முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வாரா மைத்­திரி?

0 734

லத்தீப் பாரூக்

2019 ஏப்ரல் 21 இல் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­துக்குப் பின் இந்த நாட்டின் முஸ்லிம் சமூ­கத்தின் மீது வேண்­டு­மென்றே கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள், அவர்­க­ளது சொத்­துக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட சேதங்கள் இவற்றை எல்லாம் விட பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் சிந்­த­னை­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நஞ்­சூட்­டப்­பட்­டமை என சகல அநி­யா­யங்­க­ளுக்­கா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி முஸ்லிம் சமூ­கத்­திடம் மன்­னிப்புக் கோரு­வ­தோடு அவற்­றுக்­கான நட்ட ஈட்­டையும் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தொடர்­பாக ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் மீது எந்தக் குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் மைத்­திரி, ரணில் மற்றும் சில முன்னாள் உயர் அதி­கா­ரிகள் மீது குற்­ற­வியல் தண்­டனைச் சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட வேண்டும் என சிபா­ரிசு செய்­துள்­ளது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அல்­லது என்­டிஜே என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஹோட்­டல்கள் மற்றும் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் தாக்­குதல் நடத்­தி­னார்கள் என்­பது பொது­வாக எல்­லோரும் அறிந்த விட­யமே.

இந்த என்­டிஜே பிரி­வினர் முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒரு பிரி­வினர் அல்ல என்­பதும் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் இந்தச் சம்­ப­வத்­துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்­பதும் அர­சாங்­கத்­துக்கு நன்கு தெரியும். 2014 ஆம் ஆண்­டி­லேயே பல முஸ்லிம் அமைப்­புக்­களும் தனி­ந­பர்­களும் பொலி­ஸா­ருக்கு என்­டிஜே அமைப்பின் செயற்­பா­டுகள் பற்­றியும் அது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடும் என்றும் தகவல் வழங்கி இருந்­தனர். சஹ்­ரா­னையும் அவ­ரது குழு­வையும் கைது செய்­யு­மாறும் அவர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

சில அறிக்­கை­களின் பிர­காரம் இந்­திய புல­னாய்வு சேவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடக்­க­வுள்ள தாக்­குதல் பற்றி ஏப்ரல் 4 ஆம் திக­தியே தகவல் வழங்கி உள்­ளனர். இந்தத் தாக்­குதல் பற்றி அர­சாங்­கத்­திடம் போதிய தக­வல்கள் இருந்­த­தா­கவும் அதை தடுத்து நிறுத்த போதிய கால அவ­கா­சமும் இருந்­த­தா­கவும் சில அமைச்­சர்­களே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

2019 ஆம் ஆண்டு மே 18 இல் த ஐலண்ட் ஆங்­கிலப் பத்­தி­ரி­கையில் பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண எழு­திய ஒரு கட்­டு­ரையில் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

“ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை திட்­ட­மிட்டு நடத்தும் அள­வுக்கு ஒரு நவீன பயங்­க­ர­வாத குழு­வாக தீவிரப் போக்கு ஜிஹாத் அமைப்­பினர் தங்­களை கட்டி எழுப்ப ஒரு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளமை தெளி­வா­கின்­றது. அவர்­க­ளுக்கு வெளி­நாட்டில் இருந்து ஒரு நிபு­ணத்­துவ வழி­காட்­டலும் பணிப்­பு­ரை­களும் கிடைத்­துள்­ள­மைக்­கான வாய்ப்பும் உள்­ளது. சிங்­கள மற்றும் தமிழ் கத்­தோ­லிக்க சமூ­கங்கள் மத்­தியில் இருந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு வன்­மு­றையைத் தூண்டி விடு­வ­தற்­கான நோக்­கமும் இதில் உள்­ளமை தெளி­வா­கின்­றது. கர்­தினால் மல்கம் ரஞ்­சித்தின் வழி­காட்­டலின் கீழ் ஒரு பிரி­வி­னரால் இது­பற்றி விரி­வாக ஆரா­யப்­பட்டும் உள்­ளது. பௌத்த மற்றும் இந்து குருமார் சிலரும் இதில் பங்­கேற்­றுள்­ளனர். 1983 இல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் என்ன செய்­தார்­களோ அதையே மீண்டும் இம்­முறை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செய்ய முனைந்­துள்­ளமை இங்கு நன்­றாகப் புல­னா­கின்­றது.”

இதே­வேளை 26 என்­டிஜே உறுப்­பி­னர்­க­ளுக்கு இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வினர் மாதாந்தக் கொடுப்­ப­னவு ஒன்றைச் செலுத்தி வந்­துள்­ள­தா­கவும் இன்­னொரு அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களுள் சிலர் தான் உயிர்த்த ஞாயிறு படு­கொலைத் தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னால் உள்ள முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­களால் பலிக்­க­டாக்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் இந்தப் பேர­ழிவை தடுத்து நிறுத்­து­வ­தற்குப் பதி­லாக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திருப்­ப­திக்கு புனிதப் பயணம் மேற்­கொண்டார். அங்­கி­ருந்து குடும்­பத்­தோடு சிங்­கப்­பூ­ருக்கு மூன்று நாள் சுற்­றுலாப் பய­ணமும் மேற்­கொண்டார். மறு­பு­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெந்­தோட்­டையில் உல்­லாசம் அனு­ப­விக்கச் சென்றார்.

மூன்று தசாப்த கால இன மோதல்­களின் விளை­வாக இலங்கை முஸ்லிம் சமூகம் பெரும் துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்டு நாட்­டையும் பாது­காத்­தது. ஆனாலும் அவர்கள் மீது 2019 ஏப்ரல் 21 சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான வன்­மு­றைகள் கட்­ட­வி­ழத்து விடப்­பட்­டன.

அர­சாங்கம் அவ­ச­ர­கால விதி­களை அமு­லுக்கு கொண்டு வந்­தது. இஸ்­லாத்தை அரக்­கத்­த­ன­மாகக் காட்டும் வகை­யிலும் ஒவ்­வொரு முஸ்­லி­மையும் பயங்­க­ர­வா­தி­யாகச் சித்­த­ரிக்கும் வகை­யிலும் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் ஏனைய சொத்­துக்கள் என்­ப­ன­வற்றில் கண்­ட­படி தேடுதல் நடத்த மைத்­திரி தனது படை­யி­னரைப் பயன்­ப­டுத்­தினார். முஸ்லிம் ஆண்­களும் பெண்­களும் வகை தொகை­யின்றி கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் தடுத்து வைக்­கப்­பட்டு சிலர் நீதி­மன்­றங்­களில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

அவ­ச­ர­கால நிலையைப் பயன்­ப­டுத்தி முஸ்லிம் வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் பல வெறு­மை­யாக்­கப்­பட்­டன. சமையல் கட்டில் உள்ள கத்­திகள் கூட பயங்­க­ர­வாத ஆயு­தங்­க­ளாகக் கருதி கைப்­பற்­றப்­பட்­டன.

சமய உணர்­வு­களைத் துச்­ச­மாக மதித்த படை­யினர் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் சப்­பாத்துக் கால்­க­ளோடு நாய்­க­ளையும் அழைத்துக் கொண்டு பிர­வே­சித்­தனர். புனித நோன்பு கால­மான றமழான் மாதத்­திலும் இது நடந்­தது. உலகம் முழு­வதும் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு புனிதக் குர்­ஆனைத் தவிர வேறு புனி­த­மான எதுவும் கிடை­யாது. குர்­ஆனைத் தொட முன்னர் கூட முஸ்­லிம்கள் தம்மை சுத்­தப்­ப­டுத்திக் கொண்டு தான் தொடுவர். ஆனால் இலங்கைப் படை­யி­னரோ பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் புகுந்து புனித குர்­ஆனை அவ­ம­தித்த சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றன.

முஸ்லிம் பெண்கள் தமது விருப்­பப்­படி இஸ்­லா­மிய ஆடைகள் அணி­வதை மைத்­திரி அரசு தடை செய்­தது. முஸ்லிம் பெண்­க­ளுக்கு எதி­ரான அட்­டூ­ழி­யங்­களை கட்­டுப்­ப­டுத்­தவும் மைத்­திரி அரசு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. ஒவ்­வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் ஏன் சிறு­வர்கள் கூட சந்­தேகக் கண் கொண்டு பார்க்­கப்­பட்­டனர். அதே சந்­தே­கத்­தோடும் வெறுப்­போடும் கசப்­போடும் அவர்கள் நடத்­தப்­பட்­டனர்.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான ஐரோப்­பிய நாடுகள், இஸ்­ரே­லிய யுத்த வெறி­யர்கள், இந்­தி­யாவின் ஆர்­எஸ்எஸ் தலை­மை­யி­லான பிஜேபி அரசு என்­ப­ன­வற்றால் பரப்­பப்­படும் இஸ்லாம் மீதான அச்­சமும் வெறுப்பும் அல்­லது இஸ்­லா­மோ­போ­பியா இலங்­கைக்­குள்ளும் பிர­வே­சிக்க மைத்­திரி இட­ம­ளித்தார்.

இதே காலப்­ப­கு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சகல மத்­ர­ஸாக்­களும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்­படும் என பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்தார். முஸ்லிம் பெண்­களின் திரு­மண வயதை 18 ஆக உயர்த்தும் வகையில் முஸ்லிம் திரு­மண மற்றும் விவாகச் சட்டம் திருத்­தப்­படும் என அறி­வித்தார். ஷரீஆ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்றார். பள்­ளி­வா­சல்­களில் நிகழ்த்­தப்­படும் மார்க்க உபன்­னி­யா­சங்­களின் பிர­திகள் அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றார். இவை எல்லாம் வழ­மை­யாக கொடுங்கோல் சர்­வா­தி­கா­ரிகள் ஆளும் நாடு­களில் நடப்­பவை.

இவ்­வா­றான அச்சம் மிக்க சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­திரி அர்த்­த­மற்ற தனக்கு சம்­பந்­தமே இல்­லாத ஒரு மாநாட்டில் பங்­கேற்க சீனா­வுக்கு புறப்­பட்டுச் சென்றார். இன­வாத அர­சியல் கட்­சி­களால் போஷித்துப் பேணிப் பாது­காக்­கப்­படும் கொலை­கார கும்­பல்­களின் தயவில் முஸ்­லிம்­களை விட்டு விட்டுச் சென்றார்.

இரும்புக் கம்­பிகள், வாள்கள் மற்றும் கூர்­மை­யான ஆயு­தங்­க­ளுடன் சுமார் 500 பேர் கொண்ட காடையர் கூட்டம் பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்தின் பூரண பாது­காப்­புடன் தமது கைவ­ரி­சை­களை கட்­ட­விழ்த்து விட்­டனர். வீடு­களும் கடை­களும் வர்த்­தக நிலை­யங்­களும் பள்­ளி­வா­சல்­களும் தாரா­ள­மாக எரிக்­கப்­பட்­டன. சுமார் 30க்கும் மேற்­பட்ட முஸ்லிம் கிரா­மங்­களில் இந்த வெறி­யாட்டம் இடம்­பெற்­ற­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. முஸ்லிம் லட்­சா­தி­பதி வர்த்­த­கர்கள் சிலர் இர­வோடு இர­வாக வங்­கு­ரோத்து நிலைக்கு வந்­தனர்.

2019 மே 13 இல் இதே காடையர் குழு­வினர் முஸ்­லிம்­களின் வீடு­க­ளுக்கும், வியா­பார நிலை­யங்­க­ளுக்கும், தொழிற்­சா­லை­க­ளுக்கும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் தீ வைத்து கொளுத்தி முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சின்­னா­பின்­ன­மாக்­கினர். இவை அனைத்தும் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பேண வேண்­டிய பிரி­வி­ன­ரான பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­தினர் பார்த்­தி­ருக்க இரவு பக­லாக இடம்­பெற்­றது. வட மேல் மாகா­ணத்தின் சிலாபம் நகரம் முதல் கம்­பஹா மற்றும் குரு­ணாகல் மாவட்டம் வரை ஊர்­வ­ல­மாக வந்து இந்த அரக்­கத்­த­னத்தை அரங்­கேற்­றினர்.

புனித றமழான் நோன்பு மாத காலத்தில் வீடு­க­ளுக்குள் இருந்து நோன்பு நோற்க முடி­யாத வகையில் முஸ்­லிம்கள் உயி­ருக்கு அஞ்சி காடு­க­ளிலும் வயல் வெளி­க­ளிலும் தஞ்சம் புகுந்­தனர்.

நோன்பு நோற்ற நிலையில் இருந்த ஒரு முஸ்லிம் வெட்­டியும் குத்­தியும் கொல்­லப்­பட்டார். மற்­றொ­ருவர் மிகக் கொடூ­ர­மான முறையில் தனது மனைவி பிள்­ளை­களின் கண்­ணெ­திரே தாக்­கப்­பட்டு வீதி வீதி­யாக இழுத்துச் செல்­லப்­பட்டு கொல்­லப்­பட்டார். இவர்கள் இரு­வ­ருமே இந்த உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­தோடு எந்த வகை­யிலும் தொடர்­பு­ப­டாத அப்­பா­விகள். இந்தச் சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­மான காடை­யர்கள் எவர் மீதும் சட்டம் கை வைக்­க­வில்லை. பெய­ருக்கு சிலர் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்­டனர். இதில் மிகவும் கேவ­ல­மா­னது என்­ன­வென்றால் இந்தச் சம்­ப­வங்­க­ளுக்கு கண்டி திகன பகு­தியில் கார­ண­மாக இருந்த ஒரு கயவன் பொலி­ஸாரால் விடு­விக்­கப்­பட்­டதும் மக்கள் அவனை பகி­ரங்­க­மாக மாலை சூடி வர­வேற்று ஊர்­வ­ல­மாக அழைத்துச் சென்­ற­மை­யாகும்.

எம்.எஸ். பௌஸுல் அமீர் என்ற தச்சுத் தொழில் புரியும் 49 வயது நபர் தனது வீட்டில் தனது 16 வயது மகன் உட்­பட ஏனைய குடும்­பத்­த­வர்கள் முன்­னி­லையில் கழுத்து வெட்டிக் கொல்­லப்­பட்டார்.

நோன்­புடன் இருந்த முஸ்லிம் பெண்கள் அச்சம் கார­ண­மாக தமது சிங்­கள அய­ல­வர்­களின் வீடு­களைத் தேடி ஓடினர். சில நல்ல உள்ளம் கொண்ட மக்கள் அவர்­களைப் பாது­காத்து உணவும் அளித்­தனர். இன்னும் சில கொடி­ய­வர்­களோ தூஷித்து துரத்தி அடித்­தனர். சம்­ப­வத்தில் காயம் அடைந்த சில முஸ்­லிம்­களை தமது ஆட்­டோக்­களில் ஏற்றி ஆஸ்­பத்­தி­ரி­க­ளுக்கு அழைத்துச் செல்­லவும் சில சிங்­கள சார­திகள் மறுத்­தனர்.

இந்த வன்­மு­றை­களைத் தடுத்து நிறுத்த மைத்­தி­ரி-­ ரணில் அரசு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் முறை­யாக ஒழுங்­க­மைக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒன்று என முன்னாள் அமைச்சர் நவின் திஸா­நா­யக்­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த அசம்­பா­வி­தங்­களின் நடுவே பிர­தான ஊட­கங்கள் இஸ்­லாத்தை அரக்­கத்­தனம் கொண்­ட­தாக காட்டும் வகை­யிலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் பயங்­க­ர­வா­தி­க­ளாகக் காட்டும் வகை­யிலும் முழு அள­வி­லான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தது.

இந்த அசம்­பா­வி­தங்­களைத் தோற்­று­விப்­பதில் பின்­ன­ணியில் செயற்­பட்­ட­வர்­களின் நோக்கம் முஸ்­லிம்­க­ளுக்கும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இடை­யி­லான மோதல்­களை உரு­வாக்கி அமெ­ரிக்க, ஐரோப்­பிய மற்றும் இஸ்­ரே­லிய யுத்த வெறி­யர்­களின் இஸ்­லாத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான செயற்­பாட்டை இலங்­கை­யிலும் கட்­ட­வி­ழத்து விட வழி­ய­மைப்­ப­தாகும். எவ்­வா­றேனும் இந்த சதித் திட்டம் பரி­தா­ப­க­ர­மான தோல்­வி­யையே தழு­வி­யது. காரணம் இதை ஓர­ளவு புரிந்து கொண்ட கர்­தினால் மல்கம் ரஞ்சித் முஸ்­லிம்கள் மீது எவ்­வித தாக்­கு­த­லையும் மேற்­கொள்ள வேண்டாம் என தமது சமூ­கத்­த­வர்­களைக் கேட்டுக் கொண்டார்.

பொலிஸார் பெய­ர­ளவில் சிலரைக் கைது செய்­தனர். ஆனால் அவர்கள் ஒரு சில மணி நேரத்தில் விடு­விக்­கப்­பட்­டனர். பொலிஸ் ஊர­டங்கு என்­பது இந்தக் காடை­யர்­க­ளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் அந்த ஊர­டங்­கிற்­குள்ளும் சுதந்­தி­ர­மாக உலா வந்­தனர்.

கைது செய்­யப்­பட்ட முஸ்­லிம்கள் சார்பில் ஆஜ­ராக சிங்­கள சட்­டத்­த­ர­ணிகள் மறுப்புத் தெரி­வித்­தனர். வைத்­தி­யர்கள் காய­ம­டைந்த முஸ்­லிம்­க­ளுக்கும் ஏனைய முஸ்லிம் நோயா­ளி­க­ளுக்கும் மருத்­துவம் செய்ய மறுத்­தனர். முஸ்லிம் பெண்கள் தங்­க­ளது முக்­காட்டை நீக்­கினால் தான் வைத்­தியம் செய்வோம் என வைத்­தி­யர்கள் அடம் பிடித்­தனர். முஸ்­லிம்­களின் கடை­களும் பகிஷ்­க­ரிக்­கப்­பட்­டன. தனது அதி­கார எல்­லைக்கு உட்­பட்ட சந்தைப் பகு­தியில் முஸ்லிம் வர்த்­த­கர்கள் வியா­பாரம் செய்யக் கூடாது என ஒரு பிர­தேச சபைத் தலைவர் தடை விதித்தார். முஸ்­லிம்­க­ளோடு எவ்­வி­த­மான கொடுக்கல் வாங்­கலும் செய்ய வேண்டாம் என சில பௌத்த விகா­ரைகள் தமது பக்­தர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கின.

அன்­றாட வாழ்க்கை முறையே ஆச்­ச­ரியம் மிக்­க­தா­கவும் கேள்­விக்­கு­ரி­ய­தா­கவும் மாறி­யது. நாட்டில் முஸ்­லிம்­களின் அன்­றாட வாழ்வின் ஒவ்­வொரு படியும் மாறிப்­போகும் நிலை தோன்­றி­யது. நெருக்­கு­தல்கள், பார­பட்சம், நன்­றாக ஒழுங்­க­மைக்­கப்­பட்ட வெறுப்புப் பிர­சாரம் என்­பன பொது அரங்கில் புது வடிவம் பெற்­றன. முஸ்­லிம்­களை அரக்­கர்­க­ளாகக் காட்­டு­வ­திலும் அவர்­களை முற்­று­கை­யி­டப்­பட்ட ஒரு மன­நி­லைக்குள் தள்­ளு­வ­திலும் அவை முனைப்­புடன் செயற்­பட்­டன என்று ஒரு பத்தி எழுத்­தாளர் குறிப்­பிட்­டி­ருந்தார். இலங்­கையில் இன­வாதம் ஒரு புது அர்த்­தத்தைக் கண்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். எல்லா வகை­யிலும் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். பொது இடங்­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்­களில், வாடகைப் போக்­கு­வ­ரத்து வாக­னங்­களில் ஏன் வருடக் கணக்­காக தொழில் செய்த இடங்­க­ளிலும் கூட முஸ்­லிம்கள் வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யாத நெருக்­கு­தலை எதிர் கொள்ள வேண்டி இருந்­தது.

பொலிஸார் மீதும் பாது­காப்பு படை­யினர் மீதும் முஸ்­லிம்கள் நம்­பிக்கை இழந்­தனர். தங்­க­ளுக்கு அர­சாங்கம் பாது­காப்பு வழங்கும் என்ற நம்­பிக்­கை­யையும் அவர்கள் இழந்­தனர்.

இந்த சம்­ப­வங்­களின் நடுவே முஸ்­லிம்­களை மேலும் காயப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி சிறி­சேன சிறைக்குச் சென்று ஞான­சார தேரரைப் பார்­வை­யிட்டார். பின்னர் பொது மன்­னிப்பின் கீழ் அவரை விடு­த­லையும் செய்தார். அவரும் அவ­ரது தாயும் சந்­தித்த காட்­சி­களைக் கண்டு மகிழ்ந்தார். முஸ்­லிம்­களின் அளப்­ப­ரிய தியா­கத்தால் தான் இந்த நாடு இன்றும் பிள­வு­ப­டாமல் இருக்­கின்­றது என்­பதை அவர்கள் மறந்து விட்­டனர். ஒரு முறை பாது­காப்புப் படை­களின் பிர­தா­னி­யாக இருந்த அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரட்ண ஒரு வைப­வத்தில் பேசும் போது, எங்­க­ளது படைப்­பி­ரி­வு­களில் இருந்த முஸ்லிம் படை அதி­கா­ரி­களின் துணிச்­ச­லான செயற்­பா­டுகள் கார­ண­மாகத் தான் நாங்கள் இன்று உயி­ருடன் இருக்­கின்றோம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

எல்­ரீ­ரீ­யினர் தமது கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­தி­களில் இருந்து முஸ்­லிம்­களை விரட்­டி­ய­டிக்க முக்­கிய காரணம் அவர்கள் எல்­ரீ­ரீயின் கொள்­கை­க­ளுக்கு ஒத்­து­வ­ர­வில்லை என்­ப­த­துதான். எனவே முஸ்­லிம்­களைக் காப்­பாற்றும் பொறுப்பு சிங்­கள மக்­க­ளுக்கு உள்­ளது என்று அவர் மேலும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் இந்­தி­யாவின் உளவுச் சேவை­யான றோ செயற்­பட்­டுள்­ளது என்று பிபிசி யின் சிங்­கள சேவை ஏற்­க­னவே தகவல் வெளி­யிட்­டுள்­ளது. எனவே இந்த நாட்டில் இஸ்­லாத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக இடம்­பெற்­று­வரும் பூகோள ரீதி­யான சதியின் ஒரு அங்­க­மா­கவே உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.

எவ்­வா­றேனும் இவ்­வ­ளவு தீங்­கு­க­ளுக்கு மத்­தி­யிலும் ஒரு சாத­க­மான நிலையும் ஏற்­பட்­டது. நடு­நிலைப் போக்­குள்ள நியா­ய­வாத சிந்­தனை கொண்ட பௌத்த பிக்­குகள் பலர் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் தோன்றி முஸ்­லிம்கள் இந்த நாட்டின் பிரிக்க முடி­யாத ஒரு அங்கம் என்ற கருத்­தையும் அவர்கள் தமது ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட வர­லாற்றில் இந்த நாட்­டுக்கு அளப்­ப­ரிய பங்­க­ளிப்­புக்­களை வழங்­கி­யுள்­ளனர் என்ற கருத்­தையும் துணிச்­ச­லாக முன்­வைத்­தனர். முஸ்­லிம்கள் மத்­தியில் இருந்து செயற்­பட்ட ஒரு சில கூலிப்­ப­டை­யி­ன­ருக்­காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் குற்றம் சுமத்தக் கூடாது என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைத்தனர்.

95 வீதத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக மைத்திரிக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த போது முஸ்லிம்கள் எதிர்பார்த்தது சமாதானத்தை மட்டுமே. ஆனால் அந்த நம்பிக்கை முற்றாகச் சிதறடிக்கப்பட்டது.

இந்­நி­லையில் பௌத்த சம­யத்தின் சமா­தானத் தூதை மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­வ­தற்குப் பதி­லாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரத்தை முன்­னெ­டுப்­பதில் மிகவும் பிர­ப­ல­மான அத்­து­ர­லியே ரதன தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் போராட தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­க­ளோடு இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இஸ்­லாத்தை உருக்­கு­லைப்­ப­தோடு மட்டும் அன்றி எல்லா சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளையும் ஒட்டு மொத்­த­மாக ஓரம் கட்டும் நட­வ­டிக்கை தொடர்ந்து 2019 ஆகஸ்ட்டில் தெரிவு செய்­யப்­பட்ட சிங்­கள பௌத்த அர­சாங்கம் என வர்­ணிக்­கப்­படும் இன்­றைய அர­சிலும் நீடிக்கின்றது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.