மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட  சிறுமி சவூதி படையினரால் மீட்பு

0 813

ஜித்தாவில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட சிறுமி சவூதி படையினரால் மீட்கப்பட்டதோடு சிறுமியை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நபரொருவரை போதைப் பொருள் வைத்திருக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் துரத்திச் சென்றபோது சிறுமியொருவரை பிடித்திழுத்து மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதோடு துப்பாக்கிப் பிரயோகத்திலும் ஈடுபட்டார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸார் அவரை சரணடையுமாறு கட்டளையிட்டனர் எனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் குறித்த நபர் சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பாதுகாப்புப் படையினருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்போது அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.