள்ளிவாசல் பரிபாலனசபை அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.