பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 11 அமைப்புகளுக்கு தடை

விதிகளை மீறுவோருக்கு 10 முதல் 20 வருட சிறைத் தண்டனை

0 382

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக கடந்த 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தில் முதலாவது நோன்பை நோற்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்­தின்கீழ் 27 ஆம் பிரிவு 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறும் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ கையொப்­ப­மிட்­டுள்ளார்.
இதற்­க­மைய பின்­வரும் அமைப்­புக்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­கின்­றன:
1. ஐக்­கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
5. ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (JASM) மறு­பெயர் ஜம்­மாஅத் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹ­ம­தியா ஒழுங்­க­மைப்பு மறு­பெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா மறு­பெயர் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா கழகம் மறு­பெயர் ஜமாஅத் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா
6. தாருல் அதர் மறு­பெயர் ஜாமிஉல் அதர் பள்­ளி­வாசல் மறு­பெயர் தாருல் அதர் குர் ஆன் மத்­ரசா மறு­பெயர் தாருல் அதர்­அத்­த­பா­விய்யா
7. ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் (SLISM) மறு­பெயர் ஜம்­இய்யா
8. ஈராக் மற்றும் சிரியா இஸ்­லா­மிய அரசு (ISIS) மறு­பெயர் அல் – தௌலா அல் – இஸ்­லா­மியா
9. அல்­கைதா அமைப்பு
10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறு­பெயர் சேவ் த பேர்ள் சங்கம்
11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

இதே­வேளை இலங்­கையில் அல்­லது இலங்­கைக்கு வெளியில் குறித்த அமைப்­புகள் தொடர்பில் பின்­வரும் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­ப­டுதல் அவற்றில் சம்­பந்­தப்­ப­டுதல் போன்ற சந்­தே­கத்­துக்கு உட்­ப­ட­லா­காது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் மேற்­கு­றிப்­பிட்ட அமைப்­புக்­களின்
(அ) உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ராக அல்­லது அங்­கத்­த­வ­ரொ­ரு­வ­ராக இருத்­த­லா­காது,
(ஆ) அதற்குத் தலை­மைத்­துவம் அளித்­த­லா­காது,
(இ) சீரு­டையை, உடையை, சின்­னத்தை, தனிக்­கு­றியை அல்­லது கொடியை அணி­தலோ, வெளிக்­காட்­டு­தலோ, ஏந்­து­த­லோ­அல்­லது உடை­மையில் வைத்­தி­ருத்­தலோ ஆகாது,
(ஈ) கூட்­ட­மொன்றை அழைத்­தலோ, கூட்­டு­தலோ, நடாத்­து­தலோ அல்­லது அதில் பங்­கு­பற்­று­தலோ ஆகாது,
(உ) உறுப்­பாண்­மையைப் பெறு­தலோ அல்­லது அதைச் சேரு­தலோ ஆகாது,
(ஊ) ஓர் உறுப்­பி­ன­ருக்கு, அங்­கத்­த­வ­ருக்கு அல்­லது வேறெ­வ­ரேனும் இணை­யா­ள­ருக்குப் புக­லி­ட­ம­ளித்­தலோ, அவரை மறைத்­து­வைத்­தலோ அல்­லது அவ­ருக்கு உத­வு­தலோ ஆகாது,
(எ) மேம்­பாட்­டுக்கு உத­வு­தலோ, அதனை ஊக்­கு­வித்­தலோ, அதற்கு ஆத­ர­வ­ளித்­தலோ, மதி­யு­ரை­ய­ளித்­தலோ, உத­வு­தலோ அல்­லது அதன் சார்பில் செய­லாற்­று­தலோ ஆகாது,
(ஏ) ஏதேனும் செயற்­பாட்டை அல்­லது நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­த­லோ­அல்­லது அதில் பங்­கு­பற்­று­தலோ ஆகாது,
(ஐ) பணத்தை அல்­லது பொருட்­களை நன்­கொ­டை­ய­ளித்­தலோ அல்­லது உத­வு­தொ­கை­ய­ளித்­தலோ ஆகாது,
(ஒ) அதற்­காக அல்­லது அதன் பொருட்­களைப் பெறு­தலோ, களஞ்­சி­யப்­ப­டுத்­தலோ, இடம்­பெ­யர்த்­தலோ, உடை­மையில் வைத்­தி­ருத்­தலோ அல்­லது விநி­யோ­கித்­தலோ ஆகாது,
(ஓ) நோக்­கத்தை ஊக்­கு­வித்­தலோ அல்­லது பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தலோ ஆகாது,
(ஒள) அத­னோடு ஏதேனும் கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­த­லா­காது, அல்­லது
(க) அதன் சார்பில் தக­வலைப் பரப்­பு­வித்­த­லா­காது,

சிறைத் தண்­டனை
மேற்­படி ஒழுங்­கு­வி­தி­க­ளுக்கு முர­ணாகச் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு 20 வரு­டங்­க­ளுக்கு மேற்­ப­டாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் என்றும் குறித்த வர்த்­த­மா­னியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை மேற்­படி ஒழுங்­கு­வி­தி­க­ளுக்கு முர­ணாகச் செயற்­ப­டு­வ­தற்கு உடந்­தை­யா­க­வி­ருக்­கின்ற ஒரு­வ­ருக்கு 10 ஆண்­டு­க­ளுக்கு மேற்­ப­டாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் என்றும் குறித்த வர்த்­த­மா­னியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இர­க­சிய பொலிஸ் விசா­ரணை குழுக்கள்
இத­னி­டையே, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் தடை செய்­யப்­பட்­டுள்ள 11 முஸ்லிம் அமைப்­புகள் தொடர்பில் மேல­திக தக­வல்­களைத் திரட்டிக் கொள்­வ­தற்­காக இர­க­சிய பொலிஸ் விசா­ரணைப் பிரிவின் குழுக்கள் நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அக்­கு­ழுக்கள் அவ்­வப்­ப­கு­தி­களில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.

தடை­செய்­யப்­பட்­டுள்ள 11 முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘இந்த அமைப்­புகள் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­களை பேணி­யுள்ள முறை, அத­னுடன் தொடர்­பு­பட்ட தலை­வர்கள், உறுப்­பி­னர்கள், நேர­டி­யாக தொடர்­பு­ப­டா­த­வர்கள் பற்­றிய விப­ரங்­களை சேக­ரிப்­ப­தற்­காக இந்த விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என்றார்.

மேலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தோடு குறிப்பிட்ட அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகள் பற்றி ஆராய்வதுடன் நிதியுதவிகள் அனுப்பி வைப்பவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்தோடு நிதியுதவிகள் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.