வக்பு சபையில் ஆவ­ணங்­கள் சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விடின் பள்ளி நிர்வாகத்தை ஏற்கமாட்டோம்

முஸ்லிம் சமய திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ரப் திட்டவட்டமாக தெரிவிப்பு

0 731

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஊர் மக்­களால் பள்­ளி­வா­ச­லுக்­காக நிர்­வா­கிகள் தெரிவு செய்­யப்­பட்­டாலும் அவர்கள் வக்பு சபையில் ஆவ­ணங்­களை சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விட்டால், வக்பு சட்­டத்தின் படி நம்­பிக்­கை­யா­ளர்­க­ளாக ஏற்றுக் கொள்­ள­ப்படமாட்­டார்கள். வெறும் பரா­ம­ரிப்­பா­ளர்கள் என்ற நிலை­யிலே காணப்­ப­டு­வார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், பரா­ம­ரிப்­பா­ளர்கள் எந்த இடத்­திலும் பள்­ளி­வா­சலைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த முடி­யாது. இது போன்றே நம்­பிக்­கை­யாளர் நிய­மனம் பெற்று அது காலா­வ­தி­யான நிலை­யி­லுள்­ள­வர்­களும் நம்­பிக்­கை­யா­ளர்கள் என அழைக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அவர்கள் பொறுப்­பா­ளர்கள் என்றே அழைக்­கப்­ப­டு­வார்கள்.

வக்பு சபையில் சட்ட ரீதி­யாக நிய­மனம் பெறா­த­வர்கள் பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­தற்கு தகை­மையை இழந்து விடு­கி­றார்கள். பள்­ளி­வா­சலின் நிதி ஒரு ரூபா­வைக்­கூட செல­வ­ழிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு அனு­மதி இல்லை. பள்­ளி­வா­சல்­களின் ஆவ­ணங்­களைக் கூட பயன்­ப­டுத்த முடி­யாது.

அவ்­வாறே வக்பு சொத்­துகள் தொடர்­பாக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களின் போது அவர்கள் ஆஜ­ராக முடி­யாது. அவர்கள் நிய­மனம் பெற வேண்டும் என்ற சட்­டத்தை மீறிய குற்­ற­வா­ளி­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர். இதனால் வக்பு சொத்­து­களை இழக்­கக்­ கூ­டிய நிலையும் ஏற்­ப­டலாம்.

வக்பு சட்­டத்தின் 14.1 உறுப்­பு­ரை­யா­னது பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நடை­மு­றை­யி­லுள்ள அதன் பழக்­கங்கள், விதிகள், ஒழுங்கு விதிகள் மற்றும் வேறு ஒழுங்கு விதி­களின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நம்பிக்கையாளர்களாக உறுதிப்படுத்தி வக்பு சபை நியமனம் வழங்கும் என தெரிவிக்கிறது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.