சுப்பர் முஸ்லிம் சிந்தனை இலங்கைக்கு அச்சுறுத்தல்

அரசுக்கும் அறிவித்துள்ளோம் என்கிறது உலமா சபை

0 578

வழிதவறிய சுப்பர் முஸ்லிம் சிந்தனை தொடர்பான விடயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குக

 

(எஸ்.என்.எம்.சுஹைல்)
சுப்பர் முஸ்லிம் சிந்­தனை இந்­நாட்டு மக்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் பிர­தான நீரோட்­டத்­தி­லி­ருந்து விலகிச் செல்லும் நிலை காணப்­ப­டு­வதால், இது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் அச்சம் காணப்­ப­டு­கின்­றது என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக இச்­சிந்­தனை இலங்­கை­யிலும் சில­ரிடம் பரவி வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஆகவே, வழி­த­வ­றிய இச்­சிந்­தனை தொடர்­பான விட­யங்­களை சமூக வலை­த்த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வ­தையும், அவற்றை பிர­சாரம் செய்­வ­தையும் முற்­றாக தவிர்ந்து கொள்­ளு­மாறு சகல முஸ்­லிம்­க­ளையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது என உலமா சபையின் புதிய செய­லாளர் அஷ்ஷேக் எம். அர்கம் நுராமித் தெரி­வித்­துள்ளார். அத்­துடன், வழி­த­வ­றிய சிந்­த­னை­க­ளி­லி­ருந்து சமூகத்தைப் பாது­காத்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது குறித்து ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம், பல நூற்­றாண்­டு­க­ளாக அஹ்­லுஸ்­ஸுன்னா வல் ஜமா­அத்தின் கொள்­கையைப் பின்­பற்றி, இந்­நாட்டின் இறை­மைக்கும் பாது­காப்­பிற்கும் எவ்­வித அச்­சு­றுத்­தலும் இன்றி, நாட்டின் சட்­டங்­களைப் பேணி, ஏனைய சமூ­கங்­க­ளுடன் சக­வாழ்வைப் பேணி வாழ்ந்து வந்த சமூ­க­மாகும்.

அஹ்­லுஸ்­ஸுன்னா வல் ஜமா­அத்தின் கொள்­கைக்கு மாற்­ற­மான வழி­த­வ­றிய சிந்­த­னைகள் முஸ்லிம் சமூ­கத்தில் ஊடு­ருவும் போது அவை தொடர்­பான விழிப்­பு­ணர்வை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்க வேண்­டி­யது சன்­மார்க்க அறி­ஞர்­களின் கட­மை­யாகும். அவ்­வாறே பொது மக்­களும் மார்க்க ரீதி­யான புதிய சிந்­த­னைகள் ஏதேனும் வரும்­போது, அவை தொடர்­பாக ஆலிம்­களை அணுகி தெளி­வு­களை பெற்றுக் கொள்­வதும் அவர்­க­ளது பொறுப்­பாகும்.

இத­ன­டிப்­ப­டையில், சுப்பர் முஸ்லிம் சிந்­தனை பல தெளி­வான அல்-­குர்ஆன் வச­னங்­க­ளுக்கும், ஆதா­ர­பூர்­வ­மான ஹதீஸ்­க­ளுக்கும் மாற்­ற­மா­ன­வை­யாக இருப்­ப­துடன், அல்-­குர்­ஆ­னிலும், அஸ்-­ஸுன்­னா­விலும் மறுமை நாளின் அடை­யா­ளங்கள் தொடர்­பாக வந்­துள்ள பல விட­யங்கள் பற்­றிய சன்­மார்க்க அறி­ஞர்­களின் ஏகோ­பித்த கருத்­துக்­க­ளுக்கும் மாற்­ற­மாக, பகுத்­த­றிவைப் பயன்­ப­டுத்தி சொந்த விளக்கம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாகக் காண­மு­டி­கின்­றது.

அண்­மைக்­கா­ல­மாக இச்­சிந்­தனை இலங்­கை­யிலும் சில­ரிடம் பரவி வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஆகவே, வழி­த­வ­றிய இச்­சிந்­தனை தொடர்­பான விட­யங்­களை சமூக வலை­த்த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வ­தையும், அவற்றை பிர­சாரம் செய்­வ­தையும் முற்­றாக தவிர்ந்து கொள்­ளு­மாறு சகல முஸ்­லிம்­க­ளையும் ஜம்­இய்யா கேட்டுக் கொள்­கின்­றது. அத்­துடன், இச்­சிந்­த­னை­யு­டை­ய­வர்கள் இந்­நாட்டு மக்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் பிர­தான நீரோட்­டத்­தி­லி­ருந்து விலகிச் செல்லும் நிலை காணப்­ப­டு­வதால், இது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் அச்சம் காணப்­ப­டு­கின்­றது. எனவே உரிய அரச அதிகாரிகளுக்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.