ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி ஓ.ஐ.சி மற்றும் முஸ்லிம் லீக் பாராட்டு

ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றியும் தெரிவிப்பு

0 433

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இலங்கை அரசு கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­மைக்கு இஸ்­லா­மிய நாடு­களின் ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு (OIC) மற்றும் உலக முஸ்லிம் லீக் (MWL) என்­பன இலங்கை அர­சாங்­கத்­திற்கு நன்­றி­யையும் பாராட்­டு­க­ளையும் தெரி­வித்­துள்­ளன.

இது தொடர்பில், இஸ்­லா­மிய நாடு­களின் ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் “ இஸ்­லா­மிய நாடு­களின் ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பைச் சேர்ந்த நாடு­களின் தூது­வர்­களும், உயர்ஸ்­தா­னி­கர்­களும் கொவிட் 19 தொற்று நோயினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்கள் தகனம் மாத்­திரம் செய்­யப்­பட வேண்டும் என்ற உங்­க­ளது தீர்­மானம் குறித்து மீள் பர­சீ­லனை செய்­யு­மாறு நாம் ஏற்­க­னவே கோரி­யி­ருந்தோம்.

தற்­போது கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்கள் தகனம் அல்­லது அடக்கம் செய்­யலாம் என 25.02.2021 இல் வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலால் நாம் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்’’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை இலங்கை அர­சாங்­கத்தின் அடக்கம் செய்ய அனு­ம­திக்கும் தீர்­மா­னத்தை வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன, உலக முஸ்லிம் லீக்கின் (MWL) செய­லாளர் நாயகம் கலா­நிதி மொஹமட் பின் அப்துல் கரீம் அல் ஈசாவை தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­கொண்டு தெரி­வித்தார்.

இலங்கை அர­சாங்கம் உலக முஸ்லிம் லீக்கின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். இது உலக முஸ்லிம் லீக்­குக்கு இடை­யி­லான நட்­பு­றவை பலப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் உலக முஸ்லிம் நாடு­க­ளுக்கும் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் இடையில் உற­வி­னையும் மேலும் பல­ம­டையச் செய்­துள்­ளது எனவும் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம், இலங்கை உலக முஸ்லிம் லீக்கின் கோரிக்­கையை ஏற்று முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதை நிறுத்தியதற்காகவும், அதற்குப் பதிலாக அடக்கம் செய்வதற்-கு அனுமதி வழங்கியதற்காகவும் இலங்கை அரசுக்கு நன்றி பாராட்டினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.