(எஸ்.எம்.எம். முர்ஷித், எச்.எம்.எம் பர்ஸான்)
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது முதல் கடந்த திங்கட் கிழமை வரை ஓட்டமாவடி, மஜ்மா நகர் பிரதேசத்தில் 68 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஓட்டமாவடி, மஜ்மா நகர், சூடுபத்தினசேனையில் இதற்கென அடையாளம் காணப்பட்ட பகுதியிலேயே குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 65 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் 2 கிறிஸ்தவர்களின் சடலங்களும் 1 பௌத்தரின் சடலமும் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli