பயங்கரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டு 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதிப்பு
வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சுமார் 50 முஸ்லிம் நபர்கள் மீது தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்புச் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
2216/ 37 என்ற இலக்கத்தில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம், 2012ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் 4(7) ஆம் ஒங்கு விதியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் 388 தனி நபர்களுக்கும் தடை விதிப்பதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50 முஸ்லிம்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு உதவியளித்தமை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியுதவியளித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழேயே இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் குழுவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் எனும் அடிப்படையிலேயே இவர்கள் மீது இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள சுமார் 50 பேரின் பெயர் விபரம் வருமாறு :
நாப்லி பிறதர் எனவும் அபு சனா எனவும் அறியப்படும் மீரா சாஹிப், முகமது பவாஸ் எனவும் அபு அய்மான் எனவும் அறியப்படும் அசனார் முஹம்மது ரமீஸ், ஆயிஷா சித்திகா முகமது வசீர், அஹமத் முகமது சப்ரான், முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இல்ஹாம், அஹமது மொஹமது அர்சத், ஜீனுல் ஆப்தீன் மொஹமது ஜெசிம், ரிப்ஷான் எனவும் அறியப்படும் முகமது ஹனிபா மொஹமது ரிப்ஷா, உவைஸ் எனவும் அறியப்படும் முகமது காசிம் முகமது உவைஸ், அபு துரைபா எனவும் அபு துரிபா எனவும் அறியப்படும் முகமது உஷனார் முகமது, நௌஷாத் முகமது இஸ்மாயில் முகமது சல்மான், அபு ஹன்னல எனவும் அறியப்படும் முகமது இஸ்மாயில் முகமது சல்மான், அபு ஹுனேஷ் எனவும் அறியப்படும் முகமது நசார் முகமது நிம்சார், ரிஸ்மின் எனவும் அபு அசாத் எனவும் அறியப்படும் முகமது ஹனிபாகே முகமது, ரிஷ்மி முகமது ரிஸ்வி அப்லால் அகமது, அபு ஹம்தா எனவும் அறியப்படும் ஹஸ்புல்லா கான் ஹுஸ்னி அஹமது, அபு அப்ரார் எனவும் அறியப்படும் மொஹிதீன் பாவா முகமது ரூமி, முகமது முஸ்னி எனவும் அபு சாஹித் எனவும் அறியப்படும் முகமது மன்சூர் சிஹுல்லா, அபுவல் வானர் எனவும் அறியப்படும் முகமது ராம்சின் ருஷ்டி அஹமது, முகமது சாஹிர் முகமது அஹ்சான், அபு ஹிந்த் எனவும் அறியப்படும் முஸ்தாக் அலி அம்ஹார், முஹம்மது தாசிம் முஹம்மது அகீல், அபு மிஜ்தா எனவும் அறியப்படும் அப்துல் ஹலீம் முகமது ஹிமாஸ், அபு துராப் எனவும் அறியப்படும் முகமது தாஹிர் ஹிதாயத்துல்லா, அலி எனவும் அறியப்படும் முகமது ரபைதீன் முகமது அலி, அபு சல்மான் எனவும் அறியப்படும் முகமது ரியால் முகமது சஜீத், அபு அனாஸ் எனவும் அறியப்படும் முகமது ரைசுத்தீன் அப்துல் ரஹுமான், அபுராவா எனவும் அறியப்படும் சீனுல் அப்தீன் ஹப்சால், முகமது அவ்தாத் அனீஸ் முஹம்மது,சியாம் எனவும் அறியப்படும் சாவுல் ஹமீத் ஹமீஸ் முகமது, அமீர் ஹம்சா முகமது வகர் யூனிஸ், பெரோஸ்கான் முகமது வாகிர், அபு கனித் எனவும் அறியப்படும் முகமது சாபி சஜித், சாலி முகமது நலீம், மிஹார்தீன் முஹம்மது சுஹ்ரி, இத்திசாம் அகமது சுஹுர், கச்சி முகமது மொஹமட் ஜெம்சித், அப்துல் ஹக் முகமது சமீர், அப்துல் கபூர் முகமது ஹசன், அபு சலாமா எனவும் அறியப்படும் முகமது அபுசாலி முகமது சாஹிம், அபு அம்மார் எனவும் அறியப்படும் அப்துல் காதர் முகமது அசீம், முகமது இப்ராஹிம் சபின், அபுசுலை எனவும் அறியப்படும் முகமது சாருக் முகமது முஜித், மொஹமது நலிம்சார் மொஹமது அரூஷ், ஜாசிர்கான் ஜௌபர் சதீக், அப்துல்லா எனவும் அறியப்படும், முகமது நாசர் முகமது அப்துல்லா, அபு மசூத் எனவும் அறியப்படும் முகமது நிசாம் முகமது வாசிம், மகம்மது தாஹிர் மொஹமட் ரசாத், அபு சஹால் எனவும் அறியப்படும் ஹிஸ்புல்லா கான் ஹம்தி அஹமது. இவர்கள் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.- Vidivelli