வேறு பகுதிகளில் ஜனாஸாக்களை அடக்கும் தேவை இதுவரை இல்லை
ஓட்டமாவடியில் தாராளமாக இடமுண்டு என்கிறார் டாக்டர் ஹம்தானி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய எதுவித பிரச்சினைகளுமின்றி நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இப்பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்கத்துக்காக 5 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பேணி கொவிட் 19 தொற்று பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்கினால் இங்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான தேவையேற்படாது என சுகாதார அமைச்சின் வைத்திய தொழிநுட்ப பணிப்பாளரும் கொவிட் 19 நடவடிக்கைகளுக்கான இணைப்பாளருமான டாக்டர் அன்வர் ஹம்தானி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
ஓட்டமாவடியில், கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘இங்கு இன்றுவரை (செவ்வாய்க்கிழமை) 46 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்களும் இதில் உள்ளடங்குகின்றன. தற்போது அடக்கம் செய்வதற்காக வைத்தியசாலைகளில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஜனாஸாக்கள் இல்லை.
ஓட்டமாவடியில் இதற்கென 5 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியில் சுமார் 300 ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும். மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பேணி வாழப் பழகிக் கொண்டால், கொவிட் 19 பரவாதிருக்க ஒத்துழைப்பு வழங்கினால் இங்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான தேவை ஏற்படாது.
கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கைகள் வேறு மாவட்டங்களிலிருந்து இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் அது தொடர்பில் நாம் ஆராய்வோம். ஆனால் தற்போதைக்கு அவ்வாறான தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
தற்போது ஓட்டமாவடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள் இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கத்தோலிக்க பெண்மணியொருவரின் உடலும் அடக்கம் சம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பகுதி மக்கள் இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கத்தோலிக்க பெண்மணியொருவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது’ என்றார். – Vidivelli