சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் 14 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உரிய சட்ட ரீதியான பொறிமுறைகளின்மை, நியாயமான நீதிமன்ற நடவடிக்கைகளின்மை, குடும்பத்தினரையும் சட்டத்தரணிகளையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமை ஆகியவற்றுடன் எந்தவிதமான நம்பகமான ஆதாரங்களுமின்றியும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஹிஜாஸ் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
2020 ஏப்ரல் 14 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli