அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக நியமிக்குக

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

0 449

(றிப்தி அலி)
மாவட்ட மற்றும் பிர­தேச அபி­வி­ருத்தி குழுக்­களின் தலை­வர்­க­ளாக தம்மை நிய­மிக்­கு­மாறு 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பா­ளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பசில் ராஜ­ப­க்ஷ­வி­டமே இந்த கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், எம்.எஸ்.தௌபீக், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் எம்.எம். முஷாரப் ஆகி­யோ­ரி­னா­லேயே இந்த கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­கு­றிப்­பிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற மாவட்ட அபி­வி­ருத்தி குழுவின் இணைத் தலை­வர்­க­ளா­கவும், தேர்தல் தொகு­தி­க­ளி­லுள்ள பிர­தேச அபி­வி­ருத்தி குழுக்­களின் தலை­வர்­க­ளா­கவும், தங்­களின் மாவட்­டத்­தி­லுள்ள வேறு சில பிர­தேச அபி­வி­ருத்தி குழுக்­களின் இணைத் தலை­வர்­க­ளா­கவும் தம்மை நிய­மிக்­கு­மாறே இவர்கள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

எவ்­வா­றா­யினும், மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹமட் மாத்­திரம், அவ­ரது வேண்­டு­கோ­ளுக்­க­மைய காத்­தான்­குடி, ஏறாவூர், கோரளைப் பற்று மேற்கு மற்றும் கோரளைப் பற்று மத்தி ஆகிய பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.