உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைதா­னது ஏன்?

0 743

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டின் ஏனைய சமூ­கத்­தி­ன­ரி­டையே, பர­வ­லாகப் பேசப்­படும் இஸ்­லா­மிய அமைப்­புக்­களில் ஒன்றே இலங்கை ஜமாஅத்தே இஸ்­லாமி. அதன் முன்­னைய நாள் தலை­வ­ரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பர­வ­லாக அறி­யப்­படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

ஏற்­க­னவே கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.டி எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அவரை கைது செய்து 32 நாட்­களின் பின்னர் விடு­வித்­தி­ருந்­தனர். 4/21 அன்று கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் மட்­டக்­க­ளப்­பிலும் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை, அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுக்கு இலங்­கைக்குள் மீள பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்க, அதனைக் கட்­டி­யெ­ழுப்ப உத­வி­யமை மற்றும் இனங்­க­ளுக்கு இடையே முரண்­பா­டு­களை தோற்­று­விக்க நட­வ­டிக்கை எடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களே அன்று சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

எனினும் இம்­முறை கைது செய்­யப்­பட்­டுள்­ள­மைக்கு பொலிஸ் பேச்­சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ­ன கூறிய காரணம், இலங்­கையில் வஹாப்­வாதம், சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்­த­னையை விதைத்தார் என்­ப­தாகும். இதற்­காக இலங்கை ஜமா அத்தே இஸ்­லா­மி­யினால் வெளி­யி­டப்­பட்ட அல் ஹசனாத் எனும் சஞ்­சிகை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டினார்.

முதல் தடவை கைது செய்­யப்­பட்டு சி.சி.டி.யினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விசா­ரித்த போது, அவ்­வி­சா­ர­ணை­களில் திருப்தி இல்­லாமல், அவர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்தார். அங்கும் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே, ரி.ஐ.டி.யினரின் கோரிக்­கைக்கு அமை­யவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். இவ்­வா­றான நிலையில், அதே ரி.ஐ.டி.யினரால் தற்­போது அவர் 2 ஆவது தட­வை­யாக கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைது சம்­பவம்:
கடந்த 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெமட்­ட­கொ­டையில் இருந்­த­போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் இரு அதி­கா­ரிகள் அவரை சென்று சந்­தித்­துள்­ளனர். அதன் பின்னர் அவரை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அலு­வ­ல­கத்­துக்கு அழைத்துச் சென்­றுள்ள அவர்கள், அன்­றைய தினம் ஜும் ஆ தொழு­கைக்கு செல்­லவும் அவரை அனு­ம­தித்­துள்­ளனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே அன்­றைய தினம் இரவு 7.00 மணி­ய­ளவில் அவரைக் கைது செய்­வ­தாக அவ­ரது வீட்­டா­ருக்கு தொலை­பேசி ஊடாக ரி.ஐ.டி.யினர் அறி­வித்­துள்­ளனர். எனினும் வீட்­டா­ருக்கு கைதுக்­கான காரணம் கூறப்­ப­ட­வில்லை. எனினும் பொலிஸ் பேச்­சாளர் அஜித் ரோஹன, ஹஜ்ஜுல் அக்பர் வஹாப்­வாதம், சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்­த­னையை தூண்­டி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­ட­தாக அறி­வித்­தி­ருந்தார்.

இலங்கை ஜமா அத்தே இஸ்­லா­மி அதி­ருப்தி:
இந்த கைது தொடர்பில் விஷேட அறிக்­கை­யொன்­றினை விடுத்த இலங்கை ஜமா அத்தே இஸ்­லாமி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் கைது கவ­லையும் அதி­ருப்­தியும் அளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தது. அத்­துடன் அவர் முதல் முறை­யாகக் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்ட போதே, விசா­ரிக்­கப்­பட்ட விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே 2 ஆவது கைதும் அமைந்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

சட்ட ஆலோ­சனை:
இந்­நி­லையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் விவ­காரம் தொடர்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆலோ­சித்து வரு­வ­தாக இலங்கை ஜமா அத்தே இஸ்­லாமி அமைப்பின் முக்­கி­யஸ்தர் சட்­டத்­த­ரணி பாரிஸ் சாலி கூறினார். அவ­ரது கைதும், அதற்­காக கூறப்­படும் கார­ணங்­களும் அதிர்ச்­சி­ய­ளிக்கும் நிலையில், இலங்கை ஜமா அத்தே இஸ்­லாமி அமைப்பு எந்த நிலை­யிலும் நாட்டின் சட்­டத்தை மீறும் வித­மாக செயற்­பட தூண்­டிய அமைப்­பல்ல எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

2 ஆவது கைதின் பின்­னணி:
உண்­மையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 2 ஆவது தட­வை­யாக கைது செய்­யப்­ப­டு­வதில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரணை செய்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையும் ஒரு கார­ண­மாகும்.

1994 ஆம் ஆண்டு முதல் 2018 வரை இலங்கை ஜமாத்தே இஸ்­லா­மியின் தலை­வ­ராக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் செயற்­பட்­டி­ருந்த நிலையில், ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் ஜமா அத்தே இஸ்­லாமி சிந்தனை, இலங்கை ஜமா அத்தே இஸ்­லாமி, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் பிரத்­தி­யே­க­மா­னதும் விரி­வா­ன­து­மான விட­யங்­களை அவ­தா­னிக்க முடி­கி­றது.

குறிப்­பாக ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையில், பரிந்­து­ரைகள் எனும் பகு­தியில், குற்­ற­வியல் வழக்கு விசா­ரணை எனும் தலைப்பின் கீழ் 3 ஆம் பரிந்­து­ரை­யாக இலங்­கையில் இஸ்­லா­மிய அரசை உரு­வாக்க சதி செய்­தமை தொடர்பில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் வழக்கு தாக்கல் செய்­வது தொடர்பில் சட்ட மா அதிபர் ஆராய வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு அறிக்­கையின் 485 ஆம் பக்­கத்தில் குறித்த பரிந்­துரை உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பரிந்­துரை, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 2 ஆவது தட­வை­யாக கைதா­வதை ஊக்­கு­வித்­தது எனலாம்.

இத­னை­விட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இலங்கை ஜமா அத்தே இஸ்­லாமி அமைப்பை தடை செய்ய வேண்டும் என்­பது உள்­ளிட்ட பரிந்­து­ரை­களும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் குறித்த மீள விசா­ரணை ஒன்­றினை ஊக்­கு­வித்த கார­ணி­யாக பொலிஸ் தக­வல்கள் கூறு­கின்­றன.

இலங்கை ஜமா அத்தே இஸ்­லா­மியின் சஞ்­சி­கை­யான அல் ஹசனாத் தொடர்­பிலும் ஆணைக்­குழு அறிக்­கையில் பல்­வேறு பதி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அச்­சஞ்­சிகை ஊடாக அடிப்­ப­டை­வாதம், ஜிஹாத், இஸ்­லா­மிய இராச்­சியம் போன்ற விட­யங்கள் தூண்­டப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கூறு­கின்­றது.

1990 அல் ஹசனாத் இத­ழொன்றில், ஜிஹாத் இன்றி இஸ்­லா­மிய அரசு உரு­வாக முடி­யாது என்ற கருத்தும், 1999 அல் ஹசனாத் இதழில் சிலை வணக்­கத்தை விமர்­சித்து சிலை­களை தகர்க்க வேண்டும் என்ற எண்­ணக்­க­ருவும் அடங்­கிய ஆக்­கங்கள் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு கூறு­கின்­றது. இத­னை­விட, 2001 பெப்­ர­வரி மாத அல் ஹசனாத் இதழில், இஸ்­லாத்­துக்­காக உயிர் தியாகம் செய்­வோ­ருக்கு சுவர்க்­கத்தில் 72 கன்­னி­யர்கள் கிடைப்பர் எனும் விட­யமும், மற்­றொரு இத­ழொன்றில் அஷ்ஷெய்க் யூசுப் அல் கர்­ளா­வியின் கருத்­தான, தற்­கொடைத் தாக்­கு­தல்கள் ஆகு­மா­ன­தாகும் என்ற விட­யமும் அல் ஹசனாத் சஞ்­சிகை ஊடாக வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிடப்பட்டுள்­ளது.

இத­னை­விட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மாதம்பை இஸ்­லா­ஹியா கல்­லூ­ரியில் சேவை­யாற்­றி­ய­போது அங்கு இஸ்­லா­மிய அரசை உரு­வாக்கும் நோக்­குடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட சில நட­வ­டிக்­கை­களை அறிந்­தி­ருந்­த­தா­கவும், செய­ல­மர்­வொன்றில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்­கும்­போது இஸ்­லா­மிய அரசை உரு­வாக்­கு­வது எப்­படி எனும் கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்­ள­தா­கவும் கூறும் ஆணைக்­குழு, இலங்கை ஜமா அத்தே இஸ்­லா­மியின் இலக்கு இலங்­கையில் இஸ்­லா­மிய அரசை உரு­வாக்­கு­வதே என்றும் கூறு­கின்­றது.

இந்நிலையிலேயே, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால், அல் ஹசனாத் சஞ்சிகை ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள், ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாக பொலிஸ் தகவல்கள் கூறின.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை தடுத்து வைத்து விசாரிக்க, 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவில், பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கையெழுத்திட்டுள்ள நிலையில், சி.ஐ.டி., ரி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், ரி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.