ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்கு பாக். உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்து முக்கிய அமைச்சர்கள் நன்றி தெரிவிப்பு

0 1,391

(றிப்தி அலி)
ஜெனீவா மாநாட்­டின்­போது இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­த­மைக்கு பாகிஸ்­தானின் தேசிய தினத்­தை­யொட்டி கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வின்­போது, இலங்கை அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்கள் பலரும் பாக். உயர்ஸ்­தா­னி­க­ரிடம் நன்றி தெரி­வித்­தனர்.

பாகிஸ்­தானின் தேசிய தினத்­தி­னை­யொட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வர­வேற்பு நிகழ்வில் அனைத்து அமைச்­சர்­க­ளையும் கலந்­து­கொள்­ளு­மாறு அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­ய­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

பாகிஸ்­தானின் 81ஆவது தேசிய தினம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (23) அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இத­னை­யொட்டி பல்­வேறு நிகழ்­வு­களை கொழும்­பி­லுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானி­க­ரா­லயம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இதன் ஓர் அங்­க­மாக கொழும்பு கிங்ஸ்­பரி ஹோட்­டலில் வர­வேற்பு நிகழ்­வொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்­றது. இந்த நிகழ்வு ஆரம்­பிப்­ப­தற்கு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது.

வழ­மை­யாக திங்­கட்­கி­ழமை பி.ப 5.00 மணிக்கு அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­று­கின்ற நிலையில் இந்த வார அமைச்­ச­ரவைக் கூட்டம் செவ்­வாய்க்­கி­ழமை ஒத்­தி­வைக்­கப்பட்­டது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பான வாக்­கெ­டுப்பு செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­ற­மை­யினால் இது தொடர்பில் கலந்­து­ரை­யாடும் முக­மாவே அமைச்சரவை கூட்டம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்த கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர், ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள கிங்ஸ்­பரி ஹோட்­டலில் நடை­பெறும் பாகிஸ்­தானின் தேசிய தின வர­வேற்பு நிகழ்வில் அனைத்து அமைச்­சர்­களும் பங்­கு­பற்­று­மாறு ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகியோர் அமைச்­சர்­களை அறி­வு­றுத்­தினர். அத்­துடன், குறித்த நிகழ்வில் கலந்­து­கொண்டு இலங்கைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் செயற்­பட்­ட­தற்­காக நன்றி தெரி­விக்­கு­மாறு அர­சாங்­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதற்­க­மைய, சபா­நா­யகர் மஹிந்­த­யாப்பா அபே­வர்­தன, அமைச்­சர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, சரத் வீர­சே­கர, அலி­சப்ரி, நிமல்­சி­றி­பால டி சில்வா, மஹிந்த அம­ர­வீர, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, பந்­துல குண­வர்­தன மற்றும் தயா­சிறி ஜய­சே­கர, துமிந்த திஸா­நா­யக்க, தாரக பால­சூ­ரிய உள்­ளிட்ட இரா­ஜாங்க அமைச்­சர்கள் பலரும் கலந்­து­கொண்­டனர். அத்­துடன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், இஷாக் ரஹ்மான், முஷர்ரப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், பாதுகாப்பு செயலாளர் மற்றும் வெளியுறவு செயலாளர் ஆகியோர் நிகழ்வு ஆரம்பம் முதல் இறுதி வரை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.