ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நீதியாக அமுல்படுத்தப்படுமா?

0 2,484

சுமார் 11 மாத கால போராட்­டங்­களின் பின்னர் இலங்கை முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட உரி­மை­யொன்று மீளக் கிடைக்கப் பெற்­றுள்­ளது. இதற்­க­மைய கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் உல­கி­லுள்ள ஏனைய நாடு­களைப் போன்று இலங்­கை­யிலும் அடக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைக்கு ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்­தி­லுள்ள சூடு­பத்­தி­ன­சே­னையில் அதற்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்கர் காணியில் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன. இருப்­பினும் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் இதற்­கான இடங்­களை அடை­யாளம் காணும் பணிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அது­வரை ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தில் நாட்டின் எந்தப் பகு­தி­யையும் சேர்ந்த ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடியும்.

உண்­மையில் இப் பணியில் முன்­னிற்கும் ஓட்­ட­மா­வடி பிர­தேச மக்­களும் அதி­கா­ரி­களும் பாது­காப்புப் படை­யி­னரும் பாராட்­டுக்­கு­ரி­ய­வர்கள். எந்­த­வித எதிர்­பார்ப்­பு­க­ளு­மின்றி, முஸ்லிம் சமூ­கத்தின் அடிப்­படை உரி­மை­யொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக, கொவிட் தொற்று அபா­யங்­க­ளையும் புறந்­தள்ளி அவர்கள் இப் பணியில் ஈடு­ப­டு­கின்­றனர். இந்த உய­ரிய பணியில் ஈடு­ப­டு­வோ­ருக்­காக இலங்கை முஸ்­லிம்கள் அனை­வரும் பிரார்த்­திக்க கட­மைப்­பட்­டுள்­ளனர்.

ஒரு­வாறு ஜனாஸா அடக்க உரிமை மீளக் கிடைத்­துள்­ளது என முஸ்­லிம்கள் நிம்­மதிப் பெரு­மூச்சு விட்ட மறு­க­ணமே மேலும் பல தீர்­மா­னங்கள் அர­சாங்க தரப்­பி­லி­ருந்து இடி­யாக வந்­தி­றங்கத் தொடங்­கி­யுள்­ளன.

முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்குத் தடை, புர்­கா­வுக்குத் தடை, இஸ்­லா­மிய புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்ய கெடு­பி­டிகள், மத்­ர­ஸாக்­களை மூடு­வ­தற்­கான கோரிக்­கைகள் என புதிய புதிய கதை­யா­டல்கள் தற்­போது சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ளன. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை முன்­வைத்தே இக் கதைகள் மேற்­கி­ளம்­பி­யுள்­ளன. நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர இது தொடர்­பான மேலும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட விப­ரங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

முஸ்லிம் சமூ­கத்­தினுள் ஊடு­ரு­வி­யுள்­ள­தாக கரு­தப்­படும் அடிப்­ப­டை­வாத சிந்­த­னை­களை துடைத்­தெ­றி­வ­தற்கே இந்த நட­வ­டிக்­கைகள் என அமைச்சர் குறிப்­பிட்­டி­ருந்தார். மாறாக முஸ்லிம் சமூ­கத்தை அடக்கி ஒடுக்­கு­வது எமது நோக்­க­மல்ல என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

முஸ்லிம் சமூ­கத்­தினுள் அவ்­வா­றான சக்­திகள் இன்­னு­மி­ருப்பின் அவர்­களை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்ள வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும். அதற்குத் தேவை­யான முழு ஒத்­து­ழைப்­பு­க­ளையும் கடந்த காலங்­களைப் போன்றே எதிர்­வரும் காலங்­க­ளிலும் வழங்க முஸ்­லிம்கள் தயா­ரா­க­வே­யுள்­ளனர். ஆனால் அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிக்­கிறோம் என்ற பெயரில் எந்­த­வித சம்­பந்­த­மு­மில்­லாத அப்­பாவி மக்­க­ளையும் அமைப்­பு­க­ளையும் தண்­டிப்­ப­தற்கு அர­சாங்கம் முனையக் கூடாது.

ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் நாட்டின் இன வன்­மு­றை­க­ளுக்கு வித்­திட்ட பெளத்த கடும்­போக்கு அமைப்­பு­க­ளையும் தடை செய்ய வேண்டும், அதன் முக்­கி­யஸ்­தர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற சிபா­ரி­சுகள் பிர­தா­ன­மாக உள்­ளன. ஆனால் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என அர­சாங்கம் பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­துள்­ளது. அமைச்சர் சரத் வீர­சே­கர தனது பாரா­ளு­மன்ற உரையில் பெளத்த அமைப்­புகள் பற்றி ஒரு வார்த்­தை­யேனும் குறிப்­பி­ட­வில்லை.

தற்­போது ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்ள பெளத்த அமைப்­புகள் குறித்த பரிந்­து­ரை­க­ளுக்கு எதி­ராக சம்­பந்­தப்­பட்ட அமைப்­புகள் வீதிக்கு இறங்­கி­யுள்­ளன. நேற்­றைய தினம் சுதந்­திர சதுக்­கத்தில் பொது­பல சேனா அமைப்பும் பௌத்த பிக்­குகள் சங்­கமும் இணைந்து சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் ஒன்­றையும் நடாத்­தி­யுள்­ளன. தினமும் ஊட­கங்கள் முன்­தோன்றி ஞான­சார தேரர் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான வெறுப்பை விதைத்து வரு­கிறார். இது ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கே முர­ணா­ன­தாகும். அவ­ரது கருத்­துக்கள் அனைத்தும் தாங்கள் சட்­டத்­திற்கு அப்­பால்­பட்­ட­வர்கள் என்­ப­தையே சுட்­டி­நிற்­கின்­றன.

என­வேதான் அர­சாங்கம் முஸ்லிம் மத்தியில் உள்ள அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துகின்ற அதேநேரம் பெளத்த அடிப்படைவாதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதுவே ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாகும்.
அதைவிடுத்து, தனது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அப்பாவி முஸ்லிம்களைத் தண்டிப்பதும் உண்மையான அடிப்படைவாதிகளை பாதுகாப்பதும் எதிர்காலங்களில் மேலும் பல அழிவுகளுக்கே வழிவகுக்கும் என்பதைச் சொல்லிவைக்க விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.