ஜெனீவா பிரே­ரணை: இலங்­கையைக் கைவி­டாத முஸ்லிம் நாடுகள்

0 556

றிப்தி அலி

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ரணை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்த தீர்­மா­னித்­த­ிற்கு ஆத­ர­வாக 22 நாடு­களும் எதி­ராக 11 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அதே­வேளை, 14 நாடுகள் நடு­நிலை வகித்­தன.

இலங்­கையில் 30 வரு­ட­மாக இடம்­பெற்ற யுத்­தத்தின் போது நடந்­த­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச நாடுகள் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன.

கடந்த 2012ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யில முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றப்­பட்­டது.

இலங்­கையின் இறு­திக்­கட்டப் போரில் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­பட்­ட­தா­கவும் போர்க்­குற்­றங்கள் நடந்­துள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்த நிலையில், ஐக்­கிய நாடு­களின் நிபு­ணர்­குழு அவற்றை ஆரா­யு­மாறு கோரி அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

இலங்­கைக்கு ஆத­ர­வ­ளித்த நாடு­களில் பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் , உஸ்­பெ­கிஸ்தான் மற்றும் சோமா­லியா ஆகிய நாடுகள் முஸ்லிம் நாடு­க­ளாகும். இந்­தோ­னே­ஷியா, பஹ்ரேன், சூடான், லிபியா, புர்­கினா பாஸோ ஆகிய முஸ்லிம் நாடுகள் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ளாது நடு­நிலை வகித்­தன. எந்­த­வொரு முஸ்லிம் நாடும் இலங்கைக்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வில்லை.

அதற்கு இலங்கைத் தரப்­பி­லி­ருந்து கடும் எதிர்ப்பும் கிளம்­பி­யி­ருந்­தது. அதன் பின்னர் இலங்கை அரசு தானா­கவே அமைத்­துக்­கொண்ட கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவும் பல விட­யங்­களை ஆராய்ந்து தனது அறிக்­கையை சமர்­பித்­தி­ருந்­தது.

இந்த நிலையில், நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­வைத்த சிபா­ரி­சு­களை நடை­மு­றைப்­ப­டுத்த இலங்­கை­யிடம் முறை­யான திட்­டங்கள் எதுவும் இல்லை என்று சுட்­டிக்­காட்­டிய அமெ­ரிக்கா, அந்த பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுத்­தது வந்­தது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த மைத்ரி – ரணில் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் இதனை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இரண்டு வரு­டங்கள் அவ­காசம் கோரி­யது.
இந்த காலப் பகு­தியில் காணாமல் போனோர் ஆணைக்­குழு ஸ்தாபிப்பு போன்ற பல்­வேறு செயற்­திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. இத­னை­ய­டுத்து மேலும் இரண்டு வருட அவ­காசம் கடந்த 2017ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கோரப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ அர­சாங்கம், கடந்த 2020 மார்ச்சில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யினை வாபஸ் பெற்­றுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிலையில் இலங்­கைக்கு எதி­ரான புதிய பிரே­ர­ணை­யொன்­றினை பிரித்­தா­னியா கடந்த பெப்­ர­வரி மாதம் சமர்ப்­பித்­தது. ஆறு நாடு­களின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே இந்த பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

“இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­றுதல் மற்றும் மனித உரி­மை­களை மேம்­ப­டுத்தல்” எனும் தலைப்­பி­லான இந்த பிரே­ர­ணையில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­துடன் பல­வந்த ஜனாஸா எரிப்பு தொடர்­பிலும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாற்­பத்­தேழு நாடுகள் அங்கம் வகிக்­கின்ற இந்த ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள குறித்த பிரே­ர­ணை­யினை எவ்­வா­றா­வது தோற்­க­டிக்க வேண்டும் என்ற முயற்­சியில் இலங்கை அர­சாங்கம் கள­மி­றங்­கி­யது. இதற்கு பாகிஸ்­தானின் உத­வி­யினை இலங்கை கோரி­யி­ருந்­தது.

இதற்கு ஆத­ரவு தேடும் முயற்­சியில் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் நேர­டி­யாக கள­மி­றங்­கி­யி­ருந்தார். இதற்­க­மைய அவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் செய்து ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருடன் பேச்சு நடத்­தினார். இவரின் வரு­கை­யினைத் தொடர்ந்து கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழக்கு ஜனா­ஸாக்­களை நல்­ல­டகம் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் கடந்த வெள்­ளிக்­கி­ழமை (19) இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ பங்­க­ளா­தே­ஷிற்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்­பி­ன­ரான பங்­க­ளாதேஷ் குடி­ய­ரசின் தந்­தை­யாக போற்­றப்­படும் பங்­க­பந்து ஷெய்க் முஜிபுர் ரஹ்­மானின் ஜனன தின நூற்­றாண்டு விழா மற்றும் பங்­க­ளா­தேஷின் சுதந்­திர பொன்­விழா ஆகிய நிகழ்­வு­களில் பங்­கேற்­கவே அவர் சென்­றி­ருந்தார்.

இதன்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேய்க் ஹசீ­னா­விடம் கோரிக்­கை­வி­டுத்­தி­ருந்தார்.

“பங்­க­ளாதேஷ் எப்­போதும் இலங்­கைக்கு பக்­க­ப­ல­மாக இருக்கும்” என இதற்கு அவர் பத­ல­ளித்­தி­ருந்தார். இதே­வேளை, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் மற்­று­மொரு உறுப்பு நாடான பஹ்­ரேனின் பிரதி மன்னர் சல்மான் பின் ஹம்மர் அல் கலீ­பா­வுடன் தொலை­பே­சியில் உரை­யாடி பிர­தமர் மஹிந்த ஆத­ர­வினை கோரி­யி­ருந்தார்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், 57 முஸ்லிம் நாடு­களை உறுப்­பு­ரி­மை­யாகக் கொண்ட சவூதி அரே­பி­யாவின் ஜித்­தா­வினை தலை­மை­ய­க­மாகக் கொண்ட இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான கூட்­ட­மைப்பின் செய­லாளர் யூசுப் அல் ஒதை­மீ­னுடன் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தொலை­பே­சியில் உரை­யாடி இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த பிரே­ரணை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (23) வாக்­கெ­டுப்­பிற்கு வந்­தது. இதன்­போது பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 22 நாடு­களும் எதி­ராக 11 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அதே­வேளை, 14 நாடுகள் நடு­நிலை வகித்­தன.

இலங்­கைக்கு ஆத­ர­வ­ளித்த நாடு­களில் பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், உஸ்­பெ­கிஸ்தான் மற்றும் சோமா­லியா ஆகிய நாடுகள் முஸ்லிம் நாடு­க­ளாகும். இந்­தோ­னே­ஷியா, பஹ்ரேன், சூடான், லிபியா, புர்­கினா பாஸோ ஆகிய முஸ்லிம் நாடுகள் வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொள்­ளாது நடு­நிலை வகித்­தன. எந்­த­வொரு முஸ்லிம் நாடும் இலங்கைக்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வில்லை.

இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக திட்­ட­மி­டப்­பட்ட இன­வாத செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தாலும் முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, இந்த வாக்­கெ­டுப்பு நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன விசேட செய்­தி­யாளர் மாநா­டொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இதன்­போது அவர் கருத்துத் தெரி­விக்­கையில், இலங்­கை­யினைப் பொறுத்­த­வரை இன்று கவ­லைக்­கு­ரிய தின­மாகும். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான தீர்­மானம் பெரும் எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்த பிரே­ர­ணை­யினை நிறை­வேற்­று­வ­தற்கு பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு மேற்­கு­லக நாடு­க­ளினால் முடி­யாமல் போயுள்­ளது. ஒரு நாடு தொடர்பில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்­றுக்­கொள்­ளா­த­பட்­சத்தில் பிரே­ர­ணையில் உள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­மாறு அழுத்தம் பிர­யோ­கிக்க முடி­யாது.

எனவே ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசேட ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களும் நாட்டின் இறை­யாண்­மைக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத வகையில் ஏற்­க­னவே நடை­மு­றையில் இருந்­து­வரும் உள்­ளகப் பொறி­மு­றை­களும் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும்.

பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 22 வாக்­கு­களும் எதி­ராக 11 வாக்­கு­களும் செலுத்­தப்­பட்­டி­ருப்­ப­துடன் 14 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. ஆகவே மொத்­த­மாக 47 உறுப்­பு­நா­டு­களில் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 22 வாக்­குகள் மாத்­தி­ரமே கிடைத்­தி­ருப்­ப­துடன் ஏனைய 25 நாடுகள் அதனை நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றன” என்றார்.

இதே­வேளை, குறித்த பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்டு சில விட­யங்­களை அமுல்­ப­டுத்த கட­மைப்­பட்­டுள்ளோம். இது தொடர்பில் விரி­வாக கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வெளி­யு­றவு செயலாளரான ஓய்வுபெற்ற கடற் படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பபே தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பிரேரணையினை இலங்கை அரசாங்கம் ஒழுங்கான முறையில் கையாளாவிட்டால் பாரிய பொருளாதார விளைவுகளை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.

ஏற்­க­னவே நாடு பொரு­ளா­தார ரீதி­யாக பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. இந்த நிலையில் குறித்த பிரே­ர­ணை­யினை ஒழுங்­கான முறையில் கையா­ளா­விட்டால் இன்னும் பாரிய விளை­வு­களை பொரு­ளாதா ரீதியில் சந்­திக்க நேரிடும் என முன்னாள் நிதி இரா­ஜாங்க அமைச்­ச­ரான எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எரான் விக்­ர­ம­துங்க குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் இந்த பிரே­ரணை தொடர்பில் இலங்கை அர­சாங்கம் மற்றும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை ஆகி­யன எடுக்­க­வுள்ள அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.