ஜனாஸாக்கள் நல்லடக்க விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

0 442

(ஆர்.ராம்)
கொரோனா தொற்­றுக்கு இலக்­கான முஸ்லிம் மக்­களின் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்யும் விட­யத்தில் பாகிஸ்தான் எந்­த­வி­த­மான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­க­வில்லை என்று வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் பேரா­சி­ரியர் அட்­மிரல் ஜயநாத் கொலம்­பகே தெரி­வித்தார்.

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் முஸ்­லிம்­களின் ஜஸாக்­களை கட்­டாய தக­னத்­திற்கு உட்­ப­டுத்­தாது நல்­ல­டக்கம் செய்ய வேண்டும் என்று உயர் மட்­டத்­த­லை­வர்­க­ளுக்கு அழுத்­தங்­களை வழங்­கி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இந்­நி­லையில், வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லா­ள­ரி­டத்தில் இது­கு­றித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், சுகா­தார திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் மேற்­கொள்ளும் தீர்­மா­ன­மொன்றை மாற்­றி­ய­மைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இல்லை. தொற்று நோய் பரவல் காணப்­படும் அசா­தா­ரண சூழலில் தீர்­மா­னங்­களை எடுத்தல் உள்­ளிட்ட அனைத்து அதி­கா­ரங்­களும் நிறைந்­த­வொரு அதி­கா­ரி­யாக இருப்­பவர் சுகா­தார திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரே ஆவார்.

கொரோ­னாவால் மர­ணிக்கும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்யும் தீர்­மா­னத்­தினை முற்­கூட்­டியே அறி­விப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் விரும்­பியே இருந்­தார்கள். ஆனால் சுகா­தா­ரத்­து­றை­யினால் நிய­மிக்­கப்­பட்ட தொழில்­நுட்பக் குழு ஆய்­வு­களை பூர­ண­மாக நிறைவு செய்து அறிக்கை சமர்ப்­பித்த பின்­னரே நிபந்­த­னை­க­ளு­ட­னான அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

இக் கால­கட்­டத்தில் சர்­வ­தேச ரீதி­யாக பல­த­ரப்­பட்ட நெருக்­க­டிகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பிட்ட இன­மொன்றின் உரி­மை­களை ஏன் வழங்­காது எமது அர­சாங்கம் உள்­ளது என்று கேள்வி எழுப்­பி­னார்கள். கண்­டனம் தெரி­வித்­தார்கள். அதே­போன்று தான் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானும் இந்த விடயம் சம்­பந்­த­மாக ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார். ஆனால் அவர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எமக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை.

அதே­நேரம், முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும் இறந்­த­வர்­களின் உட­லங்­களை அடக்கம் செய்­வதில் பிரச்­சினை காணப்­ப­ட­வில்லை. கிறிஸ்­தவ மக்­க­ளுக்கும் அவ்­வா­றான நிலை­மை­கள்தான் இருந்­தன. இத­னை­வி­டவும், பௌத்த, இந்து மக்­க­ளுக்கும் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை உட­ன­டி­யக தகனம் செய்ய வேண்­டிய நிலை­மைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. தொற்று நோய் பரவல் கார­ண­மா­கவே அவ்­வி­த­மான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியமாகும்.

தீர்மானங்களை எடுக்கும் விடயத்தில் எவ்விதமான அரசியல் நோக்கங்ளும் காணப்படவில்லை. அதேபோன்று ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு சாதகமான வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நாம் இவ்விதமான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.